காண்டாக்டில் சேவ் செய்யாமலே வாட்ஸ்அப் க்ரூப்பில் மற்றவர்களை சேர்ப்பது எப்படி?

பயனுள்ள தகவல்கள்

பயனுள்ள தகவல்கள் (Useful Information In Tamil) – காண்டாக்டில் சேவ் செய்யாமலே வாட்ஸ்அப் க்ரூப்பில் மற்றவர்களை சேர்ப்பது எப்படி?

உலகில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் குறுந்தகவல் செயலிதான் வாட்ஸ்அப். இந்த வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ், வீடியோ சாட், க்ரூப் சாட் என்று பல்வேறு அம்சங்கள் நிறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக க்ரூப் சாட் அம்சம் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் சாட் செய்ய பயனுள்ளதாக இருக்கிறது.

சரி வாங்க காண்டாக்டில் சேவ் செய்யாமலே வாட்ஸ்அப் க்ரூப்பில் மற்றவர்களை சேர்ப்பது எப்படி? என்பதை பயனுள்ள தகவல்கள் சிலவற்றை தெரிந்து கொள்வோம் வாங்க..!

Android Tricks செல் போனில் பேசும் போதே நம்பரை சேவ் செய்வது எப்படி?

பயனுள்ள தகவல்கள் (Useful Information In Tamil) – க்ரூப் அட்மின்கள்:

வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் உருவாக்கும் வழிமுறை நம்மில் பலரும் அறிந்த ஒன்று தான். க்ரூப் உருவாக்கப்பட்டதும், காண்டாக்ட் பட்டியலில் இருப்பவர்களை அதில் சேர்க்க வேண்டும். இதற்கு முதலில் க்ரூப் அட்மின்கள் காண்டாக்ட்களை தங்களது மொபைலில் சேமிக்க வேண்டும்.

காண்டாக்ட்களை சேமிக்காமல், க்ரூப்பில் மற்றவர்களை சேர்த்துக் கொள்ளும் வழி இருந்தால் எப்படி இருக்கும். உண்மையில் இவ்வாறு செய்ய ஒரு வழிமுறை இருக்கிறது. புதிய அப்டேட்டில் (whatsapp update) வாட்ஸ்அப் க்ரூப் இன்வைட் லின்க் எனும் அம்சத்தை சேர்த்து இருக்கிறது.

இதை பயன்படுத்தி அட்மின்கள் க்ரூப்களுக்கு மற்றவர்களை சேர்க்க முடியும். இவ்வாறு செய்ய குறிப்பிட்ட காண்டாக்ட்டை மொபைலில் சேமிக்க வேண்டிய அவசியம் இல்லை.

பயனுள்ள தகவல்கள் (Useful Information In Tamil) – புதிய அப்டேட் (whatsapp update):

1. whatsapp update – இந்த அம்சத்தை பயன்படுத்த ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

2. whatsapp update – இன்வைட் லின்க் உருவாக்க பயனரிடம் அட்மின் உரிமைகள் இருக்க வேண்டும்.

பயனுள்ள தகவல்கள் (Useful Information In Tamil) – பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

வாட்ஸ்அப் மெசஞ்சர் செயலியை ஹோம் ஸ்கிரீன் அல்லது லான்ச்சரில் இருந்து திறக்க வேண்டும்.

க்ரூப் கான்வர்சேஷன் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

இனி திரையின் வலதுபுறம் மேல்பக்கம் இருக்கும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும்.

இனி க்ரூப் இன்ஃபோ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

கீழ்புறமாக ஸ்கிரால் செய்து இன்வைட் வியா லின்க் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

இதில் இன்வைட் வழங்கப்பட்டதை உறுதி செய்யும் குறுந்தகவல் தோன்றும், இதில் Send link via WhatsApp, Copy link, Share link as well as Revoke link போன்ற ஆப்ஷன்கள் இருக்கும்.

இறுதியில் நீங்கள் க்ரூப்பில் சேர்க்க வேண்டிய நபருக்கு அதனை அனுப்ப வேண்டும்.

இயர் போன் அதிகமாக பயன்படுத்துபவரா நீங்கள்?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழிநுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Useful Information In Tamil