ஆரோக்கிய குறிப்புகள் – நகை அணிவதால் உடலுக்கு இத்தனை நன்மைகளா..?

ஆரோக்கிய குறிப்புகள்

நகை அணிவதால் உடலுக்கு இத்தனை ஆரோக்கிய நன்மைகளா (Health Benefits Of Jewelry)..?

ஆரோக்கிய குறிப்புகள் – நகைகள் அணிவது நமது பாரம்பரித்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. உடலின் ஒருசில முக்கியப்பகுதிகளுக்கென தனித்தனியான நகைகள் உள்ளன. இவை அழகிற்காக மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்காகவும் அணியப்படுகின்றன.

அந்த வகையில் வெள்ளி, தங்கம், நவரத்தினங்கள் போன்ற நகைகளை அணிவதால் உண்டாகும் நன்மைகளை பற்றி இந்த பகுதியில் காணலாம்.

இதையும் படிக்கவும்  –>  கருத்துபோன பழைய நகையை இப்படி செய்தால் புது நகையாக மாறிவிடும்..!

சரி நகை மற்றும் நவரத்தினம் அணிந்துகொள்வதினால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..!

ஆரோக்கிய குறிப்புகள்  – வெள்ளி பயன்கள் (silver benefits for health):

வெள்ளி நகைகள் நமது ஆயுளை விருத்தியடைய செய்யக்கூடியவை. நமது உடலின் சூட்டை அகற்றி உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. குழந்தைகளுக்கு அதிக முத்துக்களை கொண்ட கொழுசு அணிந்து விடுவதால், அவர்கள் உள்ள இடத்தை எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது.

இந்த வெள்ளி கொலுசு குதிக்கால் நரம்பினை தொட்டு கொண்டிருப்பதால் குதிக்கால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது.

வெள்ளி நகை அணிந்துகொள்வதினால் உடலில் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும், இரத்த நாளங்கள் மற்றும் எலும்பின் வலிமைகளை அதிகரிக்கிறது, மேலும் உடல் வலிக்கு நிவாரணம் அளிக்கின்றது.

உடல்நலம் குறிப்புகள் – பெண்கள் கொலுசு மட்டும் ஏன் வெள்ளியில் அணிகின்றனர்?

அனைத்து நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், கொலுசை மட்டும் தங்கத்தில் அணிவதில்லை, அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், தங்கத்தில் மகாலட்சுமி குடியிருப்பதால், அதனை காலில் அணியக்கூடாது என்பதால் தான். காலில் அணியும் எல்லா நகைகளும் வெள்ளியில் தான் அணிய வேண்டும்.

ஆரோக்கிய குறிப்புகள்  – செப்பு காப்புகள் (Copper benefits for health)

செப்பு காப்புகள், மூட்டு வலிகளை குறைக்கிறது. எலும்பு சார்ந்த வலி இருப்பவர்கள் செப்பு காப்பு அணிந்து வந்தால் நல்ல தீர்வு காணலாம்.

உடல்நலம் குறிப்புகள் தங்கம் (health benefits of jewelry)

தங்க நகை அணிவதால் வாழ்நாள் கூடும் என்ற நம்பிக்கை பழங்காலம் தொட்டே நிலவி வருகிறது. இதில் இருக்கும் நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் தன்மை தான் இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. பதட்டத்தை குறைத்து, மன தைரியத்தை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக் கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகு அதிகரிக்கும் ஆற்றலுள்ளது. ஆபரணங்கள் அணிவதால் நோய்கள் மறைமுகமாக கட்டுப்படுத்தப்படுகின்றன. தங்கம் மட்டுமின்றி வெள்ளி, முத்து, பவளம் போன்ற நகைகளை அணிவதாலும் நன்மைகள் உண்டாகிறது.

வர்ம புள்ளிகள் நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது. வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் மட்டுமே ஏற்றது.

ஆரோக்கிய குறிப்புகள் முத்து (pearl benefits in tamil)

ஆரோக்கிய குறிப்புகள் – முத்து: செரிமானம், இதயம் மற்றும் கருவுறுதல் போன்ற கோளாறுகளிலிருந்து நிவர்த்தியடைய உதவுகிறது.

உங்கள் கோவத்தை குறைக்கவும், உணர்சிகளை கட்டுப்படுத்தவும் கூட முத்து உதவும். முத்துமாலை அணிவதால் இந்த நன்மைகளை எல்லாம் கிடைக்க பெறலாம்.

இதையும் படிக்கவும்–> கரப்பான் பூச்சி, எறும்பு, வண்டு, எலி, பல்லி, மூட்டை பூச்சி வராமல் இருக்க இதை மட்டும் செய்யுங்க..!

உடல்நலம் குறிப்புகள் கார்னட்டின் – (Garnet health benefits)

 

நவரத்தின கற்கள் உங்கள் வாழ்க்கையில் ஓர் தாக்கத்தை ஏற்படுத்தும் என நமது மூதாதையர் காலத்தில் இருந்து கூறப்பட்டு வருகிறது.

இது, தீய எண்ணங்களை அழிக்கவும், நன்மையை அதிகரிக்கவும் செய்யும் என்று நம்பப்படுகிறது. கார்னட்டின் கற்கள் சக்தியை அதிகரிக்க தூண்டி தன்னம்பிக்கையை வளர்க்க உதவும் என்று கூறுகிறார்கள்.

ஆரோக்கிய குறிப்புகள் அம்பர் – (Amber health benefits)

ஆரோக்கிய குறிப்புகள் பண்டைய காலத்திலிருந்தே அம்பர், கழுத்து, தலை, மற்றும் தொண்டை வலிகளுக்கான நிவாரணியாக பயன்படுத்தி வரப்பட்டுள்ளது.

அம்பரில் நெக்லஸ் அணிவது பதட்டம், மயக்கம் போன்றவற்றையும் குறைக்க உதவுமாம்.

உடல்நலம் குறிப்புகள் செவ்வந்தி கல் – (Amethyst stone health benefits)

செவ்வந்தி கல் என கூறப்படும் “Amethyst” உங்கள் மனதை சாந்தமாக வைத்துக்கொள்ள உதவுமாம். மன நிம்மதி இல்லாதவர்கள் இதை அணியலாம்.

ஆரோக்கிய குறிப்புகள் இந்திரநீல கல் – Aquamarine stone health benefits

ஆரோக்கிய குறிப்புகள் – இந்திரநீல கல், செரிமானம், கண் மற்றும் பற்களின் வலிமையை சீராக வைத்துக்கொள்ள உதவுமாம்.

இது எதிர்மறை எண்ணங்களை குறைத்து நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க உதவுகிறது. துயரத்தை துடைத்து, இன்பம் பெருக வைக்குமாம் இந்திரநீல கல்.

இதையும் படிக்கவும்–> பித்தளை பாத்திரம் பளபளக்க – Best Trick To Clean Bronze

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Useful Information In Tamil