கருத்துபோன பழைய நகையை இப்படி செய்தால் புது நகையாக மாறிவிடும்..!

Advertisement

பழைய நகை ஜொலிக்க என்ன செய்யலாம் 

சில பெண்கள் தினமும் கழுத்தில் ஒரு சில தங்க நகைக்களை அணிந்து கொள்வார்கள், அது சில வருடங்கள் ஆனபிறகு அந்த நகையின் நிறம் மங்கியோ அல்லது கருத்து போகியோ இருக்கும். அதற்காக கடைகளுக்கு சென்று நகைக்களை பாலிஸ் செய்து கொள்வார்கள். இருப்பினும் கடைகளுக்கு சென்று நகைகளை பாலிஸ் செய்வதற்கு பதிலாக நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தி நம் பழைய தங்க நகைகளை பாலிஸ் செய்து விட முடியும்.

சரி வாருங்கள் மங்கி போன பழைய தங்க நகைகளை எப்படி பாலிஸ் செய்யலாம் என்பதை பற்றி இப்போது இந்த பகுதியில் நாம் காண்போம் வாருங்கள்..!

உப்பை வைத்து 10 சுலபமான டிப்ஸ்..!

பழைய தங்க நகைகளை பாலிஸ் செய்யும் முறை:

தேவையான பொருட்கள்:

  1. பேக்கிங் சோடா – 1/2 ஸ்பூன்
  2. டிட்டர்ஜன்ட் பவுடர் – ஒரு ஸ்பூன்

பாலிஸ் செய்யும் முறை (gold jewelry cleaner):

ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள்.

பின்பு அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடேற்றுங்கள்.

பிறகு அவற்றில் 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடா, ஓரு ஸ்பூன் டிட்டர்ஜன்ட் பவுடர் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.

பின்பு அவற்றில் பழைய நகையை போட்டு நான்கு முறை கொதிக்கவிட்டு, அடுப்பை ஆப் செய்து விடுங்கள்.

அடுப்பில் இருந்து இறக்கியவுடனே நகையை எடுத்து விடாதீர்கள், சிறிது நேரம் கழித்து சூடு நன்றாக ஆறிய பிறகு நகையை எடுத்து பாருங்கள், நகை பாலிஸ் செய்தது போல் தகதகவென்று ஜொலிஜொலிக்கும்.

நச்சுனு 10 பயனுள்ள சமையலறை டிப்ஸ் – உங்கள் நேரத்தை சேமிக்க

குறிப்பு:

டிட்டர்ஜன்ட் பவுடருக்கு பதில், பாத்திரம் கழுவும் லிக்யுட் அல்லது துணி துவைப்பதற்கு பயன்படுத்தும் லிக்யுட் பயன்படுத்தி கொள்ளலாம்.

அதுபோல் தங்களது வீட்டில் வாஷிங் சோடா இருந்தால் அவற்றவையும் பயன்படுத்தி கொள்ளலாம். இருப்பினும் நகை (gold jewelry cleaner) பாலிஸ் செய்வதற்கு பேக்கிங் சோடா மற்றும் டிட்டர்ஜன்ட் பவுடர் ஆகிய இரண்டும் இருந்தால் போதும். பழைய நகையை (gold jewelry cleaner) பாலிஸ் செய்வதற்கு.

இது போன்ற பயனுள்ள தகவல்களை பெறுவதற்கு பொதுநலம் பகுதியை பார்வையிடவும்.

பித்தளை பாத்திரம் பளபளக்க – Best Trick To Clean Bronze

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement