ஏசி பொருத்தாமல் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருப்பது எப்படி? பயனுள்ள தகவல்கள்

பயனுள்ள தகவல்

பயனுள்ள தகவல்கள் ஏசி பொருத்தாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது எப்படி? (How To Cool a Room Without Ac In Summer)..!

Useful Information In Tamil:

இந்த சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் சிலர் வீட்டில் ஏசியை எப்போதும் பயன்படுத்தி கொண்டே இருப்பார்கள். சில வினாடிகளில் வியர்த்து கொட்டிவிடும். எனவே நாம் வீட்டில் ஏசி பொறுத்தாமலே குளுமையாக வைத்து கொள்ள பல வழிகள் உள்ளது. அவற்றை பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க.

ஏசி இல்லாமல் நம் வீட்டை இயற்கையான முறையில் வீட்டை குளுமையாக வைத்து கொள்ள முடியும். அதாவது பெரும்பாலும் நாம் சில விஷயங்களை தவிர்த்து கொண்டாலே போதும் நம் வீட்டை குளுமையாக வைத்து கொள்ள முடியும்.

ஆன்லைனில் ஆதார் கார்டு லாக் செய்வது எப்படி?

சரி வாங்க இயற்கையான முறையில் வீட்டில் ஏசி பொருந்தாமல் குளுமையாக வைத்து கொள்வது எப்படி (How To Cool a Room Without Ac In Summer) என தெரிந்து கொள்வோம் வாங்க.

பயனுள்ள தகவல்கள் – வெப்பமாக இருக்க முதல் காரணமே மின்விசிறி தான்:

வீடு வெப்பமாக இருப்பதற்கு முதல் காரணமே மின்விசிறி தான். மின்விசிறியில் இருந்து காற்று வந்தாலும், அது வெப்பக் காற்று தான். பகல் முழுவதும் வெயிலில் மொட்டை மாடி உள்ளது.

மின்விசிறி போடும் போது, மொட்டை மாடியில் உள்ள வெப்பம் மிகவிரைவாக தரையிறங்குகிறது. இதனால் தான் இரவு நேரத்தில் மொட்டை மாடி குளிராக இருந்தாலும், வீட்டு அறையினுள் சூடாக இருக்கும். எனவே மொட்டை மாடியை குளிர வைக்க வேண்டும்.

பயனுள்ள தகவல்கள் – மொட்டை மாடியை முதலில் கவர் செய்ய வேண்டும்:

எனவே, முதலில் மொட்டை மாடியில் வெயில் நேரடியாக படுவதை முடிந்த அளவு கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு மொட்டை மாடி முழுவதும் தற்காலிகமாக வெள்ளை சுண்ணாம்பு அடிப்பது ஒரு சிறந்த வழியாகும்.

தற்போது மார்கெட்டில் குறைந்த விலையில், வெப்பத்தை கட்டுப்படுத்துவதற்கு என்றே பிரத்யோகமாக பெயிண்ட் கிடைக்கிறது. அதிலும் வெள்ளை பெயிண்ட் அடித்தால், வெயிலை பிரதிபலித்து விடும். இதனால் வெப்பம் தரையிறங்காமல் கட்டுப்படுத்தப்படுகிறது.

இது தவிர மாடியில் பசுமை குடில், தென்னை ஓலை, சாக்குப் பை ஆஸ்பெஸ்டாஸ் சீட் கொண்டு பரவலாக மாடியில் ஆங்காங்கு போடலாம். இவற்றில் விலைக்குத் தக்கவாறு தேர்ந்தெடுக்க வேண்டும். தென்னை ஓலை தீப்பிடிக்கக்கூடும். எனவே, அதில் அவ்வபோது நீர் ஊற்ற வேண்டும்.

IRCTC இணையதளத்தில் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?

பயனுள்ள தகவல்கள் – மின்விசிறி:

முடிந்த அளவு சீலிங் மின்விசிறிக்குப் பதிலாக, மேசை மின்விசிறியைப் பயன்படுத்தலாம். இதனால் ஜன்னலில் இருந்து வரும் இயற்கையான காற்றை நமது பக்கம் திருப்ப முடியும்.

முடிந்தால் டேபிள் பேன் பின்புறத்தில், சற்று தொலைவில் வாளி நீரை வைத்தால், இன்னும் குளிர் காற்று கிடைக்கும்.

சீலிங் மின்விசிறியைப் பயன்படுத்தும் போது, மாடி வெப்பம் ஈர்க்கப்பட்டு, வெப்பக் காற்று தான் வரும்.

பயனுள்ள தகவல்கள் – ஜன்னலில் , சுவற்றில் ஈரத் துணி:

வீட்டில் பழைய போர்வை இருந்தால், அதை தண்ணீரில் நனைத்து, ஜன்னலில் தொங்க விடலாம்.

இதனால் ஜன்னலின் வெளிப்புறத்தில் ஆவியாதல் நடக்கும். இயற்பியல் விதிப்படி, ஒருபுறம் ஆவியாதல் நடந்தால், மறுபுறம் குளிராவுதல் நடக்கும்.

எனவே, ஜன்னலில் ஈரமான போர்வை, துணிகளை தொங்க விடுவதன் மூலம் அறை முழுவதும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும்.

இதே போல் வீட்டு சுவற்றில் ஆணிகள் இருந்தால், அதிலும் தொங்க விடலாம்.

பயனுள்ள தகவல்கள் – உறங்குவதற்கு முன்:

இதே போல் இரவில் உறங்குவதற்கு முன்பு, படுக்கும் தரையில் சிறிது நீர் தெளிக்கலாம்.

ஈர துணிகளை சிறிது நேரம் விரித்து வைத்திருக்கலாம். இதனால், படுக்கும் போது தரை குளிர்ச்சியாக இருக்கும்.

பயனுள்ள தகவல்கள் – எக்ஸாஸ்ட் பேன் (Exhaust Fan)

வெளிப்புறத்தில் இருந்து வரக்கூடிய வெப்பத்தை ஒரளவு கட்டுக்குள் கொண்டு வரும் அதே வேளையில், வீட்டினுள் இருக்கும் வெப்பத்தையும் வெளியேற்ற வேண்டும்.

சந்தையில் 1,000 ரூபாயலிருந்து கூட Exhaust Fan கிடைக்கிறது. இதனை வீட்டு மேல் துவாரத்தில் பொருத்தி விட்டால், வெப்பக்காற்று வெளியேறும். வீடும் குளிர்ச்சியாக இருக்கும்.

காண்டாக்டில் சேவ் செய்யாமலே வாட்ஸ்அப் க்ரூப்பில் மற்றவர்களை சேர்ப்பது எப்படி?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழிநுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Useful Information In Tamil