லேப்டாப் சூடாவதை தடுப்பது எப்படி? பயனுள்ள தகவல்கள்..!

பயனுள்ள தகவல்கள்

லேப்டாப் சூடாவதை தடுப்பது எப்படி? சூப்பர் டிப்ஸ் ட்ரை பண்ணுக (How To Reduce Laptop Heat)..!

பயனுள்ள தகவல்கள் – சாதாரணமா இப்போது அனைவருமே லேப்டாப் அதிகமாக பயன்படுத்துகின்றனர், அந்த வகையில் லேப்டாப் தினமும் அதிக நேரம் பயன்படுத்தும் போது லேப்டாப் அதிகம் சூடாகும். இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு சில வழிகள் உள்ளது அவற்றை சரியாக பின்பற்றினாலே போதும் இந்த பிரச்சனையில் இருந்து நாம் விடுபட முடியும்..!

ஏசி பொருத்தாமல் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருப்பது எப்படி? பயனுள்ள தகவல்கள்

 

சரி வாங்க லேப்டாப் சூடாவதை எப்படி தடுக்கலாம் (Laptop Heating Problem Solution) என்பதை பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

லேப்டாப் சூடாவதற்கு சுற்றுசூழல் முதல் சாப்ட்வேர் வரையில் பல்வேறு காரணங்கள் உள்ளன. இருப்பினும் லேப்டாப் பயனாளர்கள் தினமும் சந்திக்கும் ஒரு தொந்தரவு தான் இந்த லேப்டாப் சூடாகுதல். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது.

அறை வெப்பநிலையில் தொடங்கி, லேப்டாப்பில் பயன்படுத்தப்படும் சாப்ட்வேர் வரையில் இதில் முக்கிய தொடர்பு உள்ளது.

குறிப்பாக ஏசி அறையில் இருந்து லேப்டாப்பை பயன்படுத்தும் போது, சூடாகுதல் ஓரளவு (Laptop Heating Problem Solution) கட்டுப்படுத்தப்படுகிறது. இருப்பினும் சூடாவதற்கு முக்கிய காரணங்களும், அவற்றை தடுப்பது எப்படி என்பது பற்றிய அடிப்படை காரணங்களையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

பயனுள்ள தகவல்கள் (Useful Information In Tamil) – லேப்டாப் ஃபேன்:

பயனர்கள் லேப்டாப் பயன்படுத்தும் போது அதன் Chip, IC, Circuit Board போன்றவைகளில் உருவாகும் வெப்பத்தை வெளியேற்றும் வகையில், சிறிய அளவிலான Motor Fan இயங்குகிறது. இந்த ஃபேன் லேப்டாப்பின் பக்கவாட்டில் அமைந்திருக்கும்.

இதில் சில நேரங்களில் தூசுக்கள் சேர்ந்து கொண்டு, வெப்பக்காற்று வெளியேறும் துளைகளை அடைத்துக் கொள்ளும்.

இதன் காரணமாக வெப்பம் வெளியேற முடியாமல், லேப்டாப் சூடாகிறது. எனவே, அடிக்கடி லேப்டாப்பை கழற்றி உள்ளே தூசுக்களை அகற்ற வேண்டும். இதற்கென laptop vacuum cleaner வாங்கி பயன்படுத்தலாம்.

பயனுள்ள தகவல்கள் (Useful Information In Tamil) – லேப் டெஸ்க் (Lap Desk):

அதேபோல் குறிப்பாக லேப்டாப்பை அப்படியே மேசையில் வைத்து பயன்படுத்தும் போது, அதன் அடியில் காற்று போக வழியில்லாமல் இருக்கும்.

இதன் காரணமாக கூட லேப்டாப் சூடாகலாம். இதற்கு லேப்டாப் அடியில் காற்று சென்று வர வசதியாக, ஏதேனும் இரண்டு பொருட்களை வைத்து, அதன் மேல் லேப்டாப் வைத்து பயன்படுத்தலாம்.

பயனுள்ள தகவல்கள் (Useful Information In Tamil) – லேப்டாப் கூலர் (laptop cooling pad):

இதே போல், லேப்டாப் கூலிங் பேட் என பிரத்யேக கேட்ஜெட் ஆன்லைனிலும், கம்ப்யூட்டர் கடைகளிலும் கிடைக்கிறது. இது USB யிலிருந்து வரும் மின்சக்தி மூலமாக இயங்கும்.

இந்த ஃபேனை லேப்டாப் அடியில் வைத்தால் போதும். லேப்டாப்பின் உள்ளே உருவாகும் வெப்பக்காற்றை அப்படியே அடியின் வழியாக வெளியேற்றிவிடும்.

பயனுள்ள தகவல்கள் (Useful Information In Tamil) – சாப்ட்வேர்:

அதேபோல் ஒரே நேரத்தில் பல சாப்ட்வேர், அப்ளிகேஷன் ஓபனாக இருக்கும் போது, சூடு அதிகமாக இருக்கும். எனவே, அதிக மெமரி கொண்ட சாப்ட்வேர்களை முடிந்த வரையில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

ஒரு வேளை அவ்வாறு முக்கியமான சாப்ட்வேர், அதிக மெமரி கொண்டதாக இருந்தால், அதை பயன்படுத்தும் போது, மற்ற சாப்ட்வேர்களை பயன்படுத்தக்கூடாது.

பயனுள்ள தகவல்கள் (Useful Information In Tamil) – சுற்றுச்சூழல்:

லேப்டாப் பயனர்கள் முடிந்த வரையில் வெப்பம் குறைவாக இருக்கம் இடத்தில் இருந்து லேப்டாப்பை பயன்படுத்த வேண்டும்.

பகலில் நல்ல வெயில் அடிக்கும் போது, ஜன்னலுக்கு அருகில் வெயிலின் அனல் படும் வகையில் லேப்டாப் பயன்படுத்தக் கூடாது.

எனவே, சுற்றுச்சூழலையும் கருத்தில் கொண்டு லேப்டாப் பயன்படுத்த வேண்டும்.

WhatsApp புதிய அப்டேட்! பயனுள்ள தகவல்கள்..!

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழிநுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Useful Information In Tamil