IRCTC இணையதளத்தில் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? | IRCTC link aadhaar card

Advertisement

IRCTC இணையதளத்தில் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? 

IRCTC link aadhaar card:- ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய, ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் புக் செய்யும் வகையில் எளிமையான வழிமுறையை ரயில்வே அளிக்கிறது. இதனால், ஆன்லைன் முன்பதிவு அதிகரித்து வருகிறது.

ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வரம்பை அதிகப்படுத்த ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

இனி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய கவுண்டர்களில் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்க ஆன்லைன் புக்கிங் வசதி உதவுகிறது. கட்டணம் செலுத்தும்போது பல ஈ வாலட் நிறுவனங்கள் கேஷ்பேக் சலுகை தருவதால் லாபகரமாகவும் அமைகிறது.

மத்திய அரசு காகித பயன்பாட்டை குறைக்கும் வகையில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவை ஊக்குவிக்கிறது. இணையதளம் வழியாகவும் மொபைல் ஆப் வழியாகவும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதிகள் உள்ளன.

ஆன்லைன் முன்பதிவை விரும்புகிறவர்கள் ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஒரு கணக்கு தொடங்க வேண்டும். பெயர், முகவரி, மொபைல் எண், ஈமெயில் ஆகியவற்றை அடிப்படை தகவல்களாக தெரிவித்து கணக்கு தொடங்கலாம்.

சாதாரணமாக ஒரு கணக்கு மூலம் மாதத்துக்கு அதிகபட்சம் 6 டிக்கெட் மட்டும் ஆன்லைனில் புக் செய்ய முடியும். ஆனால், ஆதார் எண்ணை ஐஆர்சிடிசி இணையதள கணக்குடன் இணைத்தால் மாதம் 12 டிக்கெட் வரை ஆன்லைனில் புக் செய்யலாம்.

எனவே ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி (IRCTC link aadhaar card) எனப் பார்க்கலாம்.

இயர் போன் அதிகமாக பயன்படுத்துபவரா நீங்கள்?

IRCTC இணையதளத்தில் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? தெரிந்து கொள்வோம் வாங்க..!

1. ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஐடி மற்றும் பாஸ்வேட் டைப் செய்து Captcha எழுத்துக்களையும் டைப் செய்து உள் நுழைய வேண்டும்.

2. நுழைந்த பின் My Account என்பதன் கீழ் Link your Aadhaar என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

3. இப்போது திறக்கும் திரையில் பெயர் (ஆதார் அட்டையில் உள்ளபடி) மற்றும் ஆதார் எண்ணை டைப் செய்து, டைப் செய்த விவரங்கள் சரியானவை என்பதை ஒப்புக்கொள்ளும் வகையில் கீழே உள்ள Check Box ஐ டிக் செய்துவிட்டு, Send OTP என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

4. ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு தற்காலிக ரகசிய குறியீட்டு எண் (OTP) கிடைக்கும். அந்த ஆறு இலக்க எண்ணை டைப் செய்து Verify OTP என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

5. புதிதாகத் தோன்றும் பக்கத்தில் ஆதார் விவரங்கள் தோன்றும். அந்த விவரங்களை ஒப்புக்கொள்வதற்கான Check Box ஐ டிக் செய்துவிட்டு, Update என்பதை கிளிக் செய்யலாம்.

6. ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஆதார் எண்ணை இணைக்கப்பட்டுவிட்டது என்ற தகவல் திரையில் தெரியும். OK என்பதை கிளிக் செய்தால் கணக்கிலிருந்து வெளியேறிவிடும்.

7. மீண்டும் ஐடி மற்றும் பாஸ்வேட் டைப் செய்து Captcha எழுத்துக்களையும் டைப் செய்து உள் நுழைந்து, My Account என்பதன் கீழ் Link your Aadhaar என்பதை கிளிக் செய்தால், ஆதார் எண் உறுதிசெய்யப்பட்டுவிட்டது என்ற தகவல் திரையில் காட்டப்படும்.

இவ்வாறு ஆதாரை ஐஆர்சிடிசி இணையதளத்துடன் இணைத்துவிட்டால் மாதம் 12 டிக்கெட் வரை ஆன்லைனில் புக் செய்யலாம்.

ஏசியை நம் வீட்டில் பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

 

இதுபோன்று பயன்னுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> பயனுள்ள தகவல்கள் 
Advertisement