WhatsApp புதிய அப்டேட்! பயனுள்ள தகவல்கள்..!

Advertisement

வாட்ஸ்அப் புதிய அப்டேட் (New Whatsapp Update – Useful Information In Tamil):

பயனுள்ள தகவல்கள் – அடிக்கடி போட்டோஸ் ஷேர் செய்பவர்களா நீங்கள்? அப்போ உங்களுக்கு தான் இந்த இனிய அப்டேட். இனி போட்டோஸ்களை வாட்ஸ்அப்பில் கண்னை மூடிக்கொண்டு ஷேர் செய்யலாம்.

வாட்ஸ்அப்பில் ஒருவருக்கு போட்டோ அனுப்புவதற்கு பதிலாக, இன்னொருவருக்கு மாற்றி அனுப்பி சிக்கலில் சிக்குவோர் பலர் உண்டு. இனி இது நடக்காதவாறு வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை கொண்டு வருகிறது.

அது என்ன வாட்ஸ்அப் புதிய அப்டேட் என்று இந்த பகுதியில் நாம் தெளிவாக படித்தறிவோம் வாங்க..!

பயனுள்ள தகவல்கள் – IRCTC இணையதளத்தில் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?

பயனுள்ள தகவல்கள் – வாட்ஸ்அப் புதிய அப்டேட் (New Whatsapp Update Useful Information In Tamil):

வாட்ஸ்அப் நிறுவனம் பயனாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, அவ்வபோது புதிய புதிய அப்டேட்டுக்களை வழங்கி கொண்டே வருகிறது.

சாதாரண மெசேஜ்  என்பதில் தொடங்கி, வீடியோ கான்ஃபிரசிங் கால் வரையில் வாட்ஸ்அப் வளர்ந்து உள்ளது.

மேலும், கூகுள் மேப் ஷேர் செய்வது, டாக்குமென்ட்ஸ், வீடியோஸ், ஸ்டேட்டஸ் ஷேர் என பல்வேறு வசதிகள் மிகக்குறுகிய காலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அந்தவகையில், பயனாளர்கள் மத்தியில் நீண்ட காலமாக ஒரு பிரச்சனைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.

பயனுள்ள தகவல்கள் – ஆன்லைனில் ஆதார் கார்டு லாக் செய்வது எப்படி?

அது தான் தவறாக வேறு ஒருவருக்கு மெசேஜ் அனுப்பி விடுவது. சாதாரணமாக மெசேஜ் அனுப்பும் போது இந்த சிக்கல் அவ்வளவு எளிதாக வராது. ஏனென்றால், யாருக்கு மெசேஜ் அனுப்புகிறமோ, அவர்களுடைய சேட்டிங் மட்டும் தான் நமக்கு திரையில் காட்டப்படும்.

ஆனால், போட்டோஸ், வீடியோஸ், டாக்குமென்ட்ஸ் போன்றவற்றை அனுப்பும் போது, அனுப்ப வேண்டிய நபருக்குப் பதிலாக, தவறுதலாக வேறொருவருக்கு அனுப்பி விடுகிறோம்.

இவ்வாறு போட்டோஸ் அனுப்பும் போது, எதிர்முனையில் இருப்பவர்களின் புரோபைல் பிக்சர் மேல் புறத்தில் வலது ஓரத்தில் காட்டப்படும். இருப்பினும் அது கவனத்துக்கு இல்லாத வகையில் அமைந்திருப்பதால், இந்த பிரச்சனை தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், யாருக்கு போட்டோஸ் அனுப்புகிறமோ அவர்களுடைய பெயர், ஆட்டோமெட்டிக்காக போட்டோவுக்கு கீழே கேப்ஷனில், கண்ணுக்கு நன்றாக தெரியும்படி வைப்பதற்கு வாட்ஸ்அப் நிறுவனம் முயற்சித்து வருகிறது.

சோதனை முயற்சியாக முதற்கட்டமாக வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் இந்த வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. நீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் பீட்டா 2.19.173 வெர்ஷனுக்கு அப்டேட் செய்தால், இதனை பார்க்க முடியும்.

இதில் வெற்றியடைந்த பிறகு, சாதாரண வாட்ஸ்அப் செயலிக்கும் கொண்டு வரப்படுகிறது.இதன் மூலம் யாருக்கு போட்டோஸ் அனுப்ப வேண்டுமோ, எந்த குழப்பமும் இல்லாமல் அவர்களுக்கு மட்டுமே போட்டோஸ் அனுப்பலாம்.

பயனுள்ள தகவல்கள் – காண்டாக்டில் சேவ் செய்யாமலே வாட்ஸ்அப் க்ரூப்பில் மற்றவர்களை சேர்ப்பது எப்படி?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழிநுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Useful Information In Tamil
Advertisement