புதிய பான் கார்டு விதிமுறைகள் என்னென்ன தெரியுமா? PAN Card new rules 2018-19
முன்பெல்லாம் பான் கார்டு என்றாலே பயந்து பின் செல்லும் நிலை மறைந்து, இப்போது பான் கார்டு இருந்தால் தான் வங்கி வாசலை மிதிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அட ஆமாங்க இனி பான் கார்டு இருந்தால் தான் வங்கி வாசலை மிதிக்க முடியுமாம். முன்பெல்லாம் அதிகமாக சம்மதிக்கக்கூடிய நபர்கள் மட்டும்தான் பான் கார்டு என்பதை பயன்படுத்தி கொண்டிருந்தனர். இப்போதோ பால் கார்டு போல, பான் கார்டையும் பயன்படுத்தக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. வருமான வரித்துறை அடிக்கடி பான் கார்ட்க்கு (pan card rules) உரிய விதிகளை மாற்றி கொண்டே இருக்கின்றனர். அதுவும் தற்போது பான் கார்டுக்கு (pan card rules) முக்கிய விதி மாற்றங்களை செய்துள்ளனர்.
மேலும் வங்கியில் 50,000 மேல் டிபாசிட் செய்ய வேண்டும் என்றால் இப்போது கட்டாயம் பான் கார்டு என்பது மிகவும் அவசியமாக உள்ளது. சரி வாங்க பான் கார்டுக்கு விதிக்கப்பட்டுள்ள 5 விதிகளை பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோம்.
ஆன்லைனில் ஆதார் கார்டு லாக் செய்வது எப்படி? |
பான் கார்டு விதிமுறைகள் 1:
pan card rules:- முன்னெல்லாம் நாம் அடிக்கடி அதாவது எப்போ வேண்டும் என்றாலும் பான் கார்டை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆனால் தற்போது அதற்கு ஒரு அதிரடி விதிகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது பான் கார்டு வேண்டும் என்றால் குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அதேபோல் விண்ணப்பித்தவுடன் உடனே பான் கார்டு நமக்கு கிடைத்துவிடாது. குறிப்பிட்ட காலத்திற்குள் தான் பான் கார்டு வழங்கப்படும்.
இதற்கான விதிகள் திருத்தப்பட்டுள்ளது அதாவது ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 31-க்குள் விண்ணப்பித்து விட வேண்டும். அதற்கு மேல் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள இயலாது.
பான் கார்டு விதிமுறைகள் 2:
இந்த பான் கார்டை யாரெல்லாம் முக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்றால் கட்டாயமாக நிறுவன இயக்குனர், பங்குதாரர், நிர்வாக இயக்குனர், டிரஸ்டி, எழுத்தாளர், நிறுவனர், தலைமை செயல் அதிகாரி, முதன்மை அதிகாரி, நிர்வாகிகள் என்று பொறுப்பில் இருப்பவர்கள் கட்டாயமாக இந்த பான் கார்டை வைத்திருக்க வேண்டும்.
பான் கார்டு விதிமுறைகள் 3:
மேலும் மொத்த விற்பனை, மொத்த வருமானம் ஆகிய இடங்களில் நிதி ஆண்டில் 5 இலட்சத்திற்கு மிகாமல் இருந்தாலும் கட்டாயமாக பான் கார்டு வைய்த்திருக்க வேண்டும்.
பான் கார்டு விதிமுறைகள் 4:
கணவரை பிரிந்து வாழ்கின்றவர்கள் பிள்ளைகள், பான்கார்டில் தங்களது தந்தையின் பெயரை குறிப்பிட தேவையில்லை, அவர்களது அன்னையின் பெயரை குறிப்பிடலாம் என்றும் அறிவித்துள்ளனர்.
பான் கார்டு விதிமுறைகள் 5:
pan card rules:- வங்கி கணக்கு துவங்கவோ, வருமான வரியை ரிட்டேன் பூர்த்தி செய்யவோ கட்டாயம் பான் கார்டு அவசியம் தேவை என்றும் அறிவித்துள்ளனர்.
இதுபோன்று பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Useful Information In Tamil |