வெள்ளி நகைகள் அணிவதால் பயன்கள்
வெள்ளி அணிவதால் ஏற்படும் நன்மைகள்:
நகைகள் என்பது தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது.
வெப்பத்தை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் மட்டுமே ஏற்றது. தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக் கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகு அதிகரிக்கும் ஆற்றலுள்ளது.
அதாவது நமக்கு நோய்கள் உருவாவதை தடுப்பதற்கு மருந்துகளை உபயோகிப்பதை விட நகைகளை நாம் அணிந்தால் அது நல்ல பயன் தரும். தங்கத்தில் என்று இல்லாமல் (முத்து, வெள்ளி போன்றவற்றில்) நாம் நகை அணிதல் நல்லது.
பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம். தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் நாம் காலில் அணியும் நகைகள் தங்கத்தில் அணிவதில்லை.
இதையும் படியுங்கள்–> ஆரோக்கிய குறிப்புகள் – தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் அணிவதால் பயன்கள் |
வெள்ளி பயன்கள்
அத்துடன் வெள்ளி நகைகள் நம் ஆயுளை விருத்தி செய்யக்கூடியவை. நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும். சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு கொலுசு அணிவித்து விடுகின்றோம்.
குழந்தைக்கு நடக்கும் போது எப்போதும் சங்கீதம் கேட்க வேண்டும் என்பதாலும் குடும்பத்தினருக்கு குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிப்பதற்கும் கொலுசு அணிவிக்கப்படுகிறது.
வெள்ளி கொலுசு குதிக்கால் நரம்பினை தொட்டு கொண்டிருப்பதால் குதிக்கால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது.
வெள்ளி நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத் தூண்டிவிடப்பட்டு நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்க உதவுகிறது என்றும் கூறப்படுகிறது.
சரி இப்போது நாம் வெள்ளி நகைகள் அணிவதால் பயன்கள் / வெள்ளி அணிவதால் ஏற்படும் நன்மைகள்பற்றி இப்போது நாம் படித்தறிவோம் வாங்க..!
வெள்ளி நகைகள் அணிவதால் பயன்கள் / வெள்ளி அணிவதால் ஏற்படும் நன்மைகள்
வெள்ளி நகை அணிவதால் நம் உடலில் உள்ள சூட்டை அகற்றி உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள பெரிதும் உதவுகிறது.
மேலும் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு உடல் சூடு அதிகமாக காணப்படும். இதற்கு அவர்களது உடல்கூறு தான் காரணம். இதற்காக தான் சிறுவயதிலிருந்தே பெண் குழந்தைகளுக்கு கொலுசு அணிவிக்கப்படுகிறது.
வெள்ளி நகைகள் அணிவதால் பயன்கள் / வெள்ளி அணிவதால் ஏற்படும் நன்மைகள் :1
ஆண்களை விட பெண்கள் அதிகம் உணர்ச்சி வசப்படுவார்கள். வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது.
வெள்ளி நகைகள் அணிவதால் பயன்கள் / வெள்ளி அணிவதால் ஏற்படும் நன்மைகள்:2
வெள்ளி கொலுசு அணிவதினால் அந்த நரம்பில் ஏற்படும் தூண்டுதல் பெண்களின் இடுப்பு பகுதியை உறுதியாகிறது.
இதன் காரணத்தினால் தான் பெண்கள் வெள்ளிக் கொலுசு அணியக் கூறப்படுகிறது.
வெள்ளி நகைகள் அணிவதால் பயன்கள் / வெள்ளி அணிவதால் ஏற்படும் நன்மைகள்:3
நமது திருமண சம்பிரதாயங்களில் மிக முக்கியமானது மெட்டி மாட்டுவது. முன்பு மெட்டி மாட்டுவது என்பது ஆண்களுக்கு மத்தியிலும் இருந்தது. காலப்போக்கில் ஆண்கள் மெட்டி மாட்டுவது மறைந்துவிட்டது.
இதையும் படியுங்கள்–>கருத்துபோன பழைய நகையை இப்படி செய்தால் புது நகையாக மாறிவிடும்..! |
வெள்ளி நகைகள் அணிவதால் பயன்கள் / வெள்ளி அணிவதால் ஏற்படும் நன்மைகள்:4
மெட்டி என்பதை நமது முன்னோர்கள் வெறும் சடங்காக மட்டும் வைத்திவிடவில்லை. மெட்டி அணிவது திருமணமான பெண் என்பதன் அடையாளத்தையும் தாண்டி சில அறிவியல் காரணமும் இருக்கின்றன.
வெள்ளி நகைகள் அணிவதால் பயன்கள் / வெள்ளி அணிவதால் ஏற்படும் நன்மைகள்:5
பொதுவாக மெட்டி இரண்டாவது விரல்லில் தான் அணிவார்கள், அந்த இரண்டாவது விரல்லில் இருந்து ஒரு நரம்பு கருப்பை மூலமாக இதயத்திற்கு செல்கின்றது.
வெள்ளி நகைகள் அணிவதால் பயன்கள் / வெள்ளி அணிவதால் ஏற்படும் நன்மைகள்:6
இந்த விரலில் மெட்டி அணிவதால் கருப்பை பலமாகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் பெண்கள் கர்ப்பக் காலத்தின் போது எந்த பிரச்சனையும் இருக்காது என்று கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்–>கரப்பான் பூச்சி, எறும்பு, வண்டு, எலி, பல்லி, மூட்டை பூச்சி வராமல் இருக்க இதை மட்டும் செய்யுங்க..! |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |