தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு..!

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் நன்மைகள்

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு (Thoppukaranam Benefits In Tamil)..!

தோப்புக்கரணம் போடுவது ஒரு காலத்தில் பள்ளிகளில் மிக சாதாரண விஷயம், குழந்தைகள் ஏதேனும் தவறு செய்தாலோ அல்லது வீட்டுப்பாடம் எழுத தவறினாலோ ஆசிரியர்கள் குழந்தைகளை தோப்புக்கரணம் போட சொல்வது வழக்கம். தேர்வு நேரத்தில் மாணவர்கள் பக்தி பரவசதுடன் பிள்ளையார் முன்பு தோப்புக்கரணம் போடுவார்கள்.

ஆனால் இன்று இந்தப் பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது. பிள்ளையார் முன்பு நின்று தோப்பு கரணம் போடுபவர்கள் கூட முழுமையாக தோப்பு கரணம் போடுவது கிடையாது. தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் நன்மைகள் தெரிந்து கொண்டு செய்தால் முழுப்பலனையும் அடைய முடியும்.

சிறுநீரக கல் வராமல் இருக்க சில டிப்ஸ்..!

 

சரி வாங்க இந்த பகுதியில் தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.

தோப்புக்கரணம் போடும் முறை:

இந்த தோப்புகரணம் போடும்போது வலது கை, இடது காதின் கீழ் பகுதியையும் இடது கை வலது காதின் கீழ் பகுதியையும் சற்று இருக்கமாக அழுத்தி பிடித்து முழுமையாக உட்கார்ந்து எழ வேண்டும். சுமார் 10 நெடிகள் உட்கார்து பின் எழ வேண்டும்.

தோப்புக்கரணம் வகைகள்:

  1. வலது கை இடது காதையும், இடது கை வலது காதை பிடித்து கால்கள் நேராக வைத்து செய்யலாம்.
  2. வலது கை இடது காதையும் இடது கை வலது காதை பிடித்து கால் பின்னலாக வைத்து செய்வது குசா தோப்புகரணம்.
  3. இருவர் சேர்ந்து செய்தல்: தன்னுடைய காதை எதிராளி பிடித்தும் எதிராளியின் காதை தான் பிடித்தும் செய்யலாம். இது கடினமான முறை.

எத்தனை தோப்புக்கரணம் போடலாம்:

நாள் ஒன்றுக்கு 15 முதல் 50 தோப்பு கரணம் போடலாம், பெண்கள் கர்ப்ப காலம் மற்றும் மாதவிடாய் காலத்தில் இந்த முறையை பின்பற்றுவதை தவிர்த்து கொள்ள வேண்டும்.

முதல் முறையாக செய்பவர்கள் 5 வரை செய்து, பிறகு அதிக படுத்தி கொள்ளலாம்.

தோப்புக்கரணம் நன்மைகள் (Thoppukaranam Benefits In Tamil):

இந்த தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் நன்மைகள்: தோப்புகரணம் போடும்போது காதுகளின் முக்கிய புள்ளிகளை அழுத்தி பிடித்து உட்கார்ந்து எழும் போது, காதில் அழுத்தி பிடித்த இடத்தில் மிகச் சிறிய அளவு அழுத்தம் மாறுபடும்.

100% ஒரே அழுத்தத்தில் தோப்பு கரணம் செய்ய முடியாது, அவ்வாறு தொடர்ந்து அழுத்ததில் மாற்றம் நிகழ்ந்து கொண்டு இருக்குபோது, காதில் பிடித்து உள்ள இடத்தில் உள்ள நரம்புகளின் வழியாக அப்பகுதிக்கான உடல் உறுப்பு தூண்டப்படுகிறது.

மூளையில் செல்கள் புத்துணர்சி

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் நன்மைகள்: தோப்புகரணம் போடும் போது மூளையில் முக்கிய மாற்றங்கள் நிகழ்கின்றன. இதனால் மூளை புத்துணர்ச்சியுடன் செயல்பட ஆரம்பிக்கின்றது.

மூளையின் வலது மற்றும் இடது பகுதி சமமான தூண்டுதல் அடைகின்றது மேலும் மூளைக்கு செய்திகளை பரிமாற்றம் செய்யும் காரணிகள் வலுப்பெறுகின்றது.

இந்த எளிய உடற்பயிற்சியின் மூலம் மூளையின் நியூரான் செல்கள் புத்துணர்சி அடைகின்றன.

எனவே மூலையில் செல்கள் புத்துணர்ச்சி அடைய தினமும் தோப்புக்கரணம் முடிந்த வரை போடுங்க.

மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள் மற்றும் காரணங்கள்..!

தோப்புக்கரணம் பயன்கள் – ஆட்டிசம் நோய் குணமாகும்

இந்த தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் நன்மைகள் ஆட்டிசம்( ஆட்டிசம் என்பது, குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு) போன்ற மன இறுக்கம் சம்மந்த பட்ட நோய்கள் கூட தோப்புகரணம் போடுவதால் குணமடைவதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இப்பயிர்ச்சியை தினமும் ஐந்து நிமிடம் செய்தால் வியக்கத்தக்க மாற்றங்களை காணலாம் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

தோப்புக்கரணம் பயன்கள் – மூளை செயல்திறன்

இந்த தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் நன்மைகள்: மந்தமான மனநிலையுள்ள மாணவர்களின் மூளை செயல்திறன், அவர்கள் காது நுனிகளில் தொடுதல் மூலமான பயிற்சிகளினால், மூளை நினைவு செல்களின் வளர்ச்சி தூண்டப்பட்டு, நினைவாற்றல் சக்தி, ஞாபக சக்தி, அதிகரிப்பது மட்டுமல்லாது அறிவு கூர்மையையும் வெளிபடுத்துகிறது.

தோப்புக்கரணம் பயன்கள் – மூளை பலம்

இந்த தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் நன்மைகள் இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் இரத்த ஓட்டம் சீராக செல்வதால் மூலை பலம் அடைகிறது.

தோப்புக்கரணம் பயன்கள் – நினைவாற்றல்

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் நன்மைகள்: தொடர்ச்சியாக செய்யச்செய்ய, மூளை, சுறுசுறுப்படைகிறது. விழிப்படைந்த நினைவு செல்களின் ஆற்றலால், மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கிறது, இதற்காகத்தான் ஆசிரியர்கள், மந்தமான மாணவர்களை, அறிவாற்றல் மிக்க மாணவர்களாக ஆக்கவே, தோப்புக்கரணம் போட சொன்னார்கள்.

மேலும் தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய தகவல்களை அடுத்த பகுதியில் நாம் தெரிந்து கொள்வோம். இந்த தகவல் தங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் தங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்திடவும். நன்றி..!

தைராய்டு பிரச்சனை எதனால் வருகிறது? இதற்கான சிச்சை? முழு விளக்கம்..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்