இயர் போன் அதிகமாக பயன்படுத்துபவரா நீங்கள்?

பயனுள்ள தகவல்கள் – Useful information..!

Side effects of earphones:  இன்றைய சூழ்நிலையில் இளம் பெண்கள், இளம் வாலிபர்கள், பணிக்கு செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனம் ஒட்டி செல்பவர்கள் என்று அனைவரும் அவர்களது காதுகளில் இயர் போன் நிச்சயம் இல்லாமல் இருக்காது. அவர்களுக்கான பதிவுதான் இது. நீங்கள் அதிகம் இயர் போன் பயன்படுத்துபவர்களா அப்படி என்றால் கண்டிப்பாக இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

இப்போது அனைவரும் எங்காவது பயணம் செல்லும்போது இயர் போன் இல்லாமல் எங்கும் செல்வதில்லை.  அதுவும் குறிப்பாக பஸ்ஸில் அதிக நேரம் பயணம் மேற்கொள்ளும்போது, காதில் இயர் போனை மாட்டி கொண்டு தனக்கு விருப்பமானவர்களுடன் பேசி கொண்டு அல்லது பாடல் கேட்டு கொண்டோ போவார்கள். ஆனால் இந்த பின் விளைவுகளை பற்றி யாரும் யோசிப்பது இல்லை, அதனை பற்றி எடுத்து கூறினாலும் அதனை அலட்சியமாக எடுத்துக்கொள்வார்கள்.

சரி இப்போது தொடர்ந்து ரொம்ப நேரம் இயர் போனை காதில் மாட்டி கொள்வதினால் ஏற்படும் மருத்துவ ரீதியான பாதிப்புகளை பற்றி தொடர்ந்து இந்த பகுதில் நாம் படித்தறிவோம் வாங்க…

வெள்ளி நகை அணிவதால் இத்தனை நன்மைகளா..!


பொதுவாக இயர் போனை மாட்டி கொண்டு
20 முதல் 30 நிமிடங்கள் வரை தான் அதிகபட்சம் பேச வேண்டும். அதற்கு மேல் நாம் காதில் இயர் போனை மாட்டி கொண்டிருந்தால், காதில் இருக்கும் கார்டிலெஜ் என்னும் மென்மையான எலும்பை இந்த இயர் போன் அழுத்த தொடங்கும்.பயனுள்ள  தகவல்கள் (Useful information) :1

பயனுள்ள  தகவல்கள் (Useful information) :2

Side effects of earphones : அத்துடன் தொடர்ந்து ஒலி அலைவரிசை வெவ்வேறு ஒளியளவில் காதுக்குள் அடைவதால் காதில் ட்ரம்  எனப்படும் சவ்வு கிழிவதற்கோ அல்லது தளர்வடைவதற்க்கோ காரணமாகிறது.

மேலும் காதுகளில் உள்ள மென்மையான பகுதிகளில் வீக்கங்களோ, சிறிய கொப்பளங்களோ ஏற்படுவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது.

ஆகவே இயர்  போன் கருவிகளை அதிகம் பயன்படுத்துவதை இன்றுடன் தவிர்த்து கொள்ளுங்கள்.

பயனுள்ள தகவல்கள் (Useful information) :3

Side effects of earphones : அதேபோல் தான் பயன்படுத்தியதை, மற்றவருடன் பகிரக் கூடாது. அதனால் கூட, பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

இயர் போனை தொடர்ந்து பயன்படுத்தாமல், ஒரு மணி நேரத்திற்கு ஐந்து முதல், 10 நிமிடம் இடைவெளி விட வேண்டும்.

பயனுள்ள தகவல்கள் (Useful information) :4

Side effects of earphones : சத்தம் அதிகமாக வைத்து கேட்பதை தவிர்க்கவும். 85 டெசிபலுக்கு மேல் தொடர்ந்து, 15 நிமிடம் பயன்படுத்தினால், கேட்கும் தன்மையை இழக்க நேரிடும்.

பயனுள்ள தகவல்கள்(Useful information) :5

Side effects of earphones : காதில் மாட்டும் போது, வெளிக்காற்று உள்செல்லும்படி ஒருபுறமாக சாய்த்து, பயன்படுத்த வேண்டும்.

நவீன தொழில்நுட்ப கருவி எதை பயன்படுத்தினாலும், அளவுக்கு மீறினால், அமிர்தமும் நஞ்சு என்பதை மறக்கக் கூடாது.

300 ரூபாய்க்கு DSLR Camera மற்றும் 2000 ரூபாய்க்கு Smartphone வாங்கலாமா..?
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com