தைராய்டு அறிகுறிகள் பெண்கள்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பெண்களுக்கு தைராய்டு இருந்தால் என்னென்ன அறிகுறிகள் (Thyroid Symptoms in Women in Tamil) இருக்கும் என்பதை பார்க்கலாம். தைராய்டு என்பது கழுத்தின் அடிப்பகுதியில் அமைந்துள்ள இரண்டு அங்குல நீளமுள்ள பட்டாம்பூச்சி வடிவ நாளமில்லா சுரப்பி ஆகும். ஆண்களை விட பெண்கள் தைராய்டு நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
ஆண்களை விட பெண்கள் அதிகம் தைராய்டு பிரச்சனைக்கு உள்ளாகுவதால் பெண்கள், அனைவரும் தைராய்டு அறிகுறிகள் பற்றி அறிந்து கொள்வது அவசியமான ஒன்றாக இருக்கிறது. அறிகுறிகளை நாம் முன்கூட்டியே அறிந்து கொள்வதன் மூலம், தைராய்டு பிரச்சனையை ஆரம்ப காலத்தில் இருந்தே குறைக்க முடியும். எனவே, பெண்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் தைராய்டு அறிகுறிகள் பெண்கள் பற்றி விவரித்துள்ளோம். வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்.
தைராய்டு இருந்தால் என்ன சாப்பிட கூடாது
Thyroid Symptoms in Women in Tamil:
தைராய்டு நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கவலை, பதட்டம், நடுக்கம், எரிச்சல், தீவிர மனநிலை மற்றும் மாதவிடாய் பிரச்சனை போன்ற மாற்றங்கள் ஏற்படும். அதனை பற்றி பின்வருமாறு விவரமாக பார்க்கலாம்.
சோர்வு மற்றும் பலவீனம்:
சோர்வு மற்றும் நாள்பட்ட சோர்வு தைராய்டு பிரச்சினையின் எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம். தைராய்டு சுரப்பி வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துவதால், அதிகப்படியான தைராய்டு வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதனால், உடலில் ஆற்றல் இழப்பு மற்றும் பலவீனம் ஏற்படுகிறது. அதுமட்டுமில்லாமல், தைராய்டு சுரப்பியால் ஏற்படும் சோர்வு மற்றும் பலவீனம் இதயத் துடிப்பு, தசை பலவீனம் மற்றும் மூட்டுவலி போன்றவற்றையும் ஏற்படுத்துகிறது.
எடை அதிகரிப்பு அல்லது எடை இழப்பு:
பெண்களுக்கு தைராய்டு ஏற்பட்டால் எடை அதிகரிப்பு அல்லது எடை இழப்பு உண்டாகும். வழக்கமான எடையில் இல்லாமல், திடீரென எடை வேகமாக குறையும் அல்லது அதிகரிக்கும். இவ்வாறாக இருப்பின், இது தைராய்டு அறிகுறியாகும்.
தூக்கமின்மை:
தைராய்டின் அறிகுறிகளில் தூக்கமின்மையும் ஒன்றாகும். பெண்களுக்கு தைராய்டு இருந்தால் தூங்குவதற்கு மிகவும் கடினப்படுவார்கள். இரவில் தூங்காமல் புரண்டு படுத்துக் கொண்டிருந்தால், அது தைராய்டு செயலிழப்பின் அறிகுறியாக இருக்கலாம். தைராய்டு மனநிலை, நரம்பு மண்டலத்தை பாதித்து உங்களை சோர்வடையச் செய்து, நிம்மதியாக தூங்குவதை கடினமாக்குகிறது.
ஒழுங்கற்ற மாதவிடாய்:
பெண்களுக்கு தைராய்டு அளவுகளில் ஏற்படும் இடையூறு ஆனது, மாதவிடாய் கால சுழற்சியில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். மாதவிடாய் வழக்கமான நேரத்தில் வராமல் கால தாமதமாகி வரலாம். குறைந்த அல்லது அதிக தைராய்டு ஹார்மோன்கள் மாதவிடாய்களை இலகுவாகவோ, கனமாகவோ அல்லது குறைவாகவோ செய்யலாம்.
கழுத்தைச் சுற்றி வீக்கம்:
தைராய்டின் ஆரம்ப மற்றும் பொதுவான அறிகுறிகளில் கழுத்தை சுற்றி வீக்கம் காணப்படும் . மேலும், கழுத்தைச் சுற்றியுள்ள தோல் மடிப்புகள் கருமையாக இருக்கும். இந்த நிறமி ஹார்மோன் சீற்றத்தால் ஏற்படுகிறது.
தைராய்டு குணமாக இனி மாத்திரை வேண்டாம் இதை மட்டும் செய்தால் போதும்..!
மேலும் பெண்கள் தொடர்பான பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | பெண்கள் |