3 Months Pregnancy Ultrasound Scan
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்வார்கள். இந்த நேரத்தில் பல டெஸ்ட் மற்றும் ஸ்கேன் எடுக்க வேண்டியிருக்கும். இதை சரியான முறையில் செய்தால் தான் பிரசவக்காலத்தில் எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியமாக குழந்தையை பெற்றெடுக்கலாம். அந்த வகையில், முதல் மூன்று மாதத்தில் எத்தனை முறை ஸ்கேன் செய்ய வேண்டும் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..
முதல் 3 மாதத்தில் எடுக்க வேண்டிய ஸ்கேன்:
முதல் மூன்று மாதத்தில் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் எடுக்க வேண்டும். இந்த ஸ்கேன் ஆனது கருவின் வளர்ச்சியை சோதிக்க கூடிய ஒன்றாக இருக்கிறது. இந்த ஸ்கேன் மூன்று ட்ரைமஸ்டரிலும் எடுக்கப்படுகிறது.
அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்களின் பட்டியல்:
1. முதல் ப்ரக்னன்சி ஸ்கேன் (Early Pregnancy Scan) – மூன்று மாதங்கள்
அல்ட்ராசவுண்ட் NT/ NB ஸ்கேன் (Ultrasound NT/ NB Scan) –
2. அல்ட்ராசவுண்ட் நிலை 1 (Ultrasound Level 1)
அல்ட்ராசவுண்ட் நிலை 2 / டிஃபா ஸ்கேன் (Ultrasound Level 2 / Tiffa Scan)
3. வளர்ச்சி ஸ்கேன் (Growth Scan)
டாப்ளர் ப்ரக்னன்சி (Doppler Pregnancy)
கரு எகோ (Fetal Echo)
முதல் ப்ரக்னன்சி ஸ்கேன்:
கர்ப்பமாக இருக்கும் போது 6-வது வாரம் முதல் 14-வது வாரம் வரை இந்த ஸ்கேன் செய்யப்படுகிறது. இவை எதற்காக என்று அறிந்து கொள்வோம் வாங்க..
நீங்கள் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த ஸ்கேன் செய்யப்படுகிறது. குழந்தை எப்போது பிறக்கும் என்பதையும் அறிந்து கொள்ளலாம். எத்தனை கரு இருக்கிறது, இந்த கருக்கள் ஆரோக்கியமாக இருக்கிறதா, இதயத்துடிப்பு சீராக இருக்கிறதா போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்.
அல்ட்ராசவுண்ட் NT/ NB ஸ்கேன்:
கர்ப்பத்தின் 11 முதல் 14 வது வாரத்தில் செய்யப்படுகிறது. இந்த நேரத்தில் குழந்தையின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை சோதனை செய்வதற்கு பயன்படுகிறது.
NT ஸ்கேன் ஆனது குழந்தையின் கழுத்துப் பகுதியில் சிண்ட்ரோம் வளர்ந்து இருக்கிறதா என்பதை சோதிப்பதற்கு உதவுகிறது.
குழந்தைக்கு எந்த வித பிறவி நோயும் இல்லை என்பதை கண்டறிய உதவுகிறது.
மேலும் பெண்கள் தொடர்பான பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | பெண்கள் |