நாவல் பழம் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாமா
பொதுவாக எந்த வீட்டில் கர்ப்பிணி பெண்கள் இருந்தாலும் அவர்களுக்கு என்ன கொடுக்க வேண்டும், என்ன கொடுக்கக்கூடாது என்று அறிந்து தான் கொடுப்பார்கள். அந்த வகையில் சிலருக்கு நிறைய உணவுகள் கர்ப்பிணிகளுக்கு கொடுக்கலாமா என்றும், ஒருவேளை அவ்வாறு கொடுத்தால் எது மாதிரியான பக்க விளைவுகள் வரும் என்பது பற்றியும் நிறைய பயம் உண்டாகும். இத்தகைய வரிசையில் கர்ப்பிணி பெண்களுக்கு நாவல்பழம் கொடுக்காலமா..! கொடுக்கக்கூடாதா..! என்றும், இதில் என்ன பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் உள்ளது என்பது பற்றியும் தான் இன்று விரிவாக பார்க்கப்போகிறோம்.
கர்ப்ப காலத்தில் சப்போட்டா பழம் சாப்பிடலாமா
கர்ப்பிணி பெண்கள் நாவல் பழம் சாப்பிடலாமா:
கர்ப்பிணிகள் நாவல் பழம் சாப்பிடலாமா என்று கேட்டால் தாராளமாக சாப்பிடலாம். ஆனால் நாவல் பழத்தினை சரியான அளவிலும், மருத்துவர் கூறியப்படி மட்டுமே எடுத்துக்கொள்வது நல்லது.
மேலும் கர்ப்பிணிகள் நாவல் பழத்தினை சாப்பிடுவதனால் என்னென்ன பயன்கள் மற்றும் அதிகமாக எடுத்துக்கொள்வதால் என்ன மாதிரியான பக்க விளைவுகள் வரும் என்று விரிவாக கீழே பார்க்கலாம்..!
நாவல் பழத்தில் உள்ள சத்துக்கள்:
நாவல் பழத்தில் வைட்டமின் B, வைட்டமின் B6, வைட்டமின் C, மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புசத்து, சோடியம், புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைரேட் என இத்தனை சத்துக்கள் உள்ளடங்கியுள்ளது.
நாவல் பழம் நன்மைகள்:
- நாவல் பழத்தில் பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்சைடுகள் இருப்பதனால் இதனை நாம் சாப்பிடுவதன் மூலம் உடல் சோர்வு மற்றும் மன அழுத்தம் நீங்கி ஆரோக்கியமாக இருக்கலாம்.
- இதில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் சத்துக்கள் நமது உடலில் காணப்படும் எலும்பினை பலம் பெற செய்வதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
- மேலும் நாவல் பழத்தினை கர்ப்பிணி பெண்கள் சரியான அளவில் எடுத்துக்கொள்வதன் மூலம் இதில் உள்ள கால்சியம் சத்து உடலின் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவுகிறது.
- அதேபோல் நாவல் பழம் உடலை சுறுசுறுப்பாகவும், ஆற்றலுடனும் இருக்க பெரும் பங்கு வைக்கிக்கிறது.
கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாத பழங்கள் |
அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதனால் ஏற்படும் பக்க விளைவுகள்:
- கர்ப்பிணி பெண்கள் பால் குடித்த பிறகோ அல்லது வெறும் வயிற்றிலோ நாவல் பழத்தினை எடுத்துக்கொள்வதன் மூலம் அமிலத்தன்மை அல்லது அசிடிட்டி பிரச்சனை வரக்கூடும். ஆகையால் இதனை தவிர்க்க வேண்டும்.
- மேலும் அளவை மீறி நாவல் பழம் கர்ப்பிணி தாய்மார்கள் சாப்பிடுவதனால் மார்பக வலி மற்றும் தொண்டை எரிச்சல் ஆகியவையும் பக்க விளைவுகளாக வரும்.
- ஆகையால் கர்ப்பிணி தாய்மார்கள் சரியான அளவில் நாவல் பழம் சாப்பிடுவது உடல் ஆரோக்யத்திற்கு நல்லது.
நாவல் பழம் சாப்பிடும் அளவு:
நாவல் பழத்தினை கர்ப்பிணியாக இருக்கும் ஒரு பெண் நாள் ஒன்றுக்கு 6 முதல் 7 பழத்திற்குள் மட்டுமே சாப்பிட வேண்டும். ஆகவே கர்ப்பிணி பெண்கள் எதை சாப்பிட வேண்டும் என்றாலும் மருத்துவரிடம் கூறுவது உடல் ஆரோக்யத்திற்கு நல்லது.
மேலும் பெண்கள் தொடர்பான பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | பெண்கள் |