மாதவிடாய் நாட்களில் பெண்கள் இந்த தவறை செய்யாதீர்கள்..!

How to use and dispose pad in tamil

மாதவிடாய் நாட்களில் செய்ய கூடாதவை

சில விஷயத்தை ஆண்களுக்கு தெரிய கூடாது என்று சொல்லி பெண்களிடம் வளர்ப்பார்கள். அது என்னவென்றால் மாதவிடாய் பற்றி பேசக்கூடாது என்று சொல்வார்கள். இன்னும் பல விஷயத்தை பற்றி பேசக்கூடாது என்று சொல்லி வளர்ப்பார்கள். ஆனால் அப்படி சொல்வதில் ஒன்றும் இல்லை. இது பெண்களுக்கு ஏற்படும் இயற்கையான மாற்றம் தான். ஆகவே அதனை பற்றி ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி தெரிந்துகொள்வதில் தவறு இல்லை.  ஏனென்றால் அனைவரின் வீட்டிலும் பெண்கள் இருப்பார்கள்.

மாதவிடாய் நாட்களில் செய்ய கூடாதவை:

பெண்கள் மாதவிடாய் நாட்களில் நாப்கின் பயன்படுத்தும் போது அதனை உங்கள் வீட்டு டாய்லெட்டில் போட்டு விடுவீர்கள். அந்த தவறை செய்யாதீர்கள். இதனால் அந்த பாத்ரூமை பயன்படுத்தும் மற்றவர்களுக்கும் பிரச்சனை ஏற்படும்.

பின்பு ஒரு சிலருக்கு ஒரு நாளுக்கு 1 Pad மட்டுமே பயன்படுத்தும் பழக்கம் உண்டு. ஆனால் அப்படி செய்வது தவறு. இதனை பற்றி மகப்பேறு மருத்துவர் சொல்வது என்னவென்றால்  உங்களுடைய சருமத்தில் சொறி, சிரங்கு, பூஞ்சை தொற்று என நிறைய பிரச்சனைகள் ஏற்படும். ஆகவே ஒரு நாப்கின் பயன்படுத்துவீர்கள் என்றால் 6 மணி நேரத்திற்கு ஒரு முறை நாப்கின் மாற்றுவது நல்லது.  

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கர்ப்பிணி பெண்களுக்கு கிடைக்கும் நியூட்ரிசன் கிட்டில் உள்ள பொருட்களின் பட்டியல்..!

மாதவிடாய் என்றால் கருப்பையில் சின்ன சின்ன கரு முட்டைகள் உருவாகி அது இதுபோல் மாதவிடாய் போல் மாறு வருகிறது. மாதவிடாய் காலத்தில் இரத்தப்போக்கு மட்டும் ஏற்பட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. அதுவே அதிகமாக கட்டி கட்டியாக உருவாகி வெளியில் வருவது, அதிகமாக வயிறு வலி, ஒரு நாளுக்கு 7 PAD பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டால் கட்டாயம் மருத்துவரை அணுகி உங்கள்  பிரச்சனைக்கான தீர்வை தெரிந்துகொள்ளுங்கள்.

 சிலர் மாதவிடாய் காலத்தில் பாத்ரூம் செல்வதற்கு அலுப்பு பட்டுக்கொண்டு தண்ணீர் குடிக்காமல் இருப்பார்கள். இதுபோல் இருப்பது மிகவும் தவறு. இந்த நேரத்தில் தான் அதிகமாக தண்ணீர் குடிக்கவேண்டும்.  

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கர்ப்பிணி பெண்கள் இப்படி தான் உட்கார வேண்டுமாம்.!

அதேபோல் மாதவிடாய் நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் தான் பிறப்பு உறுப்பை சுத்தபடுத்துவது நல்லது.  சிலர் அதிகமாக வேலை செய்பவராக இருப்பதால் ஒரு நாளுக்கு ஒரு முறையாவது வெந்நீர் போட்டு கழுவிக்கொள்வது நல்லது.  

அதேபோல் பெண்கள் PAD பயன்படுத்தும் போது சரியாக பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதனை டிஸ்போஸ் செய்யும் போது தவறாக செய்கிறார்கள். ஆகவே அதனை பயன்படுத்திவிட்டு 2 கவர் போட்டு கட்டி வைத்து முடிந்து எரித்து விடுவது நல்லது

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 கர்ப்ப காலத்தில் கால் வீக்கம் ஏற்படுவதற்கு என்ன காரணம்?

மேலும் பெண்கள் தொடர்பான பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 பெண்கள்