சிறு வயதிலேயே பெண்கள் பூப்படைய காரணம்
பூப்படைதல் என்பது ஒரு பெண்ணின் வாழ்வியலில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஆனால் சரியான காலத்தில் பூப்படைதல் நிகழ்வது முக்கியம். சில குழந்தைகள் 8 அல்லது 9 வயதில் பூப்படை அடைகிறார்கள். இன்னும் சில குழந்தைகள் 15 வயது தாண்டியும் பூப்படையாமல் இருக்கிறார்கள். பெண்களின் வாழ்க்கையில் பூப்படைவது முக்கியம் தான், ஆனால் அவை எந்த வயதில் பூப்படைகிறோம் என்பதும் முக்கியம் தான். இன்றைய காலத்தில் சீக்கிரமே குழந்தைகள் மூப்படைகிறார்கள். அதற்கான காரணத்தை அறிந்து கொள்வோம் வாங்க..
உடல் எடை:
சீக்கிரமாகவே பருவம் அடைவதற்கு உடல் பருமன் முக்கிய காரணமாக இருக்கிறது. ஏனென்றால் உடலில் உள்ள கொழுப்பானது ஈஸ்ட்ரோஜனின் அளவை அதிகரிக்க செய்கிறது. இதனால் சீக்கிரம் பருவம் அடைகிறார்கள்.
ஆரோக்கிய பிரச்சனை:
உடலில் கட்டிகள், தொற்று போன்ற பிரச்சனைகளினால் பருவமடைவதை கட்டுப்படுத்தும் ஹார்மோன்களின் உற்பத்தியை பாதிக்க செய்யும். மேலும் சர்க்கரை நோய், தைராய்டு மற்றும் அட்ரீனல் சுரப்பி போன்ற பிரச்சனைகளினால் சீக்கிரமாகவே பருவம் அடையலாம்.
பெண்கள் பூப்படைவதற்கு முன்பு இதுபோன்ற அறிகுறிகள் காணப்படும்..!
பிராய்லர் கோழி:
தற்போது அதிகமாக சாப்பிடும் பிராய்லர் கோழிக்கறியால் ஹார்மோன்கள் 8 வயதிற்கு முன்னர் பூப்பெய்துவதற்கானக் காரணமாக கருதுகிறார்கள். மேலும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் இனிப்பு உள்ள உணவுகள் சாப்பிடுவதன் மூலம் ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படும். இதனாலும் குழந்தைகள் சீக்கிரமாகவே பருவம் அடைகிரார்கள்.
வரலாறு:
குழந்தைகள் சீக்கிரமாகவே பருவம் அடைவதற்கு மரபியலும் ஒரு காரணமாக இருக்கிறது. அதாவது உங்கள் குடும்பத்தில் எல்லாருமே சீக்கிரம் பருவம் அடைந்திருக்கிறார்கள் என்றால் அடுத்த வரலாறு உள்ள குழந்தைகளும் சீக்கிரமாகவே பருவமடையும்.
பிளாஸ்டிக் பயன்படுத்துவது:
குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் பொருள்களில் உள்ள பிஸ்பீனால், ஏ’தாலேட்ஸ் போன்ற வேதிப் பொருள்கள், இயல்பான ஹார்மோன் செயல்பாட்டுக்கு பிரச்சனையை ஏற்படுத்தி சீக்கிரம் பூப்படைவதற்கு காரணமாகின்றது.
பருவமடைதல் என்றால் என்ன:
பருவமடைதல் என்பது கிட்டத்தட்ட எல்லா பெண்களும் கடந்து செல்லும் ஒரு வளர்ச்சிக் கட்டமாகும். குழந்தைகளை இளைஞர்கள் அல்லது இளம் வயதினராக மாற்றுவதைக் குறிக்கும் ஒரு முக்கியமான செயல்முறை இது. இந்த மாற்றம் பல்வேறு மன, உயிரியல் மற்றும் உடல் மாற்றங்கள் மூலம் நடைபெறுகிறது.
எந்த வயதில் பருவம் அடைவீர்கள்:
பருவமடைதல் என்பது முதன்மையாக குழந்தை பருவத்திற்கும் முதிர்வயதுக்கும் இடையில் ஏற்படும் கட்டம். அதனால்தான் மிகவும் பொதுவான பருவமடைதல் வயது பெண்கள் மற்றும் சிறுவர்கள் இருபாலருக்கும் இளமை பருவத்தில் உள்ளது. ஆண்களுக்கு, பருவமடைதல் 12 மற்றும் 16 வயதிற்குள் நடக்கும். மறுபுறம், பெண்களுக்கான பருவமடைதல் 10 மற்றும் 14 வயதிற்குள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் பெண்கள் தொடர்பான பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | பெண்கள் |