How To Get Your Period Faster By Exercise
பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் 28 முதல் 35 நாட்களுக்குள் நிகழ வேண்டும். அப்படி இல்லாமல் காலம் தள்ளி போனால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். சாதாரணமாக மன அழுத்தம், சத்து குறைபாடு போன்ற காரணங்களால் ஒரு சில நாட்கள் மாதவிடாய் தள்ளிப்போவது இயற்கையான ஒன்று. ஆனால் மாதக்கணக்கில் தொடர்ந்து மாதவிடாய் தள்ளிப்போனால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. அதுமட்டுமில்லாமல், மாதக்கணக்கில் பீரியட்ஸ் வராமல் இருந்தால் சில பயிற்சிகளையும் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அப்பயிற்சிகள் என்ன என்பதைத்தான் இப்பதிவில் பின்வருமாறு பரப்போகிறோம்.
What Are The Exercise to Get Periods Immediately in Tamil:
ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையால் அவதிப்படும் பெண்களுக்கு கீழே குறிப்பிட்டுள்ள இந்த பயிற்சிகள் நல்ல தீர்வாக அமையும்.
தோப்புக்கரணம்:
நன்மைகள்:
தோப்புக்கரணம் போடும்போது, பெண்கள் உடலில் உள்ள எண்டோகிரைன் சுரப்பியானது நன்றாக செயல்படுகிறது. இதனால், ஹார்மோன்கள் சமநிலை அடைந்து மாதவிடாய் சுழற்சியை சீராக்குகிறது.
செய்யும் முறை:
முதலில் இரு கால்களுக்கு இடையே தோள்பட்டை அளவு இடைவெளி விட்டு நிற்க வேண்டும்.
அடுத்து, உங்கள் இடது கையை வலது காதிலும், வலது கையை இடது காதிலும் இருக்கும்படித்து பிடித்து கொள்ளவும்.
இவ்வாறு செய்து கொண்டு உங்களால் முடிந்தவரை உட்கார்ந்து எழ வேண்டும்.
இப்பயிற்சியை, உங்களால் முடிந்த எண்ணிக்கையில் செய்து கொள்ளுங்கள்.
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்..!
ஹிப் ரொட்டேஷன்:
நன்மைகள்:
ஹிப் ரொட்டேஷன் செய்வதால் இடுப்பு பகுதி நன்றாக செய்லபடும். குறிப்பாக சினைப்பைக்கு ஆக்சிஜன் அளவு நல்ல முறையில் சென்றடையும். இது மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவுகிறது.
செய்யும் முறை:
முதலில் நேராக நிமிர்ந்து நிற்கவும். பிறகு, கலைகளை சிறிது இடைவெளி விட்டு வைக்கவும்.
இந்நிலையில் இடுப்பை வலமிருந்து இடமாக சுற்றவும். இதனை சில நிமிடங்கள் செய்த பிறகு, இதனைப்போன்றே இடுப்பை இடமிருந்து வலமாக சுற்றவும்.
பிறகு, நேராக நின்றபடி உங்கள் முழு இடுப்பையும் க்ளாக் வைஸ் மற்றும் ஆன்டி க்ளாக் வைஸ் தொடையில் சுற்றவும்.
பட்டர்ஃபிளை போஸ்:
நன்மைகள்:
இந்த பட்டர்ஃபிளை போஸ் பயிற்சி செய்வதால் பெண்களின் இடுப்பு பகுதியில் இரத்த ஓட்டம் சீராக பாய்கிறது. மேலும் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை உள்ள பெண்களுக்கு இது மிகவும் பயனளிக்கக்கூடியதாக இருக்கிறது.
செய்யும் முறை:
முதலில் தரையில் உக்கார்ந்து கால்களை நேராக நீட்டவும்.
பிறகு, இரண்டு கால்களையும் மடங்கி இரு பாதங்களையும் ஒன்றாக சேர்த்து வைக்க வேண்டும்.
இப்போது கைவிரல்களை கொண்டு கால் விரல்களை பிடித்து கொள்ள வேண்டும். இந்நிலையில் தனது இருகால்களையும் பட்டாம்பூச்சி போன்று லேசாக மேழும் கீழுமாக அசைக்க வேண்டும்.
மேலே குறிப்பிட்டுள்ள இந்த மூன்று பயிற்சிகளை செய்து வருவதன் மூலம் மாதவிடாய் சுழற்சி சரியான கால அளவில் வரும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
பெண்கள் மாதவிடாய் மாதம் மாதம் சரியாக வருவதற்கு இதை மட்டும் செய்யுங்கள்..!
மேலும் பெண்கள் தொடர்பான பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | பெண்கள் |