பெண்களுக்கான டிப்ஸ்
நம் முன்னோர்களின் காலத்தில் தான் பெண்கள் அதிகமாக படிக்கவும் இல்லை, வேலைக்கும் செல்லவில்லை, வீட்டில் உள்ள வேலைகளை மட்டும் பார்த்து கொண்டிருந்தார்கள். இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. இப்போது எந்த துறையிலும் பெண்கள் இல்லாமல் இல்லை. அனைத்து துறையிலும் பெண்கள் முன்னிலையில் இருக்கின்றனர்.
என்ன தான் வேலையில் சிறந்து விளங்கினாலும் குடும்பத்தை பார்ப்பதற்கு கஷ்டப்படுகிறார்கள. இரண்டையும் பேலன்ஸ் செய்ய முடியாமல்மன அழுத்தத்திற்கு ஆளாகுகிறார்கள். அதனால் இந்த பதிவில் வேலை மற்றும் குடும்ப வாழ்க்கையை நிர்வகிப்பது எப்படி என்று அறிந்து கொள்வோம்.
ஹெல்த் பராமரிக்க வேண்டும்:
நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் குடும்பத்தை நன்றாக பராமரிக்க முடியும். அதனால் உங்களின் உணவு மற்றும் தூக்கம் போன்றவற்றிருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நீங்கள் உங்களை சரியாகபராமரிக்கவில்லை என்றால் வேலை மற்றும் குடும்பம் இரண்டையும் சரியாக உங்களால் கவனிக்க முடியாது.
துணையிடம் பேச வேண்டும்:
உங்களுக்கு வேலை அதிகமாக இருக்கும் போதும் சரி , மன அழுத்தத்தில் இருக்கும் போதும் சரி குழந்தைகளை சரியாக பார்க்க முடியவில்லை என்றால் துணையிடம் சொல்ல வேண்டும். நீங்கள் வேலைக்கு சென்று வீடு திரும்பியதும் வீட்டில் உள்ள வேலைகளை பார்த்து விட்டு இரவு தூங்குவதற்கு முன்பு ஒரு 1/2 மணி நேரம் துணையிடம் பேச வேண்டும்.
அதாவது உங்களுடைய பிரச்சனையை கூறுவதன் மூலம் அவர்கள் அந்த பிரச்சனைக்கான தீர்வை கூறுவார்கள். அதனால் நீங்கள் அன்றைய இரவு திருப்தியாக தூங்குவீங்கள்.
குழந்தைகளுக்கான நேரம்:
நீங்கள் வேலைக்கு சென்று வீடு திரும்பியதும் பிரஸ்அப் ஆகிவிட்டு குழந்தைகளிடம் ஒரு மணி நேரம் செலவிட வேண்டும். அப்போது தான் குழந்தைகள் எப்படி படிக்கிறார்கள் அவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள முடியும்.
திட்டமிட வேண்டும்:
பணியிடத்தில் வேலைகள் செய்யும் போது அதிக நேரம் எடுத்து கொள்ளாதீர்கள். இவ்வளவு நேரத்திற்குள் வேலையை முடிக்க வேண்டும் என்று திட்டமிட வேண்டும். அடுத்து வீட்டிலும் இரவு 10 மணிக்கு மேல் வேலை செய்ய கூடாது என்று திட்டமிட வேண்டும்.
இருவரின் மாதம் சம்பளம் வந்த பிறகு என்னென்ன செலவு இருக்கிறது, என்னென்ன வாங்க வேண்டும் என்று இருவரும் சேர்ந்து திட்டமிட வேண்டும். மீதி உள்ள தொகையை முதலீடு திட்டங்களில் சேமிக்க வேண்டும்.
மற்றவர்கள் பேசுவதை கேட்க வேண்டாம்:
பணியிடம் அல்லது வீட்டிற்கு பக்கத்தில் இருப்பவர்கள் உங்களின் மனம் நோகும்படி பேசினால் அதை காதில் வாங்காதீர்கள். அவர்கள் பேசுவதற்கு எதிர்பேச்சு பேச வேண்டாம். அவர்கள் பேசும் போது அமைதியாக இருப்பது நல்லது.
தியானம்:
தினமும் மாலை நேரத்தில் 10 நிமிடம் தியானம் செய்யுங்கள். இந்த தியானம் செய்வதன் மூலம் மன அழுத்தம் நீங்கும், மனதானது அமைதியாகும்.
மேலும் பெண்கள் தொடர்பான பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | பெண்கள் |