How To Delay Periods Naturally in Tamil
மாதவிடாய் என்பது பெண்களுக்கு சுயற்சி முறையில் 1 மாதத்திற்கு ஒரு முறை வருவது ஆகும். மாதவிடாய் காலங்களில் பெண்கள் வலி, உதிரப்போக்கு போன்றவற்றால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால், மாதவிடாய் பெரும்பாலான பெண்களுக்கு அசவுகரியமான ஒன்றாக இருக்கிறது. அதிலும், குறிப்பாக வீட்டு விசேஷ நாட்கள், கோவில் திருவிழாக்கள் போன்ற சுப காரிய நாட்களில் மாதவிடாய் நாள் இருந்தால் பெண்களுக்கு ஒரு விதமான அச்சம் மனதில் இருந்துகொண்டே இருக்கும். ஆகையால், மாதவிடாயை தள்ளிபோடுவதற்காக பல பெண்கள் மாத்திரையை பயன்டுத்துவர்கள். ஆனால், மாத்திரை உட்கொள்ளாமலும் மாதவிடாயை சில நாட்கள் தள்ளிப்போடலாம். அதனை பற்றி பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
பெண்கள், மாதவிடாய் நீண்டநாட்கள் வராமல் இருந்தாலும் மாத்திரை உட்கொள்கிறார்கள், மாதவிடாயை தள்ளிபோடுவதற்கும் மாத்திரையை உட்கொள்கிறார்கள். ஆனால், இது மிகவும் தவறான செயல். இவ்வாறு மாத்திரையை எடுத்துக்கொள்வதால், அவர்கள் பிற்காலத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆகையால், இயற்கையான முறையில் மாதவிடாயை தள்ளிப்போடுவது எப்படி என்பதை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். இந்த முறையையும் நீங்கள் தவிர்க்கமுடியாத சூழ்நிலையில் மட்டுமே பின்பற்ற வேண்டும். ஏனென்றால், மாதவிடாயை அடிக்கடி தாமதப்படுத்தி வரவைப்பதன் மூலம் கர்ப்பப்பையில் பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
Home Remedies to Delay Periods For Few Days in Tamil:
எலுமிச்சை சாறு:
எலுமிச்சை பழத்தில் உள்ள சிட்ரஸ் அமிலங்கள் மாதவிடாயை தாமதப்படுத்த உதவுகிறது. அதுமட்டுமில்லாமல், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் தீர்க்கிறது. ஆகையால், மாதவிடாய் தள்ளிப்போக எலுமிச்சை பழச்சாற்றை மாதவிடாய் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பிலிருந்தே அருந்தி வர வேண்டும். இவ்வாறு குடித்து வருவதன் மூலம் மாதவிடாய் சில நாட்கள் தள்ளிப்போகும்.
பொட்டுக்கடலை:
பொட்டுக்கடலையை, மாதவிடாய் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பிலிருந்தே சாப்பிட்டு வருவதன் மூலம் மாதவிடாயை தள்ளிப்போடலாம். அதாவது, தினமும், காலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு பொட்டுக்கடலை நன்கு மென்று சாப்பிட்டு, அதன் பிறகு தண்ணீர் குடித்து வர வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால், மாதவிடாய் சில நாட்கள் தள்ளிப்போகும்.
தர்பூசணி ஜூஸ்:
தர்பூசணி ஜூஸ், மாதவிடாயை தாமதப்படுத்த உதவுகிறது. ஆகையால், மாதவிடாய் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக அருந்துவது நல்லது. மேலும், ஜெலட்டின், வெந்தயம், உடற்பயிற்சி போன்றவையும் மாதவிடாயை தாமதப்படுத்த உதவுகிறது.
மாதவிடாய் காலத்தில் பெண்கள் பப்பாளி சாப்பிடலாமா..? சாப்பிட கூடாதா
ஆப்பிள் சைடர் வினிகர்:
ஆப்பிள் சைடர் வினிகரில் அதிக அளவு அமிலத்தன்மை உள்ளது. ஆகையால், மாதவிடாய் காலத்தைத் தாமதப்படுத்த ஆப்பிள் சைடர் வினிகர் உதவுகிறது. எனவே, மாதவிடாய் காலத்திற்கு 10 நாட்கள் முன்பிலிருந்தே சிறிதளவு ஆப்பிள் சைடர் வினிகரை தண்ணீரில் கலந்து குடித்து வருவதன் மூலம் மாதவிடாய் தள்ளிப்போகும்.
இலவங்கப்பட்டை தேநீர்:
மாதவிடாய் தாமதாக வர இலவங்கப்பட்டை தேநீர் ஒரு சிறந்த மருந்தாகும். அதுமட்டுமில்லாமல், மாதவிடாய் வலிகள் போன்றவற்றையும் குறைகிறது. ஆகையால், மாதவிடாய் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பிலிருந்தே இலவங்கப்பட்டை தேநீர் அருந்தி வருவதன் மூலம் மாதவிடாய் காலத்தை தள்ளிப்போட முடியும்.
மாதவிடாய் காலத்தில் வலி இல்லாமல் இருக்க இதை மட்டும் செய்யுங்கள்
மேலும் ஆன்மிகம், ஆரோக்கியம், விவசாயம் தமிழ் தொடர்பான பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.
மேலும் பெண்கள் தொடர்பான பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | பெண்கள் |