மாதவிடாய் காலத்தில் வலி இல்லாமல் இருக்க இதை மட்டும் செய்யுங்கள்.!

Advertisement

Natural Ways To Reduce Period Pain

ஒவ்வொரு மாதமும் பெண்கள், மாதவிடாய் நாட்களில் வயிற்று வலியினால் மிகவும் சிரமப்படுகிறார்கள். அதிலும், ஒரு பெண்கள் வயிற்று வலி தாங்கமுடியாமல் அதற்கான மாத்திரைகளையும் எடுத்து கொள்கிறார்கள். ஆனால், மாத்திரை எடுப்பது தவறான ஒன்று. மாத்திரை இப்பொழுது உங்களுக்கு பலனளித்தலும், அதனை தொடர்ந்து உட்கொண்டு வருவதன் மூலம் எதிர்காலத்தில் கர்ப்பப்பை பாதிக்கப்படலாம். எனவே, மாதவிடாய் வலிக்கு மாத்திரை உட்கொள்ளாமல் வேறு என்ன வழிகள் இருக்கிறது என்பதை தான் நாம் பார்க்கவேண்டும். மாதவிடாய் வலிக்கு சில வீட்டு மருத்துவங்கள் உள்ளது. அதனை பற்றி தான் இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். எனவே பதிவை முழுவதுமாக படித்து பயனடையுங்கள்.

How To Relieve Period Pain at Home in Tamil:

சீரகம் தண்ணீர்:

 how to relieve period pain in tamil

சீரகம், ஒரு மருத்துவ குணம் நிறைந்துள்ள அஞ்சறை பெட்டி பொருள். இது நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. அதிலும், குறிப்பாக சீரகத்தில் ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளதால் தசைப்பிடிப்பு மற்றும் வழியை குறைக்க பயன்படுகிறது.

1 ஸ்பூன் சீரகத்தை 2 டம்ளர் தண்ணீரில் கொதிக்கவைத்து வடிகட்டிக் கொள்ளுங்கள். இதனை சிறிது நேரம் ஆறவைத்து குடிப்பதன் மூலம் மாதவிடாய் வலி இல்லாமல் இருக்கும்.

மாதவிடாய் நாட்களில் பெண்கள் இந்த தவறை செய்யாதீர்கள்..!

பெருங்காய மோர்:

 how to reduce period pain at home in tamil

மாதவிடாய் வழியை குறைக்க பெருங்காயம் ஒரு நல்ல தீர்வாகும். பெருங்காயத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு வாயு மற்றும் வயிற்று உப்புசம் போன்றவை ஏற்படும். எனவே, இதனை தடுக்க பெருங்காயம் பெரிதும் உதவுகிறது. மோரில் ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்து அருந்துவதன் மூலம் மாதவிடாய் வழியில் இருந்து விடுபடலாம்.

பெண்களுக்கு இடது பக்க மார்பு அடிக்கடி வலிப்பது ஏன் தெரியுமா.?

செலரி தேநீர்:

 natural ways to reduce period pain in tamil

செலரி டீ மருத்துவ குணங்கள் நிறைந்ததாக கருதப்படுகிறது. ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைக்கு செலரி கீரை ஒரு நல்ல தீர்வாகும். அதுமட்டுமில்லாமல் மாதவிடாய் வலியையும் குறைக்கிறது.

முதலில் 2 கப் தண்ணீரில், 2 சிட்டிகை செலரியை சேர்த்து நன்றாக கொதித்து பாதியளவு வந்ததும் வடிகட்டி எடுத்து மிதமான சூட்டில் பருகுங்கள்.  

மேலும் பெண்கள் தொடர்பான பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 பெண்கள்
Advertisement