கர்ப்பிணி பெண்கள் சாப்பிட கூடாதவை பழங்கள்
பெண்களுக்கு தாய்மை என்பது ஒரு வரம். இந்த நேரத்தில் ரொம்ப கவனமக இருக்க வேண்டும். நாம் உட்காரும் முறையில் ஆரம்பித்து தூங்கும் வரைக்கும் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். எந்த மாதிரி இருக்க வேண்டும், எந்த மாதிரி இருக்க கூடாது என்ற வரைமுறை இருக்கிறது. நாம் தெரியாமல் செய்கின்ற தவறினால் குழந்தைக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால் கர்ப்பமாக இருப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிட கூடாது போன்ற எல்லாவற்றையும் அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இந்த பதிவில் கர்ப்பிணி பெண்கள் சாப்பிட கூடாத பழங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய பழங்கள்:
மாதுளை பழம்:
மாதுளை பழத்தில் வைட்டமின் சி மற்றும் பி6, இரும்பு, ஃபோலேட், புரதம், கால்சியம் , நார்ச்சத்துக்கள் போன்றவை நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் ஆனது இரும்பு குறைபாட்டை தவிர்ப்பதற்கு உதவுகிறது. மாதுளை பழத்தில் இருக்கும் வைட்டமின் கே ஆனது தாயின் இடுப்பு எலும்புகளுக்கும், குழந்தையின் எலும்பு வலுவடைவதற்கும் உதவியாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் குழந்தை மற்றும் தாய் இருவருக்குக்கும் இடையிலான கொடியை ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்கு உதவியாக இருக்கிறது.
கொய்யாப்பழம்:
கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும். இதனை தவிர்ப்பதற்கு கொய்யாப்பழம் உதவியாக இருக்கிறது. ஏனென்றால் கொய்யா பழத்தில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் இ, கரோட்டினாய்டுகள், பாலிஃபினால்கள், ஃபோலேட் போன்ற சத்துக்கள் ஆனது செரிமான பிரச்சனைகளை நீக்கி மலத்தை கழிப்பதற்கு உதவியாக இருக்கிறது.
தர்பூசணி:
தர்பூசணியில் தர்பூசணியில் வைட்டமின் ஏ, சி மற்றும் பி6, பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இவை நீர்ச்சத்து நிறைந்த பழமாக இருக்கிறது. இவற்றை சாப்பிடுவதன் மூலம் காலில் ஏற்படும் வீக்கத்தை சரி செய்கிறது.
ஆரஞ்சு:
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த பழத்தில் இருக்கும் போலேட் என்ற சத்து ஆனது குழந்தையின் நரம்பு மண்டலம், மூளை, முதுகெலும்பு போன்றவற்றைன் வளர்ச்சியை பராமரிப்பதற்கு உதவுகிறது.
ஆப்பிள்:
கர்ப்பிணி பெண்கள் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது உடல் ஆரோக்யத்திற்கு நல்லது. இதில் உள்ள சத்துக்கள் ஆனது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு உதவுகிறது. மேலும் இவை ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுப்பதற்கு உதவியாக இருக்கும்.
கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்..!
சாப்பிட கூடாத பழங்கள்:
அன்னாசிப்பழம்:
அன்னாசிபழத்தில் அதிகமாக சத்துக்கள் நிறைந்திருந்தாலும் கூட இதனை கர்ப்பமாக இருக்கும் ஆரம்ப கால கட்டத்தில் எடுத்து கொள்ள கூடாது. ஏனென்றால் இதில் உள்ள ப்ரோமிளின் என்ற என்சைம் ஆனது கருப்பையை பலவீனமாக்கி கருச்சிதைவு ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது.
திராட்சை:
திராட்சையில் வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட்கள், ஆர்கானிக் அமிலம், மினரல் சத்துக்கள் போன்ற சத்துக்கள் ஆனது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இரத்த சோகையை சரி செய்யவும் பயன்படுகிறது. ஆனாலும் அளவுக்கு அதிகமாக எடுத்து கொண்டால் உடலில் பக்க விளைவுகளை ஏற்படுத்த கூடும்.
பப்பாளி:
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பப்பாளி பழத்தை குறைவாக எடுத்து கொள்ள வேண்டும். சத்தே சமைய பழுக்காத பப்பாளி பழத்தை எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனென்றல் பழுக்காத பப்பாளி பழத்தில் ஸ்டெக்ஸ் என்ற கூறு இருக்கிறது. இதனை எடுத்து கொள்வதன் மூலம் கருப்பையில் சுருக்கத்தை ஏற்படுத்தி, குழந்தைகளை பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மேலும் பெண்கள் தொடர்பான பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | பெண்கள் |