கர்ப்பிணி பெண்கள் செய்ய கூடாத வேலைகள்

Advertisement

கர்ப்பிணி பெண்கள் செய்ய கூடாத வேலைகள்

பொதுவாக பெண் கர்ப்பமாக இருந்தால் அந்த பெண்ணை பார்த்து பார்த்து கவனிப்பார்கள். காரணம் அவளுடைய ஆரோக்கியத்திலும், குழந்தையின் ஆரோக்கியத்திலும் கவனமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். மருத்துவரிடம் காண்பிக்கும் போது அவர்களும் உடல் ஆரோக்கியத்திற்கு தகுந்தது போல மருந்து, மாத்திரை எழுதி கொடுப்பார்கள். அப்படி இருக்கும் போது நம்முடைய வீட்டில் முன்னோர்கள் யாரும் இருந்தால் இந்த வேலையை செய், அப்போது தான் சுகப்பிரசவம் நடக்கும். இந்த வேலையை நீ செய்ய கூடாது என்றெல்லாம் கூறுவார்கள். ஆனால் இன்றைய காலத்தில் வேலை காரணமாக யாரும் கூட்டு குடும்பமாக இருப்பதில்லை. அப்படி தனிக்குடுத்தனம் இருக்கும் பெண்களுக்கு எந்த வேலை செய்ய கூடாது என்றெல்லாம் தெரியாது. அதனால் தான் இந்த பதிவில் கர்ப்பிணி பெண்கள் எந்த வேலையை செய்ய கூடாது என்று அறிந்து கொள்வோம் வாங்க..

வீட்டை சுத்தம் செய்வது:

கர்ப்பிணி பெண்கள் வீட்டை சுத்தம் செய்வது

கர்ப்பிணி பெண்கள் வீட்டை சுத்தம் செய்வது மற்றும் துடைப்பது போன்ற செயல்கள் செய்வதை தவிர்க்க வேண்டும். நீங்கள் வீட்டை துடைப்பதற்கு பயன்படுத்தும் சோப் திரவங்கள், சோப் ஆயில் போன்றவை உங்களின் சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தும். மேலும் நீங்கள் வீட்டை மாப் போடும் போது அழுத்தி தேய்க்க வேண்டியிருக்கும். இந்த நேரத்தில் அதிக அழுத்தம் கொடுத்து எந்த வேலையும் செய்ய கூடாது.

கர்ப்பிணி பெண்கள் தூங்கும் முறை

எடையுள்ள பொருட்கள்:

கர்ப்பிணி பெண்கள் வீட்டை சுத்தம் செய்வது

இந்த நேரத்தில் நீங்கள் அதிக எடையுள்ள பொருட்களை தூக்க கூடாது, ஏனென்றால் நீங்கள் அதிக எடையுள்ள பொருட்களை தூக்கும் போது இடுப்பு மற்றும் முதுகு வலியை ஏற்படுத்தும். இரண்டாம் ட்ரைமெஸ்டர் முடிவு காலங்களுக்கு பிறகு அதிக எடையுள்ள பொருட்களை தூக்க கூடாது. ஏனென்றால் அதிக எடையுள்ள பொருட்களை தூக்கும் போது இரத்தப்போக்கு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

மாடிப்படி:

கர்ப்பிணி பெண்கள் செய்ய கூடாத வேலைகள்

கர்ப்ப காலத்தில் மாடிப்படி ஏறும் போது மூச்சு இறைக்கும். அதனால் மாடிப்படியில் கைப்பிடி இருந்தால் அதனை பிடித்து பொறுமையாக ஏறலாம். மேலும் பாத்ரூம் சுத்தம் செய்வதை தவிர்க்க வேண்டும். பாத்ரூம் சுத்தம் செய்யும் பொருட்களை பயன்படுத்தும் போது அதிலுள்ள கெமிக்கல் ஆனது ஆபத்தை ஏற்படுத்தும்.

கர்ப்பிணி பெண்கள் மேல் கூறப்பட்டுள்ள செயல்களை தவிர்த்து வேறு வேலைகளை செய்யலாம். நீங்கள் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.

மேலும் பெண்கள் தொடர்பான பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 பெண்கள்

 

 

Advertisement