Pengal Thirumana Vayathu
குழந்தை பிறந்து 16-வது நாள் எப்படி பெயர் வைப்பது வழக்கம், ஒவ்வொரு மாதம் இந்த குழந்தை கடக்கும் போது ஒவ்வொரு முன்னேற்றம் காணப்படும். 2 மாதத்தில் தலை நிற்கும், 6 மாதத்தில் குப்புற படுத்துக்கும். அது போல 3 வயதில் பள்ளியில் சேர்ப்பார்கள். நாம் செய்கின்ற முக்கியமானதாக இருக்கிறது. எந்த வயதில் மூப்படைந்தால் அவர்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று இருக்கும். ஆண்களுக்கு சரிவு பெண்களுக்கு சரி திருமண வயது என்று இருக்கும். அந்த வயதில் திருமணம் செய்தால் தான் இரண்டு பேரும் வாழ்க்கையை நன்றாக வாழ முடியும். இந்த பதிவில் பெண்களின் திருமண வயது எத்தனை என்று அறிந்து கொள்வோம் வாங்க..
பெண்களின் திருமண வயது எத்தனை:
நம் முன்னோர்களின் காலத்தில் பெண்கள் மூப்படைந்த பிறகு வேலைக்கு செல்ல அனுமதிக்க மாட்டார்கள். மூப்படைந்த கொஞ்ச நாட்களிலே திருமணம் செய்து வைத்திடுவார்கள். அந்த காலத்தில் பெண்கள் பெற்றோர்கள் எது சொன்னாலும் தலையை ஆட்டி விட்டு செய்திடுவார்கள். வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்று தெரியாமலே குடும்ப வாழ்க்கையில் சிக்கினார்கள்.
இந்த நிலையை 1955 ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தின்படி, பெண்ணின் வயது 18 ஆகவும், ஆணிண் வயது 21 ஆகவும் இருக்க வேண்டும். குழந்தைத் திருமணத்தைத் தடுக்கக் குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் 2006 கொண்டு வரப்பட்டது. 18 வயதிற்குள்ளேயே ஒரு பெண் திருமண வாழ்க்கையில் சென்றால் அவள் சிறு வயதிலேயே தாயாகும் சூழல் ஏற்படும். இதனால் அவளது வளர்ச்சி, ஆரோக்கியம், மனநலம் போன்றவை பாதிக்கப்படும். மேலும் 18 வயது நிறைவடைந்து திருமணம் செய்து வைக்கப்படும் பெண்கள் சிலர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியது.
தாய்ப்பால் எத்தனை வயது வரை கொடுக்கலாம்?
2020 அக்டோபர் 26 அன்று, ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது வித்தியாசத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞர் பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான அஸ்வினி குமார் உபாத்யாய் மனு தாக்கல் செய்தார். இதன் அடிப்படையில் தான் பெண்ணின் திருமண வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பெண்ணின் திருமண வயதும், ஆணின் திருமண வயது சமமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இதன் மூலம் குழந்தை திருமண சட்டத்தை தடுக்க முடியும், மேலும் 18 வயதில் திருமண செய்யும் போது பெண்கள் பக்குவம் அடைந்திருக்க மாட்டார்கள். இதில் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள். மேலும் குழந்தை பேறு காரணமாக ஆரோக்கியத்தில் பாதிக்கப்படுவார்கள். 21 என்றால் அவர்கள் ஆரோக்கியத்திலும் சரி, மனதளவிலும் சரி பக்குவம் அடைந்திருப்பார்கள்.
மேலும் பெண்கள் தொடர்பான பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | பெண்கள் |