வெள்ளைப்படுதல் ஏற்பட காரணம் அதனை தடுப்பதற்கான வழிகள்.!

vellai paduthal kunamaga tips in tamil

வெள்ளைப்படுதல் காரணம்

இன்றைய காலத்தில் பருவம் அடைந்த பெண்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளில் வெள்ளைப்படுதலும் ஒன்று. ஆனால் இந்த பிரச்சனையை யாரும் பெரிது படுத்துவதில்லை. இந்த வெள்ளை படுதல் பிரச்சனை பெண்களுக்கு பருவம் அடையும் வயதிலும், மாதவிடாய் வரும் நாட்களுக்கு முன்பும், கருவுற்றிருக்கும் போது வெள்ளை படுதல் பிரச்சனை ஏற்படுவது இயல்பு தான். ஆனால் சில பெண்களுக்கு எப்பொழுதுமே வெள்ளை படுதல் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும். இப்படி எப்பொழுதுமே வெள்ளை படுதல் ஏற்படுவதற்கான காரணம் மற்றும் அதனை தடுப்பதற்கான வழிகளை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ கருப்பையை சுத்தப்படுத்த சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன..?

வெள்ளை படுதல் காரணம் என்ன.? 

பொதுவாக பெண்களின் கருப்பை வாய்களில் சுரப்பிகள் காணப்படும். இந்த கருப்பை வாயிலிருந்து நீர் போல வெளியாகுவது தான் வெள்ளை. இந்த வெள்ளை படுதல் ஏற்படுவது இயல்பு தான். ஆனால் எப்பொழுதுமே வெள்ளை படுதல் இருந்து கொண்டே இருந்தால் கவனிக்க வேண்டியது அவசியமானதுகும்.

சர்க்கரை வியாதி, தைராய்டு பிரச்சனை, ஹீமோகுளோபின்,கால்சியம், வைட்டமின் மினரல்ஸ் குறைவாக இருந்தாலும் வெள்ளை படுதல் பிரச்சனை ஏற்படும். மேலும் உடல் வெப்பத்தினாலும் வெள்ளை படுதல் பிரச்சனை ஏற்படும்.

ஆனால் இந்த வெள்ளை படுதல் நோயின் அறிகுறியா.? வெள்ளை படுதல் அதிகமாக இருந்தால் கவனிக்க வேண்டும். மேலும் வெள்ளை படுதலில் துர்நாற்றம் ஏற்பட்டாலும் கவனிக்க வேண்டியது அவசியமானதாகும். வெள்ளை படுதலால் பிறப்புறுப்பை சுற்றி அரிப்பு இருந்தாலும், மற்றும் பிசு பிசு வென்று இருந்தாலும், அதனுடைய நிறம் மஞ்சள் நிறமாகவும், பச்சை நிறமாகவும் காணப்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமானதாகும்.

வெள்ளைப்படுதலை சரி செய்வது எப்படி.?

முதலில் வெள்ளை பூசணி எடுத்து தோலை உரித்து சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி சாலட் போல செய்து சாப்பிடலாம். இல்லை இது மாதிரி என்னால் சாப்பிட முடியாது என்றால் சித்த மருத்துவ கடையில் வெண்பூசணி லேகியம் கிடைக்கும். இதனை மருத்துவரின் ஆலோசனை கேட்டு சாப்பிடுவது நல்லது.

கருப்பையை வலுவடைய செய்வதில் கற்றாழை முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் கற்றாழை ஜெல்லை எடுத்து வெறும் வயிற்றில் தொடர்ந்து 48 நாட்களுக்கு குடித்து வர வேண்டும். வெள்ளை படுதல் பிரச்சனை சரி ஆகிவிடும்.

தினமும் எலும்பிச்சை பழம் ஜூஸ் அல்லது சாத்துக்குடி ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ் போன்றவற்றில் எதாவது ஒன்றை மட்டும் ஜூஸாக குடியுங்கள். வெள்ளை படுதல் பிரச்னை சரி ஆகி விடும்.

நெல்லிக்காய் வெள்ளை படுதலுக்கு சிறந்த மருந்தாக இருக்கும். இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. அதனால் இந்த பழத்தை எடுத்து கொண்டால் வெள்ளை படுதல் பிரச்சனையை சரி செய்து விடும்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in tamil