மாதவிடாய்க்கு முன் வரும் நாட்களை PMS நாட்கள் என்று பெயர்..!

What is PMS in Tamil

What is PMS in Tamil

பெண்களை பற்றி ஆண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டிய பதிவு தான் இது..! மாதவிடாய் காலத்தில் பெண்கள் அதிகமாக வயிற்று வலியில் இருப்பார்கள்..!அதேபோல் இந்த மாதவிடாய் காலத்தில் Period முன்னாடி PMS என்பது ஏற்படுகிறது. இதை தெரிந்து கொண்டால் வீட்டில் ஒருவருக்கு ஒருவர் பிரச்சனை இல்லாமல் இருப்பார்கள்..!

Period வேற PMS வேற இதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்..! ஆண்கள் இந்த பதிவை படித்து உங்கள் வீட்டில் உள்ள பெண்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள்..!

What is PMS in Tamil:

இந்த மாவிடாய் காலத்திற்கு முன் PMS -யில் இருப்பார்கள். இந்த PMS பெண்களுக்கு ஏற்படும் Premenstrual Syndrome என்று சொல்வார்கள். இது ஏற்படும் போது பெண்கள் உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் ஒரு சில மாற்றம் ஏற்படும்.

உடல் ரீதியாக மாற்றம் என்றால் அவர்கள் உடல் அதிக எடை உள்ளது போல், வயிறு உப்பியது போல், மார்பகம், கை, கால், முதுகு வலி, இடுப்பு என உடல் பாகங்கள் அனைத்தும் வலிப்பது போல் இருக்கும்.

தலைவலி, வாந்தி, மயக்கம் அவ்வளவு ஏன் ஒரு சிலருக்கு பருக்கள் கூட ஏற்படும். இது அனைத்துமே உடல் ரீதியாக ஏற்பட கூடிய மாற்றம்.

சிலருக்கு உணர்வு ரீதியாக மாற்றம் ஏற்படும். திடீரெண்டு கோபப்படுவார், அழுவார்கள், மற்றவர்கள் எது பேசினாலும் எரிச்சலாக பேசுவார்கள். மிகவும் மன அழுத்தம் உள்ளதை போல் தோன்றும். இது தான் அவர்கள் உணர்வுகள் வழியில் மாற்றம் எனப்படும்.

தெரிந்துகொள்ளங்கள் 👉👉👉   மாதவிடாய் காலத்தில் இந்த பொருட்களை உணவில் சேர்த்து கொள்ளாதீர்கள் சேர்த்தீர்கள் என்றால் அவ்வளவு தான்

இந்த பிரச்சனைகள் அனைத்தும் எல்லா பெண்களுக்கும் வரும் என்று சாத்தியம் இல்லை. ஒரு சில பிரச்சனைகள் அதிகமாகவும், ஒரு சில பெண்களுக்கு குறைவாகவும் ஏற்படும்.

இது அனைத்துமே ஹார்மோன்கள் மாற்றத்தால் ஏற்படுகிறது. அதேபோல் இது மாதவிடாய் காலத்திற்கு முன்பு ஏற்பட்டு மாதவிடாய் முடிந்த பிறகு சரியாகி விடும்.

What is PMS in Tamil

இதை எப்படி சரி செய்வது என்றால் அவர்கள் இந்த மாதிரி PMS இருக்கிறார்கள் என்றால் அவர்களை அதிகமாக வேலை வாங்காமல், குறைவாக வேலை பார்ப்பது அதேபோல் சுடு தண்ணீர் வைத்து வயிற்றில் ஒத்தடம் கொடுத்தால் வயிறு வலி சரியாகி விடும்.

அதேபோல் யோகா, மெடிடேஷன் இது போன்ற விஷயங்கள் செய்வதால் அவர்கள் Mind ரிலாக்ஸ் ஆக இருக்கும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 மாதவிடாய் நாட்களில் பெண்கள் இந்த தவறை செய்யாதீர்கள்

 

மேலும் பெண்கள் தொடர்பான பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 பெண்கள்