மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது

Advertisement

Why Women’s Day is Celebrated on 8th March

பெண் என்பவள்  எல்லா உறவுகளையும் ஒன்றாக வைத்து கொள்கிறாள்,எல்லா துறையிலும் ஆண்களை விட பெண்கள் அதிகமாக இருக்கிறார்கள். வீட்டை கவனிப்பது மட்டுமில்லாமல் பணியிலும் அவர்களின் வேலைகளை சிறப்பாக செய்கிறார்கள். பெண்கள் செய்யும் செயல்களுக்கு பாராட்டும் வகையில் ஒவ்வொரு வருடமும் மார்ச் 8-ம் தேதி மகளிர் தினம் கொண்டப்படுகிறது.

அதற்காக மார்ச் 8-ம் தேதி மட்டும் பெண்களை போற்ற கூடாது, எல்லா நாளும் பெண்களை போற்ற வேண்டும், ஆண்களை விட பெண்களிடம் சகிப்பு தன்மை அதிகமாக காணப்படும். ஆனால் ஏன் மகளிர் தினம் கொண்டப்படுகிறது என்று என்றாவது யோசித்துள்ளீர்களா.! அப்படியென்றால் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க இந்த பதிவில் மகளிர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது என்று அறிந்து கொள்வோம் வாங்க..

Why International Women’s Day Celebrated on 8th March:

18-ம் நூற்றாண்டில் பெண்கள் வீதி வேலைகள் செய்ய வேண்டும் என்று வீட்டிலேயே அடைப்பட்டு கிடந்தார்கள். இந்த நிலையானது கொஞ்சம் மாறி 1850 ஆண்டுகளில் தொழிற்சாலை மற்றும் அலுவலகங்கள் போன்ற எல்லா இடத்திலும் ஆண்களுக்கு நிகராக பெண்களும் வந்தார்கள்.

ஆனால்,  பெண்களுக்கு ஊதியங்களில் பாகுபாடு காட்டப்பட்டது, ஆண்களுக்கு நிகராக பெண்கள் வேலை செய்தாலும் அவர்களுக்கான  மதிப்பும் மற்றும் ஊதியமும்  கிடைக்கவில்லை. அதனால் 1910-ம் ஆண்டில் டென்மார்க் கோபன்ஹேகனில் மாபெரும் பெண்கள் உரிமை மாநாட்டை நடத்தினாரக்ள். இந்த மாநாட்டில் பெண்கள் அனைவரும் பங்கேற்று ஒற்றுமையாக பங்கேற்றார்கள். இந்த மாநாட்டில் முக்கியமான நபராக ஜெர்மனியைச் சேர்ந்த புரட்சிப் பெண் கிளாரா ஜெட்கின் என்பவர் கலந்து கொண்டார்.

இவர் பெண்களின் உரிமைகளை பேசுவதற்கு தனியாக ஒரு  நாள் வேண்டுமென்று  நினைத்தார். இதற்காக நிறைய முயற்சிகள் எடுத்தார்கள். ஆனால் அவையாவும் கை கொடுக்கவில்லை. சொல்லபோனால் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு தினத்தில் கொண்டாடப்பட்டது.

மகளிர் தின வரலாறு

அதன் பிறகு 1917-ல் ரஷ்யாவில் பெண் தொழிலார்கள் புரட்சி நடைபெற்றது. அதன் பிறகு 1920-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸாண்டரா கேலன்ரா கலந்து கொண்டார். ரஷ்ய பெண் தொழிலார்கள் புரட்சியானது பிபர்வரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுகிழமை பெண்கள் தினமாக கொண்டாடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தது.

க்ரிகோரியன் காலண்டரின்படி அவர்கள் கோரிய கடைசி ஞாயிற்றுக்கிழமை மார்ச் 8-ம் தேதியாக இருந்தது. அதனை அடுத்து உலக மகளிர் தினத்தை ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி நடத்த வேண்டும் என்று அவர் பிரகடனம் செய்தார். அந்த ஆண்டு முதல் உலகம் முழுவதும் மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும் பெண்கள் தொடர்பான பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 பெண்கள்

 

Advertisement