ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான அர்த்தமுள்ள தமிழ் பெயர்கள் – Arthamulla Tamil Peyargal
இன்றைய கால கட்டத்தில் புதிதாக பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பது என்பது மாடர்ன் ஆகிவிட்டது. அதன் காரணமாகவே பெரும்பாலும் யாரும் நமது தாய் மொழியான தமிழ் மொழியில் பெயர் வைப்பதில்லை. தமிழ் பெயர்கள் புதுமையாக இல்லை, சிறியதாக இல்லை என அதற்கு பல்வேறு காரணங்கள் அதற்கு கரணம் சொல்வதுண்டு. மேலும் ஜோதிடம், நியூமராலஜி என மூடநம்பிக்கையால் சமஸ்கிருத பெயர்களையே ஒபொழுது பெரும்பாலான மக்கள் வைக்கின்றனர்.
அதாவது மக்கள் தங்கள் செல்ல குழந்தைக்கு சோதிடர்கள் மற்றும் நியூமராலஜிஸ்ட் சொல்வதை கேட்டு ஹ, ஷ, ஸ, ர, ஜ போன்ற எழுத்துக்களில் ஆரம்பிக்கும் படியான பெயர்களையோ அல்லது புதுமையான பெயர்கள் என கூறிக்கொண்டு சமஸ்கிருத பெயர்களையே வைக்கின்றனர். இருப்பினும் தற்பொழுது குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள் இடுவது தமிழர்களிடையே அதிகரித்து வருகிறது. ஆக இந்த பதிவில் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான அர்த்தமுள்ள தமிழ் பெயர்கள் சிலவற்றை இங்கு காண்போம் வாங்க.’
ஆண் குழந்தை அர்த்தமுள்ள தமிழ் பெயர்கள்:
அகரன் | அனைவருக்கும் முதல் ஆனவன் |
அறிவன் | அறிவில் சிறந்தவன் |
இன்பசேரன் | மகிழ் நிறைந்தவன் |
இன்பன் | இன்பமானவர் |
இளங்கோ | இளைய அரசன் |
எல்லாளன் | எல்லைகளை ஆள்பவன் |
கணியன் | கனி போன்று இனிமையானவன் |
கவி சிரன் | கவிதைகள் இயற்றுவதில் சிறந்தவன் |
சீரன் | அனைத்திலும் சிறந்தவன் |
செழியன் | செழுமையானவன் |
சேரன் | முத்தமிழ் மன்னர்களில் ஒருவன் |
துகிலன் | பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பவன் |
துளிரன் | அழகாய் துளிருப்பவன் |
நன்னன் | நற்பண்புகள் உடையவன் |
நவிலன் | கல்வியாளன் பேச்சாளன் |
நாவலன் | நாவல் தீவை (இந்திய துணைக் கண்டம்) சேர்ந்தவன் |
நிலன் | பரந்த நிலப்பரப்பின் தலைவன் |
நிலவன் | நிலவைப் போன்றவன் |
புதினன் | புதுமையானவன் |
பொழிலன் | சோலைகளின் அரசன் |
வளவன் | வளமானவன் |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
த வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
பெண் குழந்தை அர்த்தமுள்ள தமிழ் பெயர்கள்:
அதழினி | பூவிதழ் போன்றவள் |
அகவழகி | அழகிய மனம் உடையவள் |
அனலி | நெருப்பை போன்றவள் |
இமையழகி | அழகிய இமைகளை உடையவள் |
இயல் | இயல்பானவள் |
இளநகை | மெலிதாய்ப் புன்னகைப்பவள் |
இளவேனில் | இளவெயில் போல இதமானவள் |
எழிலி | மேகம் போல வழங்கும் குணமுடையவள்; எழில் பொருந்தியவள் |
கமழி | நறுமணம் கமழல்பவள் |
சாரல் | மழைச்சாரல் போன்றவள் |
முகிலிசை | இடிமுழக்கம் போல கம்பீரமான குரலுடையவள் |
கவினி | அழகு பொருந்தியவள் |
அலர்விழி | மலர் போல் விரிந்த கண்களுடையவள் |
நயமி | மகிழ்வானவள்; நற்குணமுடையவள் |
ஆழினி | ஆழ்கடலின் தலைவி |
கயல்/ கயல்விழி | மீன் போன்ற கண்களுடையவள் |
நன்மதி | தெளிந்த அறிவுடையவள் |
நறுமுகை | நறுமணம் பெருந்திய மொட்டு போன்றவள் |
தாரகை | விண்மீன் போன்று ஒளிபொருந்தியவள் |
தாரணி | பூமி போல எதையும் தங்குபவள் |
நெடுங்குழலி | நீண்ட கூந்தலுடையவள் |
துகிரா | பவளம் போன்று அரிதானவள் |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ச வரிசை பெண் குழந்தை பெயர்கள்
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |