அறிவு வேறு பெயர்கள் | அறிவு வேறு சொற்கள் | Arivin Maru Peyar in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் அறிவு என்பதன் வேறு பெயர்கள் என்ன என்பதை கொடுத்துள்ளோம். இன்றைய கால கட்டத்தில் படித்து முடித்ததும் வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதுவும் தனியாரிடம் சென்று வேலை பார்க்க பலரும் விரும்புவதில்லை. அரசு வேலைக்கு தான் செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள். அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தினால் தன்னை தயார்படுத்தி கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை அதிகம் காட்டுகிறார்கள்.
புத்தகம் நிறைய வாங்கி படிக்கிறார்கள். அன்றைய நாள் செய்திகளை தெரிந்து கொள்கிறார்கள். ஏனென்றால் அரசு தேர்வில் GK இடம் பெறுகிறது. இதற்கு நிறைய விஷயங்களை அறிந்திருக்க வேண்டும். அதற்கு உதவும் வகையில் நிறைய பதிவுகளை பதிவிட்டுள்ளோம். அந்த வகையில் இன்றைய பதிவில் அறிவு என்பதற்கான வேறு பெயர்களை பற்றி அறிந்து கொள்வோம்.
அறிவு என்றால் என்ன.?
- பொதுவாக அறிவு என்பது ஒரு விஷயத்தை கற்று கொள்வது மட்டும் இல்லை. ஒரு விஷயத்தை கற்று கொள்கிறார்கள் என்றால் அது உண்மையாய் என்று ஆராய்பவனே அறிவானவன்.
- இதனை ஒரு குறள் மூலம் அறிந்து கொள்வோம்.
- எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. - இந்த குரல் சொல்லும் பொருள் என்னவென்றால் புது புது விஷயங்களை கற்று கொள்வது மட்டும் அறிவில்லை. அதில் இருக்கும் உண்மையை ஆராய்பவனே அறிவில் சிறந்தவர்கள் என்று இந்த குறள் சொல்லுகிறது.
- புதிய தகவலை அறிந்து கொள்வதற்கும், அறிந்து கொண்ட தகவல்களை ஆய்வு செய்வதற்கும், நமக்கு தெரிந்த தகவல்களை பிறருக்கு பயன்படும் வகையில் கற்பிப்பதற்கும் அறிவு முக்கிய ஒன்றாக இருக்கிறது. எந்த ஒரு கஷ்டமான சூழ்நிலையிலும் சிந்திக்கிறது என்பது முக்கியமானதாக இருக்கிறது.
விவாதம் என்பதன் மற்றொரு சொல் என்ன தெரியுமா..?
அறிவு வேறு சொல் | arivu veru sol in tamil:
அறிவு என்பதை பல வார்தைகளால் அழைக்கலாம். அவற்றை பற்றி அறிந்து கொள்வோம்.
- ஞானம்
- மதிநுட்பம்
- மேதை
- விவேகம்
- உணர்வு
- உரம்
மேற்கூறிய வார்த்தைகளில் அறிவு என்ற வார்த்தையை சொல்லலாம்.
அறிவு in English:
அறிவு என்ற சொல்லை ஆங்கிலத்தில் எப்படி சொல்லலாம் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
- Knowledge
- Sense
- Intellect
- Intelligence
- Wisdom
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |