ஆடை வேறு பெயர்கள்

Advertisement

ஆடை வேறு பெயர்கள்

மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் உணவு, உடை, இருப்பிடம், நீர், காற்று  போன்றவை அடிப்படையாக இருக்கிறது. இவற்றில் ஒன்று இல்லாவிட்டாலும் நம்மால் உயிர் வாழ முடியாது. ஆடை என்பது பலரும் பல விதமாக அணிவார்கள். அவர்களின் விருப்பத்திற்கேற்ப ஆடைகளை அணிவார்கள்.

நம் முன்னோர்கள் ஆடைகள் என்று அழைப்பார்கள். ஆனால் இன்றைய காலத்தில் உள்ளவர்களிடம் ஆடை என்று சொன்னால் தெரியாது. துணி அல்லது டிரஸ் போன்ற பெயர்களால் அழைப்பார்கள். ஆனால் ஆடைக்கு பல பெயர்கள் உள்ளது. அதனை பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.

ஆடை என்றால் என்ன.?

ஆடை என்பது நம்முடைய உடல் பாகங்களை மறைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் நம்முடைய சமூக அடையாளத்திற்கான வெளிப்பாடாகவும் இருக்கிறது. நாம் எந்த மாதிரியான உடைகளை அணிகிறோமோ நமக்கு ஒரு தைரியத்தையும், தன்னம்பிக்கை மற்றும் நமக்கான அங்கீகாரத்தையும் கொடுக்கிறது.

மழை, காற்று போன்றவற்றில் நம்மை பாதுகாத்து கொள்ள உடுப்பாக பயன்படுகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான ஆடைகளை அணிவார்கள். ஆடை அணிவது  அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றது போல் மாறுபடுகிறது.

எடுத்துக்காட்டு:

ஆடை வேறு சொல்

சுபாஷினி ஆடையானது கண்களை கவரும் வகையில் அழகாக இருந்தது.

பார்கவி உடையானது பார்ப்பதற்கு நீட் ஆக இருந்தது.

மகா அணிந்திருந்த ஆடை சிம்பிள் ஆகவும், அழகாகவும் இருந்தது.

ஆழ்வார்களின் பெயர்கள்

ஆடை வேறு சொல்: 

ஆடை என்பதை உடை, துணி,  உடுப்பு போன்ற சொற்களால் அழைக்கலாம்.

இலக்கியங்களில் ஆடையை குறிக்கும் சொல்:

இலக்கியங்களில் ஆடையை குறிக்கும் பெயர்கள் 
உடை தழையுடை துகில்
கலிங்கம் அறுவை சிதார்
ஆடை உடுக்கை கச்சு
ஈரணி தானை காழகம்
போர்வை கச்சை வம்பு
மடி பட்டு சீரை
படம் பாவாடை சேலை
உத்தரியம் கம்பலம் கோவணம்
கவசம் சிதர்வை தோக்கை
வார் மெய்ப்பை மெய்யாப்பு

தமிழ் கடவுள் முருகனின் 130 பெயர்கள்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்

 

Advertisement