Andal Veru Peyargal in Tamil | Andal Other Names in Tamil
பொதுவாக ஒவ்வொரு கடவுளுக்கும் பலவிதமான பெயர்கள் இருக்கும். அதாவது, ஒவ்வொரு கடவுளின் சிறைப்பினை போற்றும் வகையில் பல்வேறு விதமான பெயர்கள் இருக்கும். அந்த வகையில் இப்பதிவில் வைணவ கடவுள்களில் ஒருவரான ஆண்டாள் ஆழ்வாரின் வேறு பெயர்கள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
வைணவம் என்பது விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயமாகும். வைணவத்தில் பன்னிரு ஆழ்வார்கள் உள்ளனர். அந்த பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் தமிழகத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த கடவுள்களில் ஒருவர் ஆவர். எனவே, இவரை போற்றி பக்தர்கள் ஆண்டாளுக்கு வழங்கிய வேறு பெயர்கள் என்ன என்பதை பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
ஆண்டாள் என்பவர் யார்.?
ஆண்டாள் என்பவர், 07 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர் ஆவர். அதுமட்டுமில்லாமல், வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வார் இவரே ஆவர். ஆண்டாள் ஆழ்வார் அவர்கள், திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார். இதில் திருப்பாவை என்பது 30 பாடல்கள் அடங்கிய தொகுப்பு ஆகும்.
மார்கழியின் குளிர்காலத் திருவிழாக் காலங்களில் பக்தர்களால் இன்னும் ஓதப்படுவது திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி பாடல் வரிகள் ஆகும். அந்த அளவிற்கு தமிழகத்தில் ஆண்டாளின் பக்தி இன்னும் போற்றப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் ஆண்டாள் கடவுளின் வடிவமாகவே கருதப்படுகிறார்.
அனைத்து வைணவக் கோவில்களில்களிலும் ஆண்டாளுக்ககென்று தனிச் சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக தமிழகத்தில் ஆண்டாள் நினைவாக பல திருவிழாக்கள் கொண்டப்படுகிறது.
ஆண்டாளுக்கு வழங்கப்படும் பெயர்கள்:
- கோதை
- நாச்சியார்
- கோதாதேவி
- சூடி கொடுத்த சுடர்க்கொடி
- கூடாரவள்ளி
- பூமி தேவி
- பூமாதேவி
- கோதாதேவி
- பட்டர்பிரான் செல்வி
Related Post 👇 |
ஆழ்வார்களின் பெயர்கள் |
தமிழ் கடவுள் முருகனின் 130 பெயர்கள் |
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் திருக்கோயிலின் சிறப்பு |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |