காடு என்பதற்கான வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா..?

Advertisement

காடு வேறு பெயர்கள் | Kaadu Veru Peyargal in Tamil

நமது தாய்மொழியான தமிழ் மொழியில் உள்ள வேறு என்ற சொல்லுக்கு அதிக அர்த்தங்கள் மற்றும் மதிப்புகள் உள்ளது. ஏனென்றால் நாம் இப்பொழுது ஒரு பொருளை ஒரு சொல்லை பயன்படுத்தி தான் அழைத்து கொண்டு இருப்போம். ஆனால் அதனை பற்றி நாம் நன்கு ஆராய்ந்து பார்த்தோம் என்றால் அதற்கு பல அர்த்தங்கள் மற்றும் பொருட்களுடன் பல வார்த்தைகள் இருக்கும். அதனால் ஒரு சொல்லை பற்றிய முழுவிவரங்களும் நமக்கு தெரிய வேண்டும் என்றால் நாம் முதலில் அந்த சொல்லை பற்றி நன்கு தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் நாம் அன்றாடம் பார்க்கும் அல்லது பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்றான காடு என்ற வார்த்தைக்கான வேறு சொற்கள் என்னென்ன என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க..

காடு என்றால் என்ன..?

Forest other names in tamil

இந்த உலகில் உள்ள இயற்கையின் படைப்புக்களில் காடுகள் மிகவும் முக்கியமானது ஆகும். இயற்கையின் சமநிலையைச் சீராகப் பேணுவதற்கும் விலங்குகளிற்கு இடையிலான உணவுச்சங்கிலி சீராக இடம்பெறுவதற்கும் காடுகள் மிகமிக இன்றியமையாதவை ஆகும்.

இப்படி இந்த உலகில் இயற்கையின் இன்றியமையாத படைப்பான காட்டினை நமது தமிழ் மொழியில் வேறு சில பெயர்களை வைத்தும் அழைக்கப்படுகிறது அது என்னென்ன பெயர்கள் என்று இங்கு அறிந்து கொள்வோம் வாங்க..

காடு வேறு பெயர்கள்:

  1. கா
  2. கால்
  3. கான்
  4. கானகம்
  5. கணையம்
  6. அடவி
  7. அரண்
  8. அரில்
  9. அறல்
  10. அழுவம்
  11. ஆரண்
  12. இயவு
  13. இயம்பு
  14. தில்லம்
  15. பழவம்
  16. பதுக்கை
  17. புரவு
  18. பொதி
  19. பொழில்
  20. பொச்சை
  21. பொற்றை
  22. வனம்
  23. வல்லை
  24. விடர்
  25. வியல்
  26. மிளை
  27. முளி
  28. முதை
  29. முளரி
  30. சுரம் போன்ற வேறு சொற்களால் அல்லது பெயர்களால் காடு அழைக்கப்படுகிறது.

பொருத்தமான தகவல் 👇

இழிவு என்ற சொல்லுக்கு இப்படியெல்லாம் வேறு சொற்கள் உள்ளதா

வெற்றி என்ற சொல்லுக்கு இணையான வேறு சொற்கள் என்னென்ன தெரியுமா

வானம் என்பதை வேறு எவ்வாறெல்லாம் அழைப்பார்கள் தெரியுமா

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்

 

Advertisement