குளம் வேறு பெயர்கள்
நமது தாய்மொழியான தமிழ் மொழியில் உள்ள வேறு என்ற சொல்லுக்கு அதிக அர்த்தங்கள் மற்றும் மதிப்புகள் உள்ளது. ஏனென்றால் நாம் இப்பொழுது ஒரு பொருளை ஒரு சொல்லை பயன்படுத்தி தான் அழைத்து கொண்டு இருப்போம். ஆனால் அதனை பற்றி நாம் நன்கு ஆராய்ந்து பார்த்தோம் என்றால் அதற்கு பல அர்த்தங்கள் மற்றும் பொருட்களுடன் பல வார்த்தைகள் இருக்கும்.
அதனால் ஒரு சொல்லை பற்றிய முழுவிவரங்களும் நமக்கு தெரிய வேண்டும் என்றால் நாம் முதலில் அந்த சொல்லை பற்றி நன்கு தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் நாம் அன்றாடம் பார்க்கும் அல்லது பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்றான குளம் என்ற வார்த்தைக்கான வேறு சொற்கள் என்னென்ன என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க..
குளம் என்றால் என்ன..?
பொதுவாக நமது முன்னோர்களின் காலகட்டத்தில் தற்பொழுது உள்ள மாதிரியெல்லாம் நவீன முறையில் நாம் பயன்படுத்து தண்ணீரினை சேமித்து வைத்து பயன்படுத்த முடியாது. அதனால் தான் அவர்கள் பெரிய பெரிய கோவில்களை கட்டும்போது, அதில் விழும் மழை நீரை, தெப்ப குளங்களில் சேரும் விதமாக அமைத்தனர்.
மேலும் தங்களது அன்றாட தேவைக்கு பயன்படும் குடிநீருக்கென்று குளங்கள், மற்ற நீர் தேவைகளுக்கு, தனி குளங்கள் என்று, ஊருக்குள்ளும் நிறைய நீர் சேமிப்பு மையங்களை அமைத்தனர்.
இதனின் மூலம் அவர்கள் நிலத்தடி நீர்மட்டத்தை எப்பொழுதும் குறையாமல் பார்த்து கொண்டார்கள். இதனை ஏன் அவர்கள் செய்தார்கள் என்றால் கோடை காலம் வைத்துவிட்டால் சில சமயம் குளங்கள் வற்றிப் போகும்.
ஆண்டு முழுவதும் நிலத்தடி நீர் சேமிக்கப்படுவதால், கிணற்றில் நீர் ஊரி கொண்டே இருக்கும் அதனை அவர்கள் பயன்படுத்தி கொள்வார்கள். இப்படி மக்களுக்கு பலவகையில் பயன்படும் குளத்தை வேறு சில வார்த்தைகளை பயன்படுத்தி அழைப்பார்கள். அவை என்னென்ன வார்த்தைகள் என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.
நெருப்பு என்பதை இவ்வளவு பெயர்களில் குறிப்பிடலாமா
குளம் வேறு பெயர்கள்:
- வாவி
- சலந்தரம்
- வட்டம்
- தடாகம்
- நளினி
- பொய்கை
- குட்டம்
- கிடங்கு
- கண்மாய்
- குட்டை போன்ற வேறு பெயர்களை பயன்படுத்தி தான் தமிழ் மொழியில் குளத்தினை குறிப்பிடுவார்கள்
பொருத்தமான தகவல் 👇
உழவு என்ற வார்த்தையை குறிக்கும் வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா
குழந்தைகளின் விளையாட்டு பெயர்கள் என்னென்ன தெரியுமா
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |