சப்த கன்னியர் பெயர்கள்..! | Saptha Kanni Names in Tamil

Advertisement

சப்த கன்னியர் பெயர்கள் | Saptha Kannigal Names in Tamil | Kannimar Swamy Names in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சப்த கன்னியர் பெயர்கள் (saptha kannigal names in tamil) பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். நம்மில் பலபேர் சப்த கன்னியர் வழிபாடு என்பதை பெரும்பாலான இடங்களில் கேள்வி பட்டிருப்போம். அதுமட்டுமில்லாமல் பல இடங்களில் 7 செங்கல்லை வைத்து அலங்கரித்து, பொங்கலிட்டு படையல் வைப்பதையும் பார்த்து இருப்போம். ஆனால், சப்த கன்னியர் வழிபாடு என்றால் என்ன என்பது பெரும்பாலும் நமக்கு தெரிய வாய்ப்பில்லை. எனவே, அதனை தெரிந்துகொள்ளும் வகையில் இப்பதிவில் சப்த கன்னியர் பெயர்கள் என்பவர் யார்.? என்பதையும் அவர்களின் பெயர்களையும் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

Saptha Kannigal Name List in Tamil:

சப்த கன்னியர் பெயர்கள்

சப்த கன்னியர் யார்.?

சப்த கன்னியர் என்பவர்கள் சப்த மாதாக்கள் எனவும் ஏழு கன்னியர்கள் எனவும் அழைக்கப்படுகிறார்கள். 

சிவபெருமான் அந்தகாசுரன் எனும் அரக்கனுடன் போர் புரியும்போது, அந்தகாசுரன் அரக்கனை அளிக்க சிவபெருமான், பிரம்மா, திருமால், இந்திரன், முருகன், வராக மூர்த்தி, யமன் படைப்பால் தோன்றியவர்களே சப்த கன்னியர்கள். மேலும், சப்த கன்னியர்களின் பெயர்கள் பற்றி விரிவாக பின்வருமாறு பார்க்கலாம்.

சப்த கன்னியர் பெயர்கள்:

  • பிராம்மி
  • மகேசுவரி
  • கௌமாரி
  • நாராயணி
  • வராகி
  • இந்திராணி
  • சாமுண்டி

நடராஜருக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்

1.பிராம்மி:

படைப்பின் கடவுளான பிரம்மாவின் அம்சம் தான் பிராம்மி கன்னியர். அன்னப்பறவையை வாகனமாக கொண்டிருப்பவர். இவர் நான்கு கரங்களுடனும் வெண்ணிற ஆடைகளுடனும் ஸ்படிக மாலையை ஆபரணமாக அணிந்தும் காட்சியளிக்கிறார்.

2.மகேசுவரி:

மகேசுவரானாகிய சிவபெருமானின் அம்சம் தான் மகேசுவரி கன்னியர். இவர் சிவபெருமானை போன்று முக்கண்ணும், ஐந்து திருமுகத்துடனும் காட்சியளிப்பவர். இவரது கரங்களில் பாசம், அங்குசம், மணி, சூலம், பரசு போன்ற ஆயுதங்களை கொண்டு ரிசப வாகனத்தை கொண்டிருப்பார்.

3.கௌமாரி:

கௌமாரனாகிய முருகனின் அம்சம் தான் கௌமாரி கன்னியர். இவர் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார். இவரது பின் இரு கைகளிலும் வஜ்ரம் மற்றும் சக்தி ஆயுதங்கள் இருக்கும்.சேவல் கொடியினை கையில் தாங்கி மயில் பறவையினை வாகனமாக கொண்டிருப்பார்.

4. நாராயணி:

திருமாலின் அம்சம் தான் நாராயணி கன்னியர். இவருக்கு வைஷ்ணவி என்ற மற்றொரு பெயரும் உள்ளது. இவர் நான்கு கரங்களுடனும் பின் இரு கைகளில் சக்கரத்தினையும், சங்கினையும் கொண்டு காட்சியளிக்கிறார்.

5.வராகி:

வராகி கன்னியர் என்பவர் திருமாலின் வராக அம்சம் ஆவார். இவர் பன்றிமுகத்துடனும் நான்கு கரங்களையும் உடைவர் ஆவர். மேலும், இவர் கருப்பு நிற ஆடையுடுத்தி சிம்மம் வாகனத்தில் காட்சியளிப்பவர்.

6.இந்திராணி:

இந்திரனின் அம்சம் தான் இந்திராணி கன்னியர். இவர் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார். இவரின் பின் இரு கைகலில் சக்தியையும், அம்பினையும் ஆயுதமாக கொண்டவர். வெண் யானை வாகனத்தில் காட்சியளிப்பவர்.

7.சாமுண்டி:

ருத்திரனின் அம்சம் தான் சாமுண்டி கன்னியர். முத்தலைச் சூலம், முண்டம், கத்தி, கபாலம் ஆகிய ஆயுதங்களை தரித்தும், பிணத்தின் மீது அமர்ந்தும் காட்சியளிக்கிறார்.

சிதம்பரம் நடராசர் கோயில் ரகசியம் என்ன?

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.

Advertisement