உறக்கம் என்பதை இப்படி எல்லாம் கூட சொல்லலாமா..!

Advertisement

தூக்கம் வேறு பெயர்கள்

உயிர் எழுத்து 12, மெய் எழுத்து 18, உயிர்மெய் எழுத்து 216, ஆயுத எழுத்து 1 இவை எல்லாம் சேர்த்து மொத்தம் 247 எழுத்துக்கள் தமிழில் உள்ளது. இந்த 247 எழுத்துக்களை வைத்து எண்ணற்ற சொற்கள் தமிழில் உள்ளது. நாம் பேசுவது ஒரு சொல்லாக இருக்கும். தமிழ் வார்த்தைகளுக்கு பல சொற்கள் இருக்கிறது.

மற்ற மொழிகளை பற்றி தெரிந்து கொள்ள விட்டாலும் நாம் பேசும் தமிழ் மொழியினை பற்றி அறிந்திருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக மகிழ்ச்சி என்பதை சந்தோசம், ஆனந்தம், புன்னகை என்றெல்லாம் சொல்வோம் அல்லவா.! அது போல எல்லா வார்த்தைகளுக்கு பல பெயர்கள் உள்ளது. அதனால் இந்த பதிவில் தூக்கம் என்பதற்கான வேறு பெயர்களை பற்றி அறிந்து கொள்வோம்.

தூக்கம் என்றால் என்ன.?

இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிருக்கும் தூக்கம் என்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. காலை முதல் மாலை வரை வேலை பார்த்து விட்டு இரவில் உடலிற்கு ரெஸ்ட் கொடுக்கும் நிலையே தூக்கம் என்பதாகும்.

தூக்கம் இல்லையென்றால் எவராலும் சரியாக வேலை செய்ய முடியாது. தூக்கம் இல்லையென்றால் உடலானது சோர்வாக காணப்படும்.

இன்றைய கால காலத்தில் பல பெருகும் தூக்கமின்மை பிரச்சனைஏற்படுகிறது , காரணம் வீட்டில் உள்ள டென்ஷன், வேலையில் உள்ள டென்சன் போன்றவற்றால் தூக்கம் வரமாட்டிக்கிறது. தூக்கம் என்பது ஒவ்வொரு உயிரினத்திற்கும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

தூக்கத்தின் வகைகள்: 

இலகுவான தூக்கம்:

இலகுவான தூக்கம் என்பது தூக்கத்திற்கும், விளிப்பிற்கு இடையே நடக்க கூடியது. இந்த நிலையில் உள்ளவர்கள் சிறிய சத்தம் கேட்டாலே எழுந்துவிடுவார்கள்.

உண்மையான தூக்கம்:

இலகுவான தூக்கத்தின் அடுத்த நிலையில் வருவது இது. இந்த நிலையில்தான் பெரும்பாலானவர்களின் தூக்கம் நிகழ்கிறது.

ஆழமான தூக்கம்:

ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளவர்களை எழுப்பினால் 2 நிமிடங்களுக்கு பிறகு தான் நிதானமாகவேபேசுவார்கள்.

மிக ஆழமான தூக்கம்:

மிக ஆழமாக தூங்குபவர்களை எழுப்பினால் தன்னை சுற்றி என்ன நடக்கிறது நாம் எங்கு இருக்கிறோம் என்பது கூட தெரியாமல் தடுமாறுவார்கள்.

தூக்கம் வேறு பெயர்கள்:

  • உறக்கம்
  • துயில்
  • நித்திரை
  • சயனம்

மேல் கூறப்பட்டுள்ள பெயர்களால் தூக்கத்தை அழைக்கலாம்.

த வரிசை பெண் குழந்தை பெயர்கள் Latest 

 

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்

 

Advertisement