நெருப்பு வேறு பெயர்கள்
இன்றைய சூழலில் நமது உலகம் அனைத்து பலவகையில் அபரிவிதமான வளர்ச்சிகளை அடைந்து கொண்டிருக்கின்றது. அதனால் நாம் அதற்கு ஏற்றார் போல் நம்மையும் நமது அறிவு திறனையும் நன்கு வளர்த்து கொள்ள வேண்டும். அப்படி வளர்த்து கொள்ள வேண்டும் என்றால் நாம் முதலில் அனைத்தையும் தேடி தேடி கற்று கொள்ள வேண்டும். நாம் மற்ற தகவல்களை கற்று கொள்வதற்கு முன்னால் நமது தாய்மொழியான தமிழ் மொழியை பற்றி முழுமையாக தெரியுமா..? என்றால் நம்மில் பலரின் பதில் இல்லை என்றே இருக்கும்.
அதனால் தான் இன்றைய பதிவில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு வார்த்தையான நெருப்பு என்பதை குறிக்கும் வேறு பெயர்கள் என்னென்ன என்பதை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
நெருப்பு என்றால் என்ன..?
நெருப்பு என்பது ஐம்பூதங்களில் ஒன்று ஆகும். மனிதர்களில் உயிர் எவ்வாறு நிலையற்றது அதேபோல் தான் இந்த நெருப்பும் நிலையற்றது. அதாவது ஒரு நாள் இந்த நெருப்பு இருக்கும் மறுநாள் இருப்பதில்லை. நாள் கணக்கு கூட இல்லை ஒரு நிமிடம் இருக்கும் அடுத்த நிமிடம் இருப்பதில்லை.
இந்த நெருப்பு என்பது வெப்பத்தை வெளியேற்றும் வேதியியல் செயலான தகனத்தின்போது, பொருட்களில் விரைவான ஆக்சிசனேற்றம் நிகழ்ந்து, பிழம்புகளுடன் கூடிய வெப்பம், ஒளி ஆகியவற்றை வெளியேற்றி எரியும் ஒரு நிகழ்வு ஆகும்.
இப்படிப்பட்ட நெருப்பு மனிதர்களால் பல தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தேவைப்படுகிறது. இந்த நெருப்பை மக்கள் பொதுவாக அக்கினி தேவன் என வேத காலம் தொட்டு இன்று வரை வழிபட்டு வருகின்றனர்.
ஆலயங்களில் வழிபடப்படும் மிக முக்கியமான தெய்வமாக அக்கினி தேவன் போற்றப்படுகிறார். எனவே, இவ்வாறான பல காரணங்களினால் நெருப்பு என்பது சிறப்புடையதாக இன்றளவும் உள்ளது.
இவ்வாறு பல சிறப்புகளை கொண்டுள்ள நெருப்பினை வேறு எந்தெந்த பெயர்களில் குறிப்பிடப்படுகிறது என்பதை இங்கு காணலாம் வாங்க.
உழவு என்ற வார்த்தையை குறிக்கும் வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா
நெருப்பு வேறு பெயர்கள்:
- தீ
- தனல்
- அக்கினி
- அரி
- கனல்
- சுடர்
- தழல்
- அங்கி
- வன்னி
- அனல்
- கனலி
- ஆரல்
- எரி
- வசு
- அங்காரகன்
- எழுநா
- அழல்
- இறை
- காட்டுத் தீ
- காட்டெரி
- தாவம்
- வரையனல்
- தீபம்
- தீவிகை போன்ற வேறு பெயர்களை பயன்படுத்தி தான் தமிழ் மொழியில் நெருப்பினை குறிப்பிடுவார்கள்.
பொருத்தமான தகவல் 👇
குழந்தைகளின் விளையாட்டு பெயர்கள் என்னென்ன தெரியுமா
காடு என்பதற்கான வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |