வியாபாரம் வேறு பெயர்கள் | Viyabaram Veru Sol in Tamil

Advertisement

வியாபாரம் வேறு பெயர்கள் | Viyabaram Veru Sol in Tamil

இந்த காலத்தை பொறுத்தவரை சாதாரணமாக 10 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரையிலான பொருட்கள் ஏதாவது வாங்க வேண்டும் என்றால் அவை எல்லாம் ஒரு வியாபாரமாக தான் இருக்கிறது. அப்படி பார்த்தால் நாள் ஒன்றுக்கு அடிப்படை பொருட்கள் இல்லாமல் எவ்வளவோ பொருட்கள் வாங்கி வருகிறோம். அந்த வகையில் இந்த உலகமே வியாபாரத்தினால் தான் ஓடிக்கொண்டிருக்கிறது என்றும் கூறலாம்.

அதேபோல் சொந்தமாக சுயதொழில் செய்ய வேண்டும் என்றும் நினைத்து சின்னதோ, பெரியதோ என்ற முறையில் முதலீடு போட்டு வியாபாரம் செய்து வருபவர்களும் இருந்து கொண்டு தான் உள்ளார்கள். எனவே வியாபாரம் என்பதை பற்றி சொல்ல வேண்டும் என்றால் சொல்லிக்கொண்டே போகலாம். ஏனென்றால் இதில் எண்ணற்றவை இருந்து கொண்டே தான் இருக்கிறது. அவ்வாறு இருந்தாலும் கூட வியாபாரம் என்ற சொல்லின் வேறு பெயர்கள் பற்றிய விவரங்கள் பலருக்கும் தெரியவில்லை. அதனால் இன்றைய பதிவில் வியாபாரம் என்பதின் வேறு பெயர்கள் பற்றி பார்க்கலாம் வாங்க..!

வியாபாரம் வேறு சொல் என்ன:

  • தொழில்
  • வர்த்தகம்
  • வாணிபம்
  • வணிகம்

வியாபாரம் என்ற சொல்லின் வேறு பெயர்கள் மேல் கூறப்பட்டுள்ள அனைத்தும் ஆகும்.

வியாபாரம் English Word:

வியாபாரம் என்ற சொல்லிற்கான ஆங்கில வார்த்தை Business ஆகும்.

வியாபாரம் என்றால் என்ன..?

ஒரு நுகர்வோருக்கு தேவைப்படும் பொருட்களை சரியான விலையிலும், தரத்திலும் வழங்கப்படும் முறையே வியாபாரம் எனப்படும். அந்த வகையில் பொருளுக்கான தக்க பணத்தினை பெற்றுக்கொண்டு பொருட்கள் வழங்கப்டுகிறது.

அந்த வகையில் வியாபாரம் என்பது வாடிக்கையாளர் மற்றும் விற்பனை ஆளர் என இவர்கள் இருவருக்குமான நடவடிக்கைகள் ஆகும். மேலும் இவ்வாறு விற்பனை செய்யும் பொருட்கள் சொந்தமாக உற்பத்தி செய்வது அல்லது இறக்குமதி மூலம் பொருட்களை வாங்கி விற்பனை செய்வது என இத்தகைய முறைகளில் அடங்குகிறது.

வியாபாரம் வகைகள்:

  1. கூட்டாண்மை
  2. தனி உரிமையாளர்
  3. பெரு நிறுவனங்கள்

சிம்மாசனம் வேறு சொல் என்ன தெரியுமா

அல்லி வேறு பெயர்கள்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement