100 வண்ணங்கள் பெயர்கள் தமிழ் | Vannangal Peyargal in Tamil | தமிழ் வண்ணங்கள் 100
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் 100 வகையான வண்ணங்கள் பெயர்களை தொகுத்து பின்வருமாறு பட்டியலிட்டுள்ளோம். பெரும்பாலும் நமக்கு நிறங்கள் என்றால் 7 வகையான நிறங்கள் மட்டுமே தெரியும். ஆனால், நமக்கு தெரியாத பலவகையான நிறங்கள் உள்ளன. ஆனால், நமக்கு அதனை பற்றி தெரியாது. ஆகையால், அதனை பற்றி தெரிந்துகொள்ளும் வகையில், இப்பதிவில் நூற்றுக்கும் மேற்பட்ட வண்ணங்களின் பெயர்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம்.
7 வகை வண்ணங்கள்:
![100+] Spectrum Wallpapers | Wallpapers.com](https://wallpapers.com/images/featured/spectrum-3uzcyu2qvymgw4t0.jpg)
நாம் எந்த பொருட்கள் வாங்க நினைத்தாலும் அதனின் விலையை பார்ப்பதற்கு முன் அதின் கலரை தான் பார்ப்போம். கலர் நமக்கு பிடித்தாக இருந்தால் தான் அதனை வாங்குவோம். ஆக இந்த கலர்களில் நமக்கு நிறைய இருக்கிறது. எல்லாமே நமக்கு தெரியுமா என்று கேட்டால் நிச்சயம் இல்லை. முக்கியமான 7 கலர்கள் இருக்கிறது. அதனை பற்றி மட்டும் தான் நமக்கு தெரியும். நாம் எல்லா கலர்களையும் அறிந்து வைத்திருப்பது அவசியமானது. ஏனென்றால் உங்களை யாரோ ஒருவர் ஆடை எடுத்து வர சொல்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். அப்போ அவர்களுக்கு அடையின் நிறத்தை சொல்ல வேண்டியிருக்கும். அப்போ உங்களுக்கு தெரியாத கலராக இருந்தால் அவர்களிடம் எப்படி சொல்வீர்கள். அதனால் எல்லா கலரையும் அறிந்து வைக்க வேண்டும்.
தமிழில் உள்ள வண்ணங்கள் எத்தனை:
- ஊதா
- கருநீலம்
- நீலம்
- பச்சை
- மஞ்சள்
- செம்மஞ்சள் (ஆரஞ்சு)
- சிவப்பு
- சாம்பல்
- பழுப்பு
- ஆரஞ்சு
- வெள்ளை
நம் அனைவருக்குமே இந்த 7 வகையான நிறங்கள் மட்டுமே தெரியும். ஆனால், இதனை தவிர்த்து 100 -ற்கும் மேற்பட்ட நிறங்கள் உள்ளது. அவை அனைத்தையும் தொகுத்து பின்வருமாறு பட்டியலிட்டுள்ளோம்.
100 வண்ணங்கள் பெயர்கள்:

தமிழ் வண்ணங்கள் 100:
| வண்ணங்கள் பெயர்கள் தமிழில் | வண்ணங்கள் பெயர்கள் ஆங்கிலத்தில் | |
| 01 | அடர் சிவப்பு | Cramoisy |
| 02 | அடர் நீலம் | Perse / Smalt |
| 03 | அடர் மஞ்சள் | Gamboge |
| 04 | அயிரை/ அசரை | Sandy colour |
| 05 | அரத்த(ம்) நிறம் | Heliotrope / Haematic |
| 06 | அருணம் | Bright red |
| 07 | அவுரி | Indigo |
| 08 | அழல் நிறம் | Reddish colour of fire |
| 09 | ஆழ் சிவப்பு | Cinnabar |
| 10 | ஆழ் செந்நீலம் | Claret |
| 11 | ஆழ் பழுப்பு | Brunneous |
| 12 | ஆழ் பைம்மஞ்சள் | Citrine |
| 13 | ஆழ்சிவப்பு | Cramoisy |
| 14 | ஆழ்நீலச் சிவப்பு | Aubergine |
| 15 | இடலை (ஆலிவ்வு நிறம்) | Olivaceous |
| 16 | இருள் சிவப்பு | Puccoon |
| 17 | இருள்சாம்பல் | Slate |
| 18 | இள மஞ்சள் | Flavescent / Primrose |
| 19 | ஈயம் நிறம் | Plumbeous |
| 20 | ஈரல்நிறம் | Dark red colour, purple colour |
| 21 | உறைபால் | Whey |
| 22 | எண்ணெய்க்கறுப்பு | Dark black colour |
| 23 | எலுமிச்சைம் | Citreous |
| 24 | ஒண்சிவப்பு | Cardinal |
| 25 | ஒளிர் செஞ்சிவப்பு | Phoeniceous |
| 26 | ஒளிர் செம்மை | Coccineous |
| 27 | ஒளிர் வெண்கலம் | Aeneous |
| 28 | ஒளிர் வெண்கலம் | Aeneous |
| 29 | ஒளிர்சிவப்பு | Puniceous |
| 30 | ஒளிர்மஞ்சள் | Sulphureous / Vitellary |
| 31 | கசகசாச் சிவப்பு | Ponceau |
| 32 | கடல்நீல நிறம் | Ultramarine |
| 33 | கடற்பச்சை | Cerulean |
| 34 | கத்தரிநீலம் | Periwinkle |
| 35 | கபிலை / புகர்நிறம் | Tawny, brown or swarthy colour |
| 36 | கரு நிறம் | Sable |
| 37 | கருஞ்சிவப்பு | Porphyrous / Purpureal |
| 38 | கரும்பச்சை | Corbeau |
| 39 | கருமை | Nigricant / Nigrine |
| 40 | காயாம்பூ நிறம் | Purple colour |
| 41 | காளிமம் | Black colour |
| 42 | கிளிச்சிறை | Gold resembling the parrot’s wing in colour |
| 43 | குங்குமச் சிவப்பு | Vermeil |
| 44 | குங்குமப்பூ(நிறம்) | Croceate / Saffron |
| 45 | குரால் | Dim, tawny colour |
| 46 | குருதிச்சிவப்பு | Erythraean / Sanguineous / Incarnadine |
| 47 | குருதிச்செம்மை | Vermilion |
| 48 | கோமேதக நிறம் | Topaz |
| 49 | சருகிலை நிறம் | Filemot |
| 50 | சாம்பல் | Cinerious |
Colour ஹார்ட் எமோஜில் இவ்வளவு அர்த்தங்கள் உள்ளதா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே..!
All Color Name List:
| வண்ணங்கள் பெயர்கள் தமிழில் | வண்ணங்கள் பெயர்கள் ஆங்கிலத்தில் | |
| 51 | சாம்பல் பச்சை | Caesious / Sage |
| 52 | சாம்பல் மஞ்சள | Isabelline |
| 53 | சுடர் நிறம் | Flammeous |
| 54 | சுடுமண் நிறம் | Terracotta |
| 55 | சுதை வெண்மை | Cretaceous |
| 56 | செக்கர் | Reddish sky |
| 57 | செங் கருநீல நிறம் | Violet / Violaceous |
| 58 | செங்கருப்பு | Piceous |
| 59 | செங்கல்மங்கல் | Dim red colour |
| 60 | செங்கற்சிவப்பு | Lateritious / Testaceous |
| 61 | செந்தீவண்ணம் | Colour of glowing fire |
| 62 | செந்தூரச்சிவப்பு | Minium |
| 63 | செப்புநிறம் | Dark red colour |
| 64 | செம்பட்டை | Brown colour of hair |
| 65 | செம்பவளம் | Deep red colour, Crimson colour |
| 66 | செம்பழுப்பு | Sinopia / Sorrel |
| 67 | செம்பு | Copper colour |
| 68 | செம்பூச்சி | Kermes |
| 69 | செம்பொன் | Titian |
| 70 | செம்மஞ்சள் | Jacinthe |
| 71 | செவ்வல் (செந்நிறம்) | Redness |
| 72 | சோணம் | Red colour, crimson colour |
| 73 | தசை நிறம் | Sarcoline |
| 74 | தவிட்டுநிறம் | Brown, dun colour |
| 75 | திமிரம் | Colour of Darkness |
| 76 | தும்பை நிறம் | Pure white colour |
| 77 | துமிரம் | Deep red colour |
| 78 | துரு நிறம் | Ferruginous |
| 79 | துருச் சிவப்பு | Rubiginous |
| 80 | துவர் சிவப்பு | Scarlet Red colour |
| 81 | துவரி/காவிநிறம் | Salmon colour |
| 82 | தூயபழுப்பு | Sepia |
| 83 | தெள்ளுப்பூச்சி நிறம் | Puce |
| 84 | நட்டுச்சினைமண் | crab’s spawn |
| 85 | நல்சிவப்பு | Coquelicot |
| 86 | நறுமஞ்சள் | Lutescent |
| 87 | நன்மஞ்சள் | Luteolous |
| 88 | நன்னிறம் | White colour |
| 89 | நீல நிறம் | Azuline |
| 90 | நீல மணி | Sapphire |
| 91 | நீலச்சாம்பல் | Glaucous / Cesious / Gridelin / Lovat |
| 92 | நீலச்சிவப்பு | Amaranthine / Solferino |
| 93 | நீலப்பச்சை | Turquoise / Viridian |
| 94 | பச்சை | Chlorochrous |
| 95 | பசுமை | Virid |
| 96 | பழுக்காய் | Yellowish, orange or gold with red colour |
| 97 | பழுப்பு மஞ்சள் | Fulvous |
| 98 | பழுப்புச் சிவப்பு | Castaneous / Rufous / Russet / Umber |
| 99 | பழுப்புச்சாம்பல் | Greige / Taupe |
| 100 | பளீர்சிவப்பு | Stammel |
டூத் பேஸ்டில் கொடுக்கப்பட்டுள்ள நிறங்கள் சொல்லும் கதை என்ன..?
100 வண்ணங்கள் பெயர்கள் தமிழ்:
| வண்ணங்கள் பெயர்கள் தமிழில் | வண்ணங்கள் பெயர்கள் ஆங்கிலத்தில் | |
| 01 | பனிவெண்மை | Niveous |
| 02 | பாணிச்சாய் /கள்போன்ற முத்துநிறம் | Colour of a class of pearls, resembling that of toddy |
| 03 | பால்வண்ணம் | White colour |
| 04 | புகர் நிறம் | Tawny / Tan |
| 05 | புகைக்கரி | Fuliginous |
| 06 | புள்ளிச் சாம்பல் | Liard grey |
| 07 | புற்பச்சை | Prasinous |
| 08 | புறவு | Columbine |
| 09 | பூஞ்சல் (மங்கனிறம்) | Brownish colour |
| 10 | பூஞ்சாயம் | Deep, ruddy colour |
| 11 | பூவல் | Red colour |
| 12 | பைந்நீல நிறம் | Teal |
| 13 | பைம்பொன் | Chrysochlorous |
| 14 | பொன் மஞ்சள் | Goldenrod |
| 15 | பொன்மஞ்சள் | Luteous |
| 16 | பொன்மை | Aurulent |
| 17 | மகரம் | Pink colour |
| 18 | மங்கல் பழுப்பு | Fuscous |
| 19 | மங்கல் பழுப்பு | Khaki |
| 20 | மங்கல்பச்சை | Eau-de-nil |
| 21 | மஞ்சள் | Xanthic / Icterine / Icteritious |
| 22 | மஞ்சள் பச்சை | Chartreuse / Zinnober |
| 23 | மஞ்சள் பழுப்பு | Lurid / Ochre |
| 24 | மஞ்சள்சிவப்பு | Wallflower |
| 25 | மணிச்சிவப்பு | Rubious |
| 26 | மணிநிறம் | Dark blue colour, as of sapphire |
| 27 | மயில்நீலம் | Pavonated |
| 28 | மரகதப்பச்சை | Smaragdine |
| 29 | மருப்பு | Eburnean |
| 30 | மல்லிகை மஞ்சள் | Jessamy |
| 31 | மாமை | Dark-brown colour |
| 32 | முக்கூட்டரத்தம் | Red colour produced by chewing betel, arecanut and lime |
| 33 | முத்துச்சாம்பல் | Griseous |
| 34 | வளர்பச்சை | Virescent |
| 35 | வாதுமை | Ibis |
| 36 | வான் நீலம் | Cyaneous |
| 37 | விண் நீலம் | Celeste |
| 38 | விழி வெண்மை | Albugineous |
| 39 | வெங்காயப் பச்சை | Porraceous |
| 40 | வெண்சாம்பல் | Hoary |
| 41 | வெண்மங்கல் | Leucochroic |
| 42 | வெண்மஞ்சள் | Ochroleucous |
| 43 | வெளிர் நீலம் | Azure |
| 44 | வெளிர் பச்சை | Celado |
| 45 | வெளிர் மஞ்சள் | Nankeen |
| 46 | வெளிர் மஞ்சள் பச்சை | Tilleul |
| 47 | வெளிர்நீலம் | Watchet |
| 48 | வெளிர்பழுப்பு | Suede |
| 49 | வெளுப்பு | Albicant |
| 50 | வைக்கோல் நிறம் | Stramineous |
| இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |














