ஐயப்பனின் 1008 பெயர்கள்.!

Advertisement

1008 Names of Ayyappa in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஐயப்பனின் 1008 பெயர்களை தொகுத்து பின்வருமாறு பட்டியலிட்டுள்ளோம். ஐயப்பன் சுவாமிக்கு பல்வேறு பெயர்கள் உள்ளது. ஆனால், அந்த பெயர்கள் பற்றி நம்மில் பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பூதநாதன், பூலோகநாதன், எருமேலிவாசன், கலியுகவரதன், பந்தள ராஜன், பம்பாவாசன், சபரிவாசன், சபரிகிரீசன், மணிகண்டன் போன்ற பெயர்கள் மட்டுமே நாளில் பலருக்கும் தெரியும்.

ஐயப்பனை வழிப்படும்போது ஐயப்பனுடைய 1008 பெயர்களை கூறி வழிபடுவது மிகவும் நல்லது. ஆகையால் நீங்கள் ஐயப்பனின் 1008 பெயர்கள் பற்றி தெரிந்துகொள்ள விரும்புவீர்கள். எனவே, ஐயப்பனுடைய 1008 பெயர்களை நீங்கள் தேடினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

ஐயப்பன் 108 சரணம் கோஷம்..!

1008 ஐயப்பன் பெயர்கள்:

1008 ஐயப்பன் பெயர்கள்

  1. அரிகர சுதனே
  2. அச்சங்கோவில் அரசே
  3. அகிலலோக நாயகனே
  4. அகத்தில் நிறைந்தவனே
  5. அகங்குளிரச் செய்வோனே
  6. அகந்தை அழிப்பவனே
  7. அஞ்ஞானம் ஒழிப்பவனே
  8. அருந்தமிழ்த் தேனே
  9. அன்பர்க்கு அருள்பவனே
  10. அன்பின் வடிவானவனே
  11. அருளும் தெய்வமே
  12. அல்லல் களைபவனே
  13. அடியவர்க்கு எளியவனே
  14. அகங்காரம் ஒழிப்பவனே
  15. அலங்காரப் பிரியனே
  16. அச்சந் தவிர்ப்பவனே
  17. அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகனே
  18. அன்னதானப்பிரபுவே
  19. அருள்மிகு தெய்வமே
  20. அக்கினிக் குண்டத்துறைபவனே
  21. அடியவர் குல தெய்வமே
  22. அடியவர் வினை தீர்ப்பவனே
  23. அகமாயை அளிப்பவனே
  24. அறிவு தரும் ஒளிசுடரே
  25. அன்பர்க்கு அன்பனே
  26. அன்பே ! அருளே !
  27. அமுதே ! தேனே !
  28. அறிவே ! பொருளே !
  29. அறத்தின் தலைவா !
  30. அருள் பொழியும் தேவனே
  31. அறம் காக்கும் தெய்வமே
  32. அன்புளத்தில் உறைபவனே
  33. அழியாத பேரொளியே
  34. அழகின் திருவுருவே
  35. அடிபணிந்தாரக்கு அருள்பவனே
  36. அகத்தினிலே நிறைந்திடுவாய்
  37. அஞ்ஞானம் அழித்திடுவாய்
  38. அகங்குளிரச் செய்திடுவாய்
  39. அருள் மழை பொழிந்திடுவாய்
  40. அச்சமெல்லாம் போக்கிடுவாய்
  41. அடிபணிந்தோம் காத்திடுவாய்
  42. அறிவின்மையை போக்கிடுவாய்
  43. அருந்தமிழாய் இனித்திடுவாய்
  44. அகிலமெல்லாம் காத்திடுவாய்
  45. அல்லல் எல்லாம் தீர்த்திடுவாய்
  46. அடியவர்க்கு அருளிடுவாய்
  47. அடிபணிந்தோம் வினைதீர்ப்பாய்
  48. அறிவு தந்து ஒளிதருவாய்
  49. அன்புள்ளம் தந்திடுவாய்
  50. அடியவர் குலம் காப்பாய்
  51. அறம் பிழைக்கத்துணை நிற்பாய்
  52. அருளமுதம் பொழிந்திடுவாய்
  53. அகிலமெல்லாம் காப்பவனே
  54. அகிலாண்டேசுவரி மகனே
  55. அண்ணபூரணி சுதனே
  56. அங்கயற்க்கண்ணி புத்திரனே
  57. அக்கிரமத்தை அழிப்பவனே
  58. அகத்தியர்க்கு அருளியவனே
  59. அடிமைத்தளை களைபவனே
  60. அருமருந்தே ! அமுதே !
  61.  அற்புதமே ! கற்பகமே !
  62.  அஞ்சா நெஞ்சம் அழித்திடுவாய்
  63. அழியாப் புகழ் தருவாய்
  64. அதிர்வேட்டுப் பிரியனே
  65. அருள்பொழியும் சாஸ்தாவே
  66. அம்மையும் அப்பனும் நீயே
  67. அடைக்கலம் நீயே
  68. அண்டினோரை ஆதரிப்பாய்
  69. அமைதி காத்திடுவாய்
  70. அம்பிகையின் புதல்வனே
  71. அவனியெல்லாம் காப்பவனே
  72. அருந்தவப்புத்திரனே
  73. அழுதவரை ஆதரிப்பாய்
  74. அறவழி காட்டிடுவாய்
  75. அறிவொளி ஊட்டிடுவாய்
  76. அறியாமை அகற்றிடுவாய்
  77. அனாதை ரட்சகனே !
  78. அநியாயம் அளிப்பவனே
  79. 9 அருந்தவசிகள் தலைவனே !
  80. அறிவாற்றல் தந்திடுவாய்
  81. அடியவரின் வழித்துணையே
  82. அழியாப் பரம்பொருளே
  83. அம்பிகையின் மகனே
  84. அரக்கியை அழித்தவனே
  85. அரனார் புத்திரனே
  86. அருட்பெருஞ்சோதியே
  87. ஆரியங்காவு அய்யாவே
  88. ஆபத்தில் காப்பவனே
  89. ஆசைகளைத் தவிர்ப்பவனே
  90. ஆதிபராசக்தி மகனே
  91. ஆறுமுகன் தம்பியே
  92. ஆதி பரம்பொருளே
  93. ஆக்கம் அளிப்பவனே
  94. ஆதாரம் நீயே
  95. ஆசிரியன் ஆனவனே
  96. ஆடம்பரம் வெறுப்பவனே
  97. ஆணவம் அழிப்பவனே
  98. ஆதரிக்கும் தெய்வமே
  99. ஆசிமலர் பொழிந்திடுவாய்
  100. ஆதிசக்தி மைந்தனே
  101. ஆதி நீயே ! ஜோதி நீயே !
  102. அறுபடையான் தம்பியே
  103. ஆனைமுகன் தம்பியே
  104. ஆற்றலைக் கொடுப்பவனே
  105. ஆனந்த ரூபனே
  106. ஆனந்தம் அளிப்பவனே
  107. ஆயிரம் கண்ணுடையாய்
  108. ஆதிமூல நாயகனே
  109. ஆண்மை தரும் தெய்வமே
  110. ஆண்மையின் இலக்கணமே
  111. ஆதரிப்பாய் ஏழைகளை
  112. ஆதவனின் பேரொளியே
  113. ஆதாரம் நீயே அருளிடுவாய்
  114. ஆய்கலை அத்தனையும் கற்றவனே
  115. ஆராவமுதனே | ஐயனே |
  116. ஆலால சுந்தரன் சுதனே
  117. ஆவல் தணிப்பவனே
  118. ஆவிபொருள் அடிசரணம்
  119. ஆழிகாலத் தலைவனே
  120. ஆளப் பிறந்தவனே
  121. ஆற்றல் மிகுந்தவனே
  122. ஆதியந்த மற்றவனே
  123. ஆரண்ய வாசனே
  124. ஆதிக்கும் ஆதியே
  125. ஆதிசிவன் மகளே
  126. ஆயுளைத் தருபவனே
  127. ஆலகாலன் மகனே
  128. ஆயுளைத் தந்திடுவாய்
  129. ஆனந்த சித்தனே
  130. ஆனந்தம் மிகு பஜனைப் பிரியனே
  131. இன்தமிழ்ச் சுவையே
  132. இன்பமே | தேனே |
  133. இச்சை தவிர்ப்பவனே
  134. இருமுடிப் பிரியனே
  135. இம்மையில் அருள்பவனே
  136. இன்னல் களைவோனே
  137. இஷ்ட குல தெய்வமே
  138. இளமுருகன் தம்பியே
  139. இனியவனே | எளியவனே !
  140. இல்லமெல்லாம் உறைபவனே 1
  141. இசையில் சிரிப்பவனே
  142. இடர் களையும் ஏந்தலே
  143. இணையில்லா தெய்வமே
  144. இதயத்தில் நிறைந்தவனே
  145. இரக்கம் மிகுந்தவனே
  146. இருள் நீங்கச் செய்வோனே
  147. இல்லறத்தைக் காப்பவனே
  148. இறைவா நிலை தருவோனே
  149. இறைவனின் திருமகளே
  150. இன்பங்கள் தருபவனே
  151. இன்னிசைக்கு இசைபவனே
  152. இளமை தருபவனே
  153. இளமையின் திருவுருவே
  154. இன்தமிழாய் இனிப்பவனே
  155. இச்சை தவிர்ப்பாய்
  156. இருமுடி சுமந்துவந்தோம்
  157. இம்மையில் அருளிடுவாய்
  158. இன்னல் களைந்திடுவாய்
  159. இனிய மனந்தருவாய்
  160. இல்லத்தில் உறைந்திடுவாய்
  161. இடர்களை நீக்கிடுவாய்
  162. இதயத்தில் நிறைந்திடுவாய்
  163. இருள் நீங்கச் செய்திடுவாய்
  164. இல்லறத்தைக் காத்திடுவாய்
  165. இருமுடியில் இருப்பவனே
  166. இன்பங்கள் தந்திடுவாய்
  167. இன்னிசைக்கு இசைந்திடுவாய்
  168. இளமையினைத் தந்திடுவாய்
  169. இன்தமிழாய் இளித்திடுவாய்
  170. இடபத்தோன் திருமகனே
  171. ஈசனின் திருமகனே
  172. ஈடில்லாத் தெய்வமே
  173. ஈஸ்வரியின் புத்திரனே
  174. ஈகையிற் சிறந்தவனே
  175. ஈடில்லா வாழ்வளிப்பாய்
  176. ஈகையுள்ளம் தருபவனே
  177. ஈகையுள்ளம் தந்திடுவாய்
  178. உமையவள் புத்திரனே
  179. உண்மைப் பரம்பொருளே
  180. உத்தமனே ! சத்தியனே !
  181. உலகாளும் தெய்வமே
  182. உலகின் முதற்பொருளே
  183. உறுதி மிகக் கொண்டவனே
  184. உள்ளம் எல்லாம் நிறைந்தவனே
  185. உண்மையுள்ளம் கொண்டவனே
  186. உத்தமருக்கு அருள்பவனே
  187. உணர்வில் ஒளிர்பவனே
  188. உண்மை நெறி காட்டிடுவாய்
  189. உயிரெல்லாம் காப்பவனே
  190. உடல் நோய் தீர்ப்பவனே
  191. உளநோய் ஒழிப்பவனே
  192. உற்றதுணையானவளே
  193. உள்ளத்தில் உறைபவனே
  194. உண்மையின் திருவுருவே
  195. உயிர்படைத்த நாயகனே
  196. உத்திரத்தில் உதித்தவனே
  197. உருவமிலாப் பேருருவே
  198. உருத்திராட்சம் அணிந்தவளே
  199. உண்மையினை உணர்த்திடுவாய்
  200. உத்தமனாய் ஆக்கிடுவாய்
  201. உலகமெல்லாம் காத்திடுவாய்
  202. உறுதியுள்ளம் காத்திடுவாய்
  203. உள்ளத்தில் நிறைந்திடுவாய்
  204. உண்மையுள்ளம் தந்திடுவாய்
  205. உத்தமரைக் காத்திடுவாய்
  206. உணர்வில் உணர்த்திடுவாய்
  207. உயிரெல்லாம் காத்திடுவாய்
  208. உடல் நோயைத் தீர்த்திடுவாய்
  209. உளநோயை ஒழித்திடுவாய்
  210. உற்ற துணையாயிருப்பாய்
  211. ஊமைக்கருள் புரிந்தவனே
  212. ஊழ்வினை ஒழிப்பவனே
  213. ஊக்கம் மிகுந்தவனே
  214. ஊனுடலைக் காப்பவளே
  215. ஊமைகளைக் காத்திடுவாய்
  216.  ஊழ்வினையை அழித்திடுவாய்
  217. ஊக்கம் தந்திடுவாய்
  218. ஊரெல்லாம் காத்திடுவாய்
  219. ஊர்தோறும் உறைபவனே
  220. எல்லோர்க்கும் அருள்பவனே
  221. எளியவர்க்கு எளியவனே
  222.  எங்கள் குலதெய்வமே
  223. எந்நாளும் காப்பவனே
  224. எழில் மிக்க தெய்வமே
  225. எழுபிறப்பும் நாயகனே
  226. எந்தையே ! ஐயனே !
  227. எந்தாயே தெய்வமே |
  228. என்குருவே ! ஈசனே |
  229. எட்டுக்குடிவேலன் தம்பியே !
  230. எண்ணத்தில் நிறைந்தவனே
  231. எங்கும் நிறைந்தவனே
  232.  என்னுள்ளத்தில் உறைபவனே
  233. என்குறைகள் தீர்ப்பவனே
  234. எங்கும் உன் அருளே
  235. எமையாளும் தெய்வமே
  236.  எமக்கருள் புரிந்தவனே
  237. எல்லாம் உன் விளையாட்டே
  238. எல்லாம் வல்லவனே
  239. எண்ணியதை அருள்பவனே
  240. எந்நாளும் துணைநீயே
  241. எல்லோர்க்கும் அருள்செய்வாய்
  242. எளியவர்க்கு இரங்கிடுவாய்
  243. எங்கள் குலம் காத்திடுவாய்
  244. எந்நாளும் துணையிருப்பாய்
  245. எழில் உருவம் தந்திடுவாய்
  246. எழுபிறப்பும் துணையிருப்பாய்
  247. எந்தையாய்க் காத்திடுவாய்
  248. எந்தாயாய் அருள்செய்வாய்
  249. என்குருவாய் வந்திடுவாய்
  250. எண்ணத்தில் உறைந்திடுவாய்
  251. எங்கும் நிறைந்திருப்பாய்
  252. என்னுளத்தில் சிரித்திருப்பாய்
  253. எம்குறைகள் நீக்கிடுவாய்
  254. எமையாண்டு அருள்புரிவாய்
  255. எண்ணியதைத் தந்திடுவாய்
  256. எம்முகம் பார்த்திடுவாய்
  257. எருமேலி தர்மசாஸ்தாவே
  258. ஏழைப்பங்காளனே
  259. ஏழைகளின் தலைவனே
  260. ஏகாந்த மூர்த்தியே
  261. ஏற்றம் தருபவனே !
  262. ஏக்கம் தீர்ப்பவனே
  263. ஏழ்மையை ஒழிப்பவனே
  264. ஏசுவோர்க்கும் இரங்குபவனே
  265. ஏழைகளுக்கு அருள் செய்வாய்
  266. ஏற்றம் மிகத் தந்திடுவாய்
  267. ஏக்கம் தீர்த்தருள்வாய்
  268. ஏழ்மையைப் போக்கிடுவாய்
  269. ஏசுவோர்க்கும் அருள் செய்வாய்
  270. ஏற்றமானூரப்பன் மகனே
  271. ஐங்கரன் தம்பியே
  272. ஐயம் தீர்ப்பவனே
  273.  ஐந்துமலைக் கதிபதியே
  274. ஐயனார் தெய்வமே
  275. ஐயமெல்லாம் தீர்த்திடுவாய்
  276. ஐந்துமலை தாண்டிவந்தோம்
  277. ஐம்புலன்களை அடக்கிடுவாய்
  278. ஐம்பூத நாயகனே
  279. ஐயப்பா ! தெய்வமே
  280. ஒப்பிலாத் திருமணியே
  281. ஒளிரும் திருவிளக்கே
  282. ஒப்புவமை இல்லாதவனே
  283. ஒற்றுமை தருபவனே
  284. ஒளிவிளக்கே ! ஓவியமே
  285. ஒளி தந்து காத்திடுவாய்
  286. ஒற்றுமையைத் தந்திடுவாய்
  287. ஒளிபடைத்த கண்ணிணாய்
  288. ஒருநாளும் உனை மறவோம்
  289. ஒன்றுபட்டு வந்து நின்றோம்
  290. ஒழித்திடுவாய் தீவினையை
  291. ஒளிதருவாய் எம்வாழ்வில்
  292. ஓங்காரப் பரம்பொருளே
  293. ஓவியமே ! காவியமே |
  294. ஓதும் மறைபொருளே
  295. ஓடிவந்து காப்பவனே
  296. ஓங்கார ரூபனே
  297.  ஓய்வின்றி உனைத்தொழுதோம்
  298. ஓம்சக்தி மகளே
  299.  ஓங்கியுயர்ந்த மலைவாசா
  300. ஓடிவந்தருள் புரிவாய்
  301. ஔவைத் தமிழமுதே
  302. ஔடதங்கள் அருள்பவனே
  303. கலியுக வரதனே
  304. கருணா மூர்த்தியே
  305. கண்ணழகு நிறைந்தவனே
  306. கவிதைகளில் சிரிப்பவனே
  307. கவின் தமிழில் இருப்பவனே
  308. கந்தனின் தம்பியே
  309. கணக்கு கடந்தவனே
  310. கனிச்சுவையே | பழரசமே
  311. கற்கண்டாய் இளிப்பவனே
  312. களங்கம் தீர்ப்பவனே
  313. கலங்காத மனந்தருவாய்
  314. கனிவான குணந்தருவாய்
  315. கற்பூர ஜோதியே
  316. கற்பூரப் பிரியனே
  317. கணபதியின் தம்பியே
  318. கங்கை முடியான் புத்திரனே
  319. கடைத்தேற அருள்பவனே
  320. கட்டுப்பாடு தந்தவனே
  321. கண்டெடுத்த மணிகண்டா
  322. கண்கண்ட தெய்வமே
  323. கண்ணின் கருமணியே
  324. கதிநீயே விதிநீயே
  325. கதிர்காமன் தம்பியே
  326. கரிமுகத்தான் தம்பியே
  327. கருணை மிகுந்தவனே
  328. கரும வினை தீர்ப்பாய்
  329. களையெல்லாம் கற்றவனே
  330. கல்விக் களஞ்சியமே
  331. கவலை தீர்ப்பவனே
  332. களைப்பைப் போக்கிடுவாய்
  333. கற்பகத் தருவே
  334. கற்றவர்க்கு கனிரசமே
  335. கலி நீங்க வரந்தருவாய்
  336. கருணை மழை பொழிந்திடுவாய்
  337. கண்ணழகு தந்திடுவாய்
  338. கண்ணொளியைக் காத்திடுவாய்
  339. கண் நோய் போக்கிடுவாய்
  340. கவிபாடத் தமிழ் தருவாய்
  341. கவின் தமிழில் சிரித்திடுவாய்
  342. களங்கம் தீர்த்திடுவாய்
  343. கடைத்தேற வழி சொல்வாய்
  344. கடமையினைச் செய்திடுவாய்
  345. கட்டுப்பாடு மனந்தருவாய்
  346. கலையெல்லாம் காத்திடுவாய்
  347. கல்வி பல தந்திடுவாய்
  348. கவலைகளைத் தீர்த்திடுவாய்.
  349. கடம்பனின் சோதரனே
  350. கரிமலையில் உறைபவனே
  351. கருப்பசாமியின் நாயகனே
  352. கனதவ விரதனே
  353. கஷ்டங்களைத் தீர்ப்பவனே
  354. கட்டேந்தி சபரிவந்தோம்
  355. கண்ணுக்கு இமையானவனே
  356. கர்வம் களைந்திடுவாய்
  357. கள்ளமிலா உளம் தருவாய்
  358.  கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
  359. காந்தமலை ஜோதியே
  360. காருண்ய மூர்த்தியே
  361. காவியத்தின் நாயகனே
  362. கானகத்தில் கிடைத்தவனே
  363. காவல் தெய்வமே
  364. காத்திடுவாய் ஏழைகளை
  365. காக்கின்ற கடவுளே
  366. கார்த்திகையில் மாலையிட்டோம்
  367. காடுமலை கடந்து வந்தோம்
  368. காமாட்சி புத்திரனே
  369. காயத்திரி புதல்வா
  370.  கார்த்திகேயன் தம்பியே
  371. காலத்தை வென்றவனே
  372. காலமெல்லாம் காப்பவனே
  373. காலங் கடத்திடாதே
  374. காப்பாற்று மிகவிரைந்தே
  375. காட்டு களிமுகத்தை
  376.  காசினியில் பெரியவனே
  377. காவினிலே வாழ்பவனே
  378. காற்றோடு கலந்திருப்பாய்
  379. காமத்தைப் போக்கிடுவாய்
  380. காளைகட்டியில் உறைபவனே
  381. காலை மாலை பூஜை செய்தோம்
  382. காலமெல்லாம் சரணம் சொன்னோம்
  383. காவியுடை தரித்தவனே
  384. கிருபை செய்தருள்வாய்
  385. கிரசு குறை தீர்ப்பவனே
  386. கீர்த்தி மிக்கவனே
  387. கீர்த்தி தருபவனே
  388. கீழ்மை நீக்கிடுவாய்
  389. கீர்த்தி அளித்திடுவாய்
  390.  குருவின் குருவே
  391. குருவின் குறைதீர்த்தவனே
  392. குருதட்சிணை அளித்தவனே
  393. குறைகள் தீர்ப்பவனே
  394. குற்றம் பொறுப்பவனே
  395. குஷ்டத்தை தீர்ப்பவனே
  396. குழந்தைக் குறை தீர்ப்பவனே
  397. குன்றின் மேலமர்ந்தவனே
  398. குறைகளை நீக்கிடுவாய்
  399. குற்றங்கள் பொருத்தருள்வாய்
  400. குழந்தை மனம் கொண்டவனே
  401. குளத்துபுழைப் பாலகனே
  402. குழந்தையில்லாக் குறை தீர்ப்பாய்
  403. குன்றனைய குணத்தோனே
  404. குருடர் குறை தீர்ப்பவனே
  405. குருடர்க்கு ஒளிதருவாய்
  406. குகனின் தம்பியே
  407. குடிகாக்கும் குலவிளக்கே
  408. குடும்ப அமைதி காப்பவனே
  409. குணக்குன்றே ! ஐயனே !
  410. குணசீலா ! பாலா
  411. குமரனின் தம்பியே
  412. குலதெய்வமானவனே
  413. குலம் தழைக்கச் செய்திடுவாய்
  414. குவலயம் காப்பவனே
  415. குத்துவிளக்கு ஒளியே
  416. கூத்தாடியின் மகனே
  417. கெட்ட எண்ணங்களை அழிப்பவனே
  418.  கேடிலா மனந்தருவாய்
  419. கேள்விச் செல்வம் தருபவனே
  420. கேட்டதை அருள்பவளே
  421. கேடுவராது காப்பவனே
  422.  கைதூக்கிக் காப்பவனே
  423. கைதொழுதோம் ! காப்பாயே !
  424. கைலாசநாதன் மகனே !
  425. கொடுமையைக் களைபவனே
  426. கொடியவரைக் கொன்றவனே
  427. கொடையளிக்கும் வள்ளலே
  428. கொஞ்சுகின்ற தமிழ்மொழியே
  429. கோவில் மணி ஒலியே
  430. கோவேந்தன் திருமகனே
  431. கோபாலன் தவமகனே
  432. கோபத்தை வெறுப்பவனே
  433. கோபத்தைத் தணித்தருள்வாய்
  434. கோடிமுறை உனை அழைத்தோம்
  435. கோடிகோடியாய் குவிப்பாய்
  436. கோவில் எல்லாம் உன்கோவில்
  437. கோடானுகோடி பக்தர் வந்தோம்
  438. கோடையிலும் குளிர்பவனே
  439. கோவிந்தன் புத்திரனே
  440. கௌரியின் திருமகனே
  441. சக்தியின் புத்திரனே
  442. சற்குருவே ! சுவாமியே
  443. சகல கலை வல்லோனே
  444.  சகல பாக்கியம் தருபவனே
  445. சக்ரபாணியின் மகனே
  446. சஞ்சலம் தீர்ப்பவனே
  447. சக்தியை அளிப்பவனே
  448. சங்கடங்கள் தீர்ப்பவனே
  449. சரண கோஷப்பிரியனே
  450. சங்கத் தமிழமுதே
  451. சக்திவேலன் தம்பியே
  452. சபரிமலை வாசனே
  453. சபரிக்கருள் செய்தவனே
  454. சரவணன் தம்பியே
  455. சரணம் உன் பாதமலர்
  456.  சத்துரு சம்ஹாரனே
  457. சர்வரோக நிவாரணனே
  458.  சத்தியத்தின் திருவுருவே
  459. சத்தியத்தைக் காப்பவனே
  460. சலிப்படையா மன ந்தருவாய்
  461.  சமய நெறி காத்தவனே
  462. சமயத்தில் உதவிடுவாய்
  463. சமரச மனந்தருவாய்
  464. சாந்த சொரூபனே
  465. சாந்தம் அளிப்பவனே
  466. சாது ஜனப் பிரியனே
  467. சாபங்கள் தீர்ப்பவனே
  468. சாமிநாதனின் தம்பியே
  469. சாஸ்தாவே ! சுவாமியே
  470. சாந்தி தரும் பேரழகே
  471. சாதிவெறி ஒழிப்பவனே
  472. சிறுமை அழிப்பவனே
  473. சிற்றின்பம் வெறுப்பவனே
  474. சிங்காரவேலன் தம்பியே
  475. சிந்தை குளிரச்செய்பவனே
  476. சிரமங்கள் தீர்ப்பவனே
  477. சித்தம் தெளிவிப்பாய்
  478. சிக்கலைத் தீர்ப்பவனே
  479. சித்தாடும் பெகுங்குருவே
  480. சித்தர்கள் போற்றும் தேவனே
  481. சிரித்த முகமுடையவனே
  482. சிவன்மால் திருமகனே
  483. சிவகாமியின் மகனே
  484.  சித்திரை நிலவொளியே
  485. சீராளா | குணசீலா
  486. சுந்தரவடிவானவனே
  487. சுத்தமனம் தருபவனே
  488. சுகங்கள் அளிப்பவனே
  489. சுடரொளியே ! திருவிளக்கே !
  490. சுடராகத் திகழ்பவனே
  491. சுடுநெருப்பில் உறைபவனே
  492. சுணங்காமல் காப்பாய் நீ
  493. சுணையாகக் குளிர்பவனே
  494. சுப்பிரமணியன் தம்பியே
  495. சுமைகளைக் குறைத்திடுவாய்
  496. சூரியனின் பேரொளியே
  497. சூழ்ச்சிகளை முறியடிப்பாய்
  498. செந்தமிழில் சிரிப்பவனே
  499. செல்வங்கள் தருபவனே
  500. செந்திலதிபன் தம்பியே
  501. சேவற்கொடியோன் தம்பியே
  502. சேய்மனம் கொண்டவனே
  503. சொர்க்கத்தின் அதிபதியே
  504. சொந்தபந்தம் வெறுத்தவனே
  505. சொல்லற்கரியவனே
  506. சோதியாய்த் திகழ்பவனே
  507. சோதனை செய்பவனே
  508. சோம்பலை அழித்திடுவாய்
  509. சௌபாக்கியம் அருள்பவனே
  510. ஞாயிற்றின் உள்ளொளியே
  511. ஞானத்தின் மறுவடிவே
  512. ஞானம் மிகத் தருவோனே
  513. ஞாலம் எல்லாம் காப்பவனே
  514.  ஞானச் சுடர்ஒளியே
  515. ஞான ஒளி தந்திடுவாய்
  516. ஞானாம்பிகை திருமகனே
  517. தங்கம்போல் மேனியனே
  518. தணிகாசலன் மகளே
  519. தடைகளை நீக்கிடுவாய்
  520. தட்டாமல் வந்திடுவாய்
  521. தணலாகச் சுடுவோளே
  522. தவறுகளைப் பொறுத்தருள்வாய்
  523. தமிழாக இளித்திருப்பாய்
  524. தமிழால் உனை அழைத்தோம்
  525. தமிழ்க் கடவுள் தம்பியே
  526. தருமங்கள் காத்திடுவாய்
  527. தஞ்சமாகச் சரணடைந்தோம்
  528. தயங்காமல் அருள்புரிவாய்
  529. தவக்கோலம் பூண்டவனே
  530. தலைவலியைத் தீர்த்தவனே
  531. தண்டாயுதபாணி தம்பியே
  532. தள்ளாடி நடந்துவந்தோம்
  533. தரணிபோற்றும் தெய்வமே
  534. தவறாமல் வந்தருள்வாய்
  535. தண்ணீரில் குளிர்பவனே
  536. தயாநிதியே | சுவாமியே
  537. தடுமாறும் நெஞ்சம் இது
  538. தடுத்தாண்டு கொள்வாய் நீ
  539. தாயாகிக் காப்பவனே
  540. தாகத்தைத் தீர்ப்பவனே
  541. தாங்காத துயர் தீர்ப்பாய்
  542. தானங்கள் தழைக்கச் செய்வாய்
  543. தானியங்கள் விளைவிப்பாய்
  544. தானைத் தலைவனே
  545. தாய்போல் அன்புடையவனே
  546. திங்கள் போல் முகத்தோனே
  547. திகட்டாத இன்பந் தருவாய்
  548. திக்கற்றவர்க்குத் துணையாவாய்
  549. திசையெல்லாம் திகழ்பவளே
  550. திருநிறைச் செல்வனே
  551. தித்திக்கும் தேன் தமிழே
  552. தியானத்தில் இருப்பவனே
  553. திருவேங்கடன் திருமகனே
  554. திருச்செந்தூரன் தம்பியே
  555. திருமால் திருமகனே
  556.  திருவாய் மலர்ந்தருவாய்
  557. திடமான மனந்தருவாய்
  558. திடகாத்திரம் தருவாய்
  559. திரண்ட செல்வம் தருவாய்
  560. திருமந்திர நாய்களே
  561. திருமங்கள மூர்த்தியே
  562. திருவும் புகழும் தருபவனே
  563. திண்ணிய மனந்தருபவனே
  564. தீந்தமிழின் சுவையே
  565. தீமைகளைக் களைபவனே
  566. தீய எண்ணங்களை அழிப்பவனே
  567. தீண்டாமையை ஒழித்தவனே
  568. தீதில்லாக் குணந்தருவாய்
  569. தீச்செயல்கள் வெறுப்பாய்
  570. தீன தயாளனே சுவாமி
  571. தீதகற்றும் பேரொளியே
  572. தீச்சுடராய் ஒளிர்பவனே
  573. தீபஜோதித் திருஒளியே
  574. தீபமங்கள ஜோதியே
  575. தீபத்தில் உறைபவனே
  576. தீமையல்லா வாழ்வளிப்பாய்
  577. தீராத நோய் தீர்ப்பவனே
  578. தீராநோய் தீர்க்கும் மருந்தே
  579. துறக்கோலம் பூண்டவனே
  580. துணையாக நிற்பவனே
  581. தும்பிக்கையான் தம்பியே
  582. துன்பங்கள் தீர்ப்பவனே
  583. துஷ்டர்களை ஒழிப்பவனே
  584. துணிவுள்ளம் தருபவளே
  585. துதிப்போர்க்கு அருள்பவனே
  586. துயரங்கள் போக்கிடுவாய்
  587. துக்கநிலை மாற்றிடுவாய்
  588. துவண்டவர்க்குத் துணையாவாய்
  589. துளசிமணி மார்பனே
  590. தூயவுள்ளம் தருபவனே
  591. தூய்மை நிறைந்தவனே
  592. தூங்காத மனந் தருவாய்
  593. தூப தீபப் பிரியனே
  594. தெவிட்டாமல் இனிப்பவனே
  595. தெய்வத்தின் தெய்வமே
  596. தெள்ளமுதே ! தேனே !
  597. தென்னவர் குலதெய்வமே
  598. தென்றலாய்க் குளிர்பவனே
  599. தெளிவுள்ளம் தருவனே
  600. தேன்போல் இனிப்பவனே
  601. தேன் தமிழில் இருப்பவனே
  602. தேசமெல்லாம் நிறைந்தவனே
  603. தேங்காய் நெய்ப்பிரியனே
  604. தேடுகிறோம் உன்னடியை
  605. தேவர் போற்றும் தெய்வமே
  606. தேடி வந்த செல்வம் நீயே
  607. தேடற்கரியவனே
  608. தேவர் துயர்களைந்தவனே
  609. தேவாதி தேவனே
  610. தேவியின் திருமகனே
  611. தைரியம் தருபவனே
  612. தொண்டுள்ளம் தந்திடுவாய்
  613. தொண்டருக்குத் தொண்டனே
  614. தொல்லைகளை நீக்கிடுவாய்
  615. தொடர்ந்து வந்து துணையாவாய்
  616. தொட்டது துலங்கச் செய்வாய்
  617. தோன்றாத் துணையாவாய்
  618. தோழனாக வந்திடுவாய்
  619. தோல்வியில்லா வாழ்வளிப்பாய்
  620. தோள்வலிமை தந்திடுவாய்
  621. தோஷங்கள் நீக்கிடுவாய்
  622. தோல்வியாதி போக்கிடுவாய்
  623. தோணிபோல் கரைசேர்ப்பாய்
  624. தோற்றமாகி அருள்புரிவாய்
  625. நடுக்காட்டிலிருப்பவனே
  626. நன்மையெல்லாம் தந்திடுவாய்
  627. நம்பி கை தொழுதோம்
  628. நல்லறிவைத் தந்திடுவாய்
  629. நல்வழியைக் காட்டிடுவய்
  630. நல்வாழ்வு அளித்திடுவாய்
  631. நன்றிமறவா மனந்தருவாய்
  632. நல்லவர்க்கு நலந்தருவாய்
  633. நண்பனாக வந்திடுவாய்
  634. நல்லவர் போற்றும் நாயகனே
  635. நடராசன் திருமகனே
  636. நடந்துவந்தோம் உன்மலைக்கு
  637. நற்பயன்கள் தந்திடுவாய்
  638. நஷ்டங்கள் தவிர்த்திடுவாய்
  639. நற்பணிகள் காத்திடுவாய்
  640. நந்தா விளக்கே நாயகனே
  641. நயவஞ்சகரை அழித்திடுவாய்
  642. நடுநிலைமை மனந்தருவாய்
  643. நறுமணப்பிரியனே
  644. நலங்காக்கும் நாயகனே
  645. நல்லொழுக்கம் தந்திடுவாய்
  646. நலிந்தவர்க்கு உதவிடுவாய்
  647. நவரத்தினப் பேரொளியே
  648. நாகராசன் அன்பனே
  649. நானிலம் போற்றும் நாயகனே
  650. நாடி வந்தோம் உன்மலைக்கு
  651. நாய்களே காத்திடுவாய்
  652. நாடெலாம் தொழும் தேவனே
  653. நாதனே நலந்தருவாய்
  654. நிலவாக ஒளிதருவாய்
  655. நில்லாமல் ஓடி வா | நீ
  656. நித்திய பிரம்மச்சாரியே
  657. நின்பாதம் சரணடைந்தோம்
  658. நினைவெல்லாம் உன் உருவே
  659. நினைத்தவுடனே துணையாவாய்
  660. நித்தம் உனைப் பணிவோம்
  661. நீதி தந்து அருள்புரிவாய்
  662. நியாயத்தைக் காப்பவனே
  663. நியமம் தவறாதவனே
  664. நிலமெல்லாம் தழைக்கச் செய்வாய்
  665. நிறைவுள்ளம் தருபவனே
  666. நிதானம் அளிப்பவனே
  667. நினைத்ததை நடத்தி வைப்பாய்
  668. நிலையான வாழ்வளிப்பாய்
  669. நிலைத்திருக்கும் செல்வமே
  670. நிறைந்த செல்வம் தந்திடுவாய்
  671. நீலிமலை வாசனே
  672. நீங்காத இன்பந்தருவாய்
  673. நீண்ட வாழ்வு தந்திடுவாய்
  674. நீக்கமற நிறைந்தவனே
  675. நீங்காத நினைவானாய்
  676. நீலவஸ்திரதாரியே
  677. நீயாகவந்திடுவாய்
  678. நீதியினைக் காத்திடுவாய்
  679. நீர்போல் தெளிந்தவனே
  680. நீலகண்டன் மகளே
  681. நீண்ட புகழ் தந்திடுவாய்
  682. நுண்ணறிவு தந்திடுவாய்
  683. நூலறிவு மிகத்தருவாய்
  684. நெய்யாபிஷேகப் பிரியனே
  685. நெஞ்சில் நிறைந்தவனே
  686. நெறிமுறை தழைக்கச் செய்வாய்
  687. நெற்றிக்கண்ணார் புத்திரனே
  688. நெஞ்சுருகப் பாடிவந்தோம்
  689. நெய்த்தேங்காய் சுமந்துவந்தோம்
  690. நேர்மை நிலைக்கச் செய்வாய்
  691. நேசமுள்ள மனந்தருவாய்
  692. நேர்த்தியான குணந்தருவாய்
  693. நேரில் வந்து காத்திடுவாய்
  694. நேரமிதே ! அருள்புரிவாய்
  695. நைந்தவர்க்கு நலம் தருவாய்
  696. நொந்தவரைக் காத்திடுவாய்
  697. நோன்பிருந்தோம் உனைக்காண
  698. பக்தி நெறி பரப்பிடுவாய்
  699. பக்கத் துணையாயிருப்பாய்
  700. பக்தஜனப் பிரியனே
  701. பக்தருக்கருள் செய்பவனே
  702. பக்குவ மனந்தருவாய்
  703. பகைமையை ஒழிப்பவனே
  704. பரந்தாமன் திருமகனே
  705. பண்புள்ள மனந்தருவாய்
  706. பசுபோல் குணத்தவனே
  707. பசித்துன்பம் நீக்கிடுவாய்
  708. பணவெறி ஒழிப்பவனே
  709. பத்தரை மாற்றுத் தங்கமே
  710. பயத்தை ஒழிப்பவனே
  711. பர்வதவர்த்தினி மகனே
  712. பல்லுயிரையும் காப்பவனே
  713. பலரும் போற்றும் தெய்வமே
  714. பல்கலையும் பயின்றோனே
  715. பழவினைகள் அழித்திடுவாய்
  716. பழம்பெருமை காப்பவனே
  717. பழிச்சொல் துடைப்பவனே
  718. பஞ்சத்தைப் போக்கிடுவாய்
  719. பதினெட்டாம் படியோனே
  720. பந்தளமன்னன் மகனே
  721. பம்பையில் தோன்றியவனே
  722. பரமேசுவரன் புத்திரனே
  723. பராசக்தி திருமகளே
  724.  பலத்தைத் தருபவனே
  725.  பலமதத்தாரும் வணங்குவோனே
  726. பரம்பொருளே | ஜோதியே
  727. பகவான் பகவதி திருமகனே
  728. பக்தர் குறை தீர்ப்பவனே
  729. பந்தபாசம் அறுப்பவனே
  730.  பந்தளத்து அரசே
  731.  பகைவரை அழிப்பவனே
  732.  பஞ்சமி திதியில் பிறந்தவனே
  733. பாவிகளைக் காத்தருள்வாய்
  734. பாரபட்சமற்றவனே
  735.  பாட்டுடைய தலைவனே
  736.  பாக்கியங்கள் தந்திடுவாய்
  737. பாசவலையை அறுப்பவனே
  738. பாடிவந்தோம் உன் மலைக்கு
  739. பானகப் பிரியனே
  740. பாதமலர் பணிந்தோம்
  741. பாவங்கள் போக்கிடுவாய்
  742. பாமரர்க்கு அருள்பவனே
  743. பாயாசப் பிரியனே
  744. பார் புகழும் தெய்வமே
  745. பார்வதியின் புத்திரனே
  746. பாராமுகம் ஏனோ
  747. பாலமுருகன் தம்பியே
  748. பாலபிஷேகப் பிரியனே
  749. பார்த்திடுவாய் எம்குறையை
  750. பாமாலை சூட்டிடுவோம்
  751. பால் போன்ற மனந்தருவாய்
  752. பிணிகளைத் தீர்ப்பவனே
  753. பிஞ்சு மனங்களைக் காப்பவனே
  754. பித்தனின் புத்திரனே
  755. பிரம்மச்சரிய விரதப் பிரியனே
  756. பில்லி சூனியம் அகற்றுவோனே
  757. பிழைகளைப் பொறுத்தருள்வாய்
  758.  பிள்ளைக் குறை தீர்ப்பவனே
  759. பிள்ளைச்செல்வம் தந்தருள்வாய்
  760. பித்தம் தெளிவிப்பவனே
  761. பிதுர்க்கடன் செய்தவளே
  762. பிறைசூடியோன் மகனே
  763. பீடத்தில் அமர்ந்தவனே
  764. பீடைகளை நீக்கிடுவாய்
  765. புகழ் மிகத்தருபவனே
  766. புண்ணியங்கள் தந்திடுவாய்
  767. புத்தொளியைத் தந்திடுவாய்
  768. புலமைமிகத் தந்திடுவாய்
  769. புலிப்பாலைக் கொணர்ந்தவனே
  770. புலவரெல்லாம் புகழ்பவனே
  771. புதிய வாழ்வு தந்திடுவாய்
  772. புஷ்கலையின் கணவனே
  773. புவனம் போற்றும் தெய்வமே
  774. புலாலை வெறுப்பவளே
  775. பூதநாதனே | சுவாமியே
  776. பூமியெலாம் நிறைந்தவனே
  777. பூவுலகைக் காப்பவனே
  778. பூ அலங்காரப் பிரியனே
  779. பூவினிலே சிரிப்பவனே
  780. பூவாக மணப்பவனே
  781. பூரணை மணாளனே
  782. பூஞ்சோலையில் இருப்பவனே
  783. பூதபடைத் தலைவனே
  784. பூசையில் மகிழ்பவனே
  785. பெற்றோரை மதிப்பவனே
  786. பெரும் வாழ்வு தருபவனே
  787. பெருமாளின் திருமகனே
  788. பெரும்வியாதி தீர்ப்பவனே
  789. பெருமைகள் தருபவனே
  790. பேய் பயம் அழிப்பவனே
  791. பேசாதவர்க்கும் பேச்சருள்வாய்
  792. பேதமை அகற்றிடுவாய்
  793. பேதங்கள் போக்கிடுவாய்
  794. பேட்டைதுள்ளும் பேரருளே
  795. பேணிக்காத்திடுவாய்
  796. பேய்களை ஓட்டிடுவாய்
  797. பேரும் புகழும் தந்திடுவாய்
  798. பேறுகள் யாவும் தந்திடுவாய்
  799. பைந்தமிழால் பாடினோம்
  800. பைத்தியத்தை மாற்றிடுவாய்
  801. பொன்னம்பல வாசனே
  802. பொன்னார் மேனியனே
  803. பொசுக்கிடுவாய் பாவங்களை
  804. பொல்லாதவரை ஒழித்திடுவாய்
  805. பொய்மையை வெறுப்பவனே
  806. பொங்கிவரும் அருள்தருவாய்
  807. பொங்கிவரும் பூம்புனலே
  808.  பொறுமையினைத் தந்திடுவாய்
  809. பொறுப்புணர்ச்சி தந்திடுவாய்
  810. பொறுமையில் சிறந்தவனே
  811. பொறாமைக் குணம் ஒழிப்பாய்
  812. பொருளும் அருளும் தருவாய்
  813. போகாத பாவங்களையும் போக்குவாய்
  814. போகாத நோய்களையும் நீக்குவாய்
  815. போற்றி ! போற்றி ! நின்னடிகள்
  816. மங்கள மூர்த்தியே |
  817. மரகதத்தின் பேரொளியே
  818. மணிகண்ட தெய்வமே
  819. மக்கள் குறை தீர்ப்பவனே
  820. மகாதேவன் புத்திரனே
  821. மகிஷி சம்ஹாரனே
  822. மணியோசையில் சிரிப்பவனே
  823. மத நெறியை வளர்த்தவனே
  824. மதி நுட்பம் தருபவனே
  825. மங்கல வாழ்வு தருவாய்
  826. மந்திர மூர்த்தியே
  827. மமதையை அடக்குபவனே
  828. மயில் வாகனன் தம்பியே
  829. மலரடி சரணடைந்தோம்
  830. மலையாளதேச அதிபதியே
  831. மனநிம்மதி தருபவனே
  832. மனமகிழ்ச்சி தந்திடுவாய்
  833. மனமாயை விலக்கிடுவாய்
  834. மகா கணபதி தம்பியே
  835. மஞ்சமாதா திருவருளே
  836. மங்காத புகழ் தருவாய்
  837. மண் சுமந்தோன் மகனே
  838. மன்னனின் திருமகனே
  839. மண்ணுலகம் போற்றும் தெய்வமே
  840. மருதமலையாண்டவன் தம்பியே
  841. மன்னித்தருள்வாய் சுவாமியே
  842. மன்றாடிவேண்டுகிறோம் ! ஐய்யனே
  843. மனமிரங்கி அருளிடுவாய்
  844. மனக்கவலை தீர்த்திடுவாய்
  845. மக்கட்செல்வம் தந்திடுவாய்
  846. மரண பயம் நீக்கிடுவாய்
  847. மறவாமல் உனைப் பணிவோம்
  848. மண்ணுக்கும் விண்ணுக்கும் நாயகனே
  849. மலைபோல் உயர்ந்தவனே
  850. மழைபோல் கருணை பொழிவாய்
  851. மறுமலர்ச்சி தந்திடுவாய்
  852. மனக்கலக்கம் போக்கிடுவாய்
  853. மனநோயை அகற்றிடுவாய்
  854. மருந்தாகி நோய் தீர்ப்பாய்
  855. மலர்மாலை சூட்டிடுவோம்
  856. மலட்டுத்தன்மை நீக்கிடுவாய்
  857. மயக்கும் பொற்சித்திரமே
  858. மண்ணாசை அகற்றிடுவாய்
  859. மதிமயக்கம் போக்கிடுவாய்
  860. மலையெல்லாம் இருப்பவனே
  861. மனைமாட்சி காத்திடுவாய்
  862. மனை தோறும் அருள்தருவாய்
  863. மறைபோற்றும் மாதவனே
  864. மறைநெறிகள் காத்திடுவாய்
  865. மலர்ந்த முகத்தோனே
  866. மாதவனின் திருமகனே
  867. மாணிக்கச் சுடரொளியே
  868. மாயையினைக் களைபவனே
  869. மார்கழியில் பிறந்தவனே
  870. மாயவலை அறுப்பவனே
  871. மாசில்ல மாணிக்கமே
  872. மாசுகளைக் களைந்திடுவாய்
  873. மாசில்லா மனந்தருவாய்
  874. மாலின் திருமகனே !
  875. மாந்தர் போற்றும் தெய்வமே
  876. மானிடப்பிறவி எடுத்தவனே
  877. மாட்சிமிகு மனந்தருவாய்
  878. மாதவம் புரிந்தவனே
  879. மின்னுகின்ற பேரொளியே
  880. மிக்கபலன் தந்திடுவாய்
  881. மிருகக்குணம் நீக்கிடுவாய்
  882. மீனாட்சி திருமகனே
  883.  மீளாத்துயர் தீர்ப்பவனே
  884. மீன்போன்ற விழியுடையாய்
  885. முருகனின் தம்பியே
  886. முத்தமிழ்ச் செல்வனே
  887. முக்தி தருபவனே
  888. முழுமுதற்கடவுளே
  889.  முகஒளி நிறைந்தவனே
  890. முக்கண்ணணார் புத்திரனே
  891. முன்னின்று காத்திடுவாய்
  892. முதுமைத்துயர் தீர்ப்பாய்
  893. முற்பிறவித்துயர் தீர்ப்பாய்
  894. மும்மூர்த்திக்கும் நாயகனே
  895. முயற்சிக்குத் துணைநிற்பாய்
  896. முனிவர்கள் போற்றும் தெய்வமே
  897. முடநோயை தீர்ப்பவனே
  898. முகமலர்ச்சி தருபவனே
  899. முத்துக்குமரன் தம்பியே
  900. மூலிகைபோல் மருந்தாவாய்
  901. மூவர்கள் போற்றும் தெய்வமே
  902. மூவுலகும் போற்றும் தேவா !
  903. மூவாத வரம் தருவாய்
  904. மூவாசை அறுப்பவனே
  905. மூர்த்தியிற் சிறந்தவனே
  906. மூலப்பொருளானவனே
  907. மெய்சிலிர்க்கச் செய்பவனே
  908. மெய்மறந்து உனைத்தொழுதோம்
  909. மெய்யான தெய்வம் நீயே
  910. மெய்யப்பா | ஐயப்பா !
  911. மெய்ப்பொருளை விளக்கிடுவாய்
  912. மென்மையான மேனியனே
  913. மெழுகாக உருகுகின்றோம்
  914. மேனியழகு மிக்கவனே
  915. மேன்மை தந்திடுவாய்
  916. மேலான பரம்பொருளே
  917. மேலுலகம் தொழும் தெய்வமே
  918.  மோகினி சுதனே
  919.  மோகத்தை அழிப்பவனே
  920.  மௌனவிரதப் பிரியனே
  921. மௌனிகள் போற்றும் தெய்வமே
  922. யாகத்தில் வருபவனே
  923. யோகங்கள் தருபவனே
  924. யோகசித்தி அருள்பவனே
  925. யோகிகளின் தலைவனே
  926. ரணங்கள் தீர்ப்பவனே
  927. ரத்தத்தில் உறைபவனே
  928. ராஜேஸ்வரி மைந்தனே
  929. ராஜாதிராஜன் மகனே
  930. ரிஷிகள் போற்றும் தெய்வமே
  931. ரோகங்கள் தீர்ப்பவனே
  932. லட்சார்ச்சனைப் பிரியனே
  933. லாபங்கள் தந்திடுவாய்
  934. வஞ்சகத்தை ஒழிப்பவனே
  935. வஞ்சகரை அழிப்பவனே
  936. வலிமையினைத் தருபவனே
  937. வன்புலி வாகளனே
  938. வறுமைத்துயர் போக்கிடுவாய்
  939. வறியவர்க்கு அருள் செய்வாய்
  940. வடிவழகுத் தெய்வமே
  941. வயிற்றுவலி தீர்த்திடுவாய்
  942. வரந்தருவாய் சுவாமியே
  943. வள்ளி மணாளன் தம்பியே
  944. வற்றாத வளம் தருவாய்
  945. வள்ளல் குணம் தந்திடுவாய்
  946. வளமான வாழ்வளிப்பாய்
  947. வன்முறையை நீக்கிடுவாய்
  948. வருவாய்மிகத் தருவாய்
  949. வழித்துணையாய் வந்திடுவாய்
  950. வழிப்பயணம் காத்திடுவாய்
  951. வழிகாட்டி உதவிடுவாய்
  952. வண்ணமயில் வாகனன் தம்பியே
  953. வருவாய் நீ குருவாக
  954. வலம் வந்து தொழுதோமே
  955. வலிமைமிகு வரந்தருவாய்
  956. வல்லவனே நல்லவனே
  957. வல்ல கணபதி தம்பியே
  958. வடிவேலன் தம்பியே
  959. வழிபட்டு வணங்கிடுவோம்
  960. வனத்திளிலே கிடைத்தவனே
  961. வணங்கிடுவொம் நின்னடியை
  962. வயலூரான் தம்பியே
  963. வரம்பில்லாத பக்தி தருவாய்
  964. வாய்மையினைக் காத்திடுவாய்
  965. வாய்நிறைய வாழ்த்துகிறோம்
  966. வாழ்க்கையை செழிக்கச்செய்வாய்
  967. வாழ்வாங்கு வாழவைப்பாய்
  968. வாயாரப்பாடி நின்றோம்
  969. வாடாத முகத்தோனே
  970. வாட்டுகின்ற துயர் தீர்ப்பாய்
  971. வாரிவழங்கும் வள்ளலே
  972. வாபரின் தோழனே
  973. வாபருக்கு அருள் செய்தவனே
  974. வானோர் போற்றும் தெய்வமே
  975. வாழ்வினிலே ஒளிதருவாய்
  976. வினைதீர்க்கும் வேதியனே
  977. வில்லாளி வீரனே
  978. விருப்பு வெறுப்பு அற்றவனே
  979. வித்தை பல கற்றவனே
  980. வித்தகனே உத்தமனே
  981. விண்ணோர் போற்றும் வேதியனே
  982. விஞ்ஞானம் வளர்த்திடுவாய்
  983. விதிகாக்கும் வித்தகனே
  984. விநாயகனின் தம்பியே
  985. விபூதி அபிஷேகப் பிரியனே
  986. விளக்கொளியாய்த் திகழ்பவனே
  987. விடிவெள்ளி போன்றவனே
  988. விழிப்புணர்ச்சி தந்திடுவாய்
  989. வீரமணி கண்டனே
  990. வீரத்திருமகனே
  991. வீண்பழியைத் தீர்த்திடுவாய்
  992. வீடுதோறும் உறைபவனே
  993. வீரம் மிகத் தந்திடுவாய்
  994.  வெற்றி பல தந்திடுவாய்
  995. வெள்ளை உள்ளம் தந்திடுவாய்
  996. வெற்றித் திருமகனே
  997. வெஞ்சினத்தை அறுப்பவனே
  998. வெங்கடேசன் திருமகனே
  999. வெற்றி வடிவேலன் தம்பியே
  1000. வேதங்கள் போற்றும் தெய்வமே
  1001. வேதனைகள் தீர்ப்பவனே
  1002. வேண்டும் வரம் தருபவனே
  1003. வேழமுகன் தம்பியே
  1004.  வேலவனுக்கு இளையவனே
  1005. வேற்றுமையை நீக்கிடுவாய்
  1006. வைத்தீஸ்வரன் மகனே
  1007. வையமெல்லாம் செழித்திடவே
  1008. வையமெல்லாம் வாழியவே

ஐயப்பனின் 1008 பெயர்கள் Pdf 

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement