18 சித்தர்களின் பெயர்கள்..!

Advertisement

18 சித்தர்கள் பெயர்கள்

நாம் அனைவருக்குமே ஆன்மிக நம்பிக்கை என்பது சிறிதளவேனும் காணப்படும். அதாவது நாம் அனைவருமே ஒரு சில மதத்தை பின்பற்றி அந்த மாதத்தில் உள்ள கடவுள்களை வழிபடுவோம். அதேபோல் தான் இந்து மாதத்தில் உள்ளவர்கள் பல கடவுள்களை வணங்குவார்கள். அப்படி இந்து மாதத்தில் உள்ள பலரால் வணங்கப்படும் ஒரு கடவுள் தான் சிவ பெருமான் இவரை ஒரு சிலர் சாதாரணமாக வழிபடுவது வணங்குவது என்று இருப்பார்கள்.

ஆனால் ஒரு சிலர் மிக மிக அதிக அளவு வணங்குவார்கள் அல்லது வழிபடுவார்கள். அப்படி சிவ பெருமானை மனமார வணங்குபவர்களை சித்தர்கள் என்று கூறுவார்கள். இவர்கள் தங்கள் நினைத்ததை செய்வார்கள் மேலும் சில தெய்வீக செயல்களையும் செய்வார்கள். இப்படிப்பட்ட சிறப்புடைய இவர்களில் 18 சித்தர்கள் மிகவும் சிறப்புடையவர்கள். அதனால் அவர்களின் பெயர்களை இன்றைய பதிவில் அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

18 Siddhargal Names in Tamil:

18 siddhargal peyargal in tamil

பொதுவாக சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி என்ற ஒரு பொருளும் உண்டு. அதாவது இவர்கள் சிவ பெருமானை மனதில் நினைத்து அவரை அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, தங்களது ஆத்ம சக்தியை எழுப்பி, தெய்வீக செயல்களையும், நினைத்த காரியங்களையும் செய்வார்கள். இதையே சித்து விளையாட்டு என்று அழைக்கின்றனர்.

எனவே தான் இன்றைய சூழலில் பலரும் சித்தர்கள் ஜீவசமாதி உள்ள கோவில்களை தேடி தேடி சென்று வழிப்பட்டு வருகிறார்கள். இப்படிப்பட்ட பல சிறப்புகளை கொண்ட சித்தர்களில் 18 பெயர்கள் தான் மிக மிக முக்கியமானவர்கள் அவர்களின் பெயர்கள் மாற்று அவர்களின் ஜீவசமாதி உள்ள ஊர்களின் பெயர்களையும் இங்கு அறிந்து கொள்வோம் வாங்க..

சித்தர்களின் பெயர் ஜீவசமாதி உள்ள ஊரின் பெயர்
அகஸ்தியர் திருவனந்தபுரம்
கொங்கணர் திருப்பதி
சுந்தரனார் மதுரை
கரூவூரார் கரூர்
திருமூலர் சிதம்பரம்
தன்வந்திரி வைதீஸ்வரன்கோவில்
கோரக்கர் பொய்யூர்
குதம்பை சித்தர் மாயவரம்
இடைக்காடர் திருவண்ணாமலை
இராமதேவர் அழகர்மலை
கமலமுனி திருவாரூர்
சட்டமுனி திருவரங்கம்
வான்மீகர் எட்டிக்குடி
நந்திதேவர் காசி
பாம்பாட்டி சித்தர் சங்கரன்கோவில்
போகர் பழனி
மச்சமுனி திருப்பரங்குன்றம்
பதஞ்சலி இராமேஸ்வரம்

குழந்தைகளின் விளையாட்டு பெயர்கள் என்னென்ன தெரியுமா

நெருப்பு என்பதை இவ்வளவு பெயர்களில் குறிப்பிடலாமா

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement