விசேஷங்கள் (Function) பெயர்கள் ஆங்கிலத்தில் | All Ceremony Names English and Tamil

Advertisement

All Ceremony Names English and Tamil

வாசகர்கள் அனைவர்க்கும் வணக்கம். நம் பொதுநலம் பதிவின் வாயிலாக தினமும் பல பயனுள்ள பதிவுகளை அறிந்து வருகிறோம். எனவே, அந்த வகையில் இன்றைய பெயர்கள் பதிவில் நம் கொண்டாடும் விழாக்களின் பெயர்களை ஆங்கிலத்தில் தெரிந்துகொள்ளலாம். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு விழாக்களின் பெயர்களை ஆங்கிலத்தில் தெரிவதில்லை. ஆகையால், உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவின் மூலம் All Ceremony Names English and Tamil தெரிந்துகொள்வோம் வாங்க.

இக்காலத்தில் ஆங்கிலம்  மிகவும் முக்கியம். ஆங்கிலத்தில் படிக்க எழுத மற்றும் பேச தெரிந்தால் நல்ல வேலை கிடைக்கும் என்பது நம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே. அதனால் பெரும்பாலானவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். இன்னும் ஒரு சிலர்க்கு ஆங்கிலத்தில் படிக்க தெரியும். அதனை புரிந்துகொள்ள முடியும் ஆனால் பேச்சுவழக்கில் ஆங்கிலம் பேச தெரியாது. ஆகையால், நாம் ஆங்கிலத்தில் சகஜமாக பேச வேண்டுமென்றால் ஆங்கிலத்தில் உள்ள வார்த்தைகளின் அர்த்தங்களை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.  எனவே, அந்த வகையில் அனைவரும் விழாக்களின் பெயர்களை ஆங்கிலத்தில் தெரிந்துகொள்வோம் வாங்க.

வீட்டு விசேஷங்கள் பெயர்கள் ஆங்கிலத்தில்:

  • Cradle Ceremony – குழந்தையை தொட்டில் போடும் விழா
  • Naming Ceremony – பெயர் சூட்டு விழா 
  • Baby Shower/bangle Ceremony –வளைகாப்பு 
  • Wedding Ceremony – திருமண விழா 
  • Puberty Ceremony – மஞ்சள் நீராட்டு விழா 
  • Harvest Festival – அறுவடை திருவிழா 
  • Flower Ceremony – பூ வைக்கும் விழா 
  • Reception – வரவேற்பு 
  • House Warming – புதுமனை புகுவிழா 
  • Graduation Ceremony – பட்டமளிப்பு விழா 
  • Get Together /Reunion – மறு சந்திப்பு 
  • Opening Ceremony – திறப்பு விழா 
  • Silver Jubilee – வெள்ளி விழா 
  • Golden Jubilee – பொன் விழா 
  • Centenary – நூற்றாண்டு விழா 
  • Car Festival – தேரோட்டம் 
  • Funeral Ceremony – இறுதி சடங்கு 
  • Inauguration Ceremony- பதவியேற்பு விழா 
  • Retirement Ceremony- பணிநிறைவு விழா 
  • Tonsuring Ceremony – மொட்டையடிக்கும் விழா 
  • Ear Piercing Ceremony – காதுகுத்து விழா 
  • Betrothal Ceremony – நிச்சயதார்த்த விழா
  • Firewalking Ceremony – பூ மிதித்தல் விழா (தீ மிதித்தல்)
  • Temple Consecration Ceremony – கோவில் கும்பாபிஷேகம் விழா 
  • Mehendi Ceremony – மருதாணி போடும் விழா 
  • Sangeet Ceremony – திருமணத்தின் சங்கீத விழா 
  • Haldi Ceremony – மஞ்சள் பூசுதல் விழா 
  • Roka Ceremony – மணமகன், மணமகள் இருவரும் திருமண சம்மதம் தெரிவித்து இனிப்புகளை பரிமாறிக்கொள்ளும் விழா.
  • Griha Pravesh Ceremony – மணமகன் வீட்டில் புதிய மணமகளுக்கு வரவேற்பு அளிக்கும் விழா
  • Pag Phera Ceremony – மணமகன் மணமகளை பிறந்த வீட்டிற்கு அழைத்து செல்லும் விழா.

மசாலா பொருட்களின் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement