பிரம்மாவின் வேறு பெயர்கள் | Brahma Other Names in Tamil..!
பொதுவாக நாம் அனைவரும் குழந்தை பருவத்தில் நமக்கு பிடித்தமான கடவுள்களை மனதில் நினைத்து நமக்கு வேண்டியவற்றை நிறைவேற வேண்டும் என்று வேண்டிக் கொள்வோம். இவ்வாறு இருக்கும் பருவத்தில் நாம் நம்முடைய புத்தகத்தில் மூன்று முக்கியமான கடவுள்களை பற்றி படித்து கொண்டிருப்போம். அதாவது பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய கடவுள்களை பற்றி படித்து இருப்போம். அதிலும் இத்தகைய கடவுள்கள் மூன்று சிறப்பினை உடையவர்கள். படைத்தல் பிரம்மா, காத்தல் விஷ்ணு மற்றும் அழித்தல் சிவன் என மூன்றினையும் செய்து வருகிறார்கள். அந்த வகையில் நமக்கு இவர்களின் இத்தகைய குறிப்பினை தவிர வேறு எதுவும் தெரியாது. ஆகவே இன்று படைத்தலுக்கு உரிய கடவுளாகிய பிரம்மனின் வேறு பெயர்கள் பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். மேலும் சிலர் கடவுள்களின் பெயர்களை குழந்தைகளுக்கு வைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதனால் பதிவை முழுவதுமாக படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!
பிரம்மாவின் வேறு பெயர்கள்:
பிரம்மா பெயர் | அர்த்தம் |
பிரம்மா | மூச்சுக்காற்றை அளிப்பவர். |
சுரஜேஷ்ட | பெரியவர், தேவர்களில் மூத்தவர். |
பிதாமஹர் | பாட்டனார். |
லோகேச | உலகு இயற்றினான், மக்கள் ஈசன். |
சதுரானானன | நான்முகன் |
த்ருஹினஹ | படைப்போன். |
கமலாசன | தாமரையில் அமர்ந்தோன். |
பிரஜாபதி | படைத்தவன், மக்களை உருவாக்கியவன். |
விஸ்வஸ்ரு | எல்லாம் அறிந்தவன். |
விதி | விதிகளை எழுதுபவன். |
பூர்வ | முன்னோன். |
சதானந்த | எப்போதும் மகிழ்பவன். |
ரஜோ மூர்த்தி | ரஜோ குணம் உடையவர் |
ஹம்சவாஹன | அன்னப் பறவை வாகனம் உடையோன் |
அண்டஜ | முட்டையில் உதித்தோன் |
Brahma Other Names in Tamil:
பிரம்மா பெயர் | அர்த்தம் |
விரிஞ்சி | உலகைப் படைத்தோன். |
சத்யக | உண்மை விளம்பி. |
நிதன | மரணம். |
கமலோத்பவ | தாமரையில் உதித்தோன். |
நாபிஜன்ம | நாபியில் உதித்தோன். |
விதாதா | உயர் தலைவன். |
வேதா | வேதம் உடையோன். |
ஷ்ரஷ்ட | உலகை படைத்தவன். |
அப்ஜயோனி | தாமரையில் உதித்தோன். |
தாதா | உயர் தலைவன். |
ஸ்வயம்பூ | தான் தோன்றி. |
ஹிரண்யகர்ப்பர் | தங்க முட்டை. |
பரமேஷ்டி | பெரிய ஆசையான மோட்சத்தை தருபவர். |
ஆத்மபூ | தான் தோன்றி. |
கடவுள்களின் வேறு பெயர்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் |
அருள் தரும் கணபதியின் வேறு பெயர்கள்..! |
சிவன் பெயர்கள் பட்டியல் 2023 |
ஐயப்பன் ஆண் குழந்தை பெயர்கள் |
ஆண் குழந்தை சிவன் பெயர்கள் |
அம்மன் வேறு பெயர்கள் பட்டியல்..! |
விஷ்ணு 108 பெருமாள் பெயர்கள் |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |