காமராஜர் சிறப்பு பெயர்கள் | Kamarajar Sirappu Peyargal in Tamil

Advertisement

Kamarajar Sirappu Peyar in Tamil | Kamarajar Names in Tamil | காமராஜர் சிறப்பு பெயர்கள்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் காமராஜரின் சிறப்பு பெயர்களை தொகுத்து (Kamarajar Special Names in Tamil) பின்வருமாறு விவரித்துள்ளோம்.
பொதுவாக மனிதர்களுக்கு வைக்கும் பெயர்களை பார்த்து பார்த்து தான் வைப்பார்கள். ஒருவருக்கே பல பெயர்கள் இருக்கும், அதாவது வீட்டில் அழைப்பதற்கு ஒரு பெயர்களை வைத்திருப்பார்கள், சான்றிதழில் ஒரு பெயர் இருக்கும், நண்பர்கள் ஒரு பெயரில் அழைப்பார்கள். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரிகளில் ஒருவர் தான் காமராஜர். பள்ளியில் படிக்கும்  குழந்தைகளுக்கு மத்திய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர், எளிமைக்கும், திறமைக்கும் எடுத்துக்காட்டாக இருக்க கூடியவர். இவருக்கு உள்ள பல சிறப்பு பெயர்களை இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க..

காமராஜர் பிறப்பு முதல் இறப்பு:

காமராசர் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி பிறந்தார். இவருடைய பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். தனது பள்ளிப் படிப்பைச் சத்ரிய வித்யா சாலா பள்ளியில் தொடங்கினார். படிக்கும் போதே மிகவும் பொறுமையுடனும் விட்டுக் கொடுக்கும் மனத்துடனும் விளங்கினார். தன் தந்தை இறந்த பிறகு இவரால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. அம்மாவிற்காக தனது மாமா துணி கடையில் வேலைக்கு சேர்ந்தார். இவரது மாமா கடையில் வேலை பார்க்கும் போதே பல தலைவர்கள்  பேசுவதை பார்த்து 1920-ஆம் ஆண்டு தனது 16-ஆவது வயதில் காங்கிரஸ் கட்சில் இணைந்தார்.  மக்களுக்கு வேண்டியதை செய்ய வேண்டும் என்று நினைத்தார்.

தமிழகத்தில் 3-வது முதல்வராக பதவி ஏற்று 10 ஆண்டுகள் பதவியில் இருந்து சாதனை படைத்தவர். காமராஜர் 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி தனது 72 வது வயதில் சென்னையில் காலமானார்.

காமராஜர் வாழ்க்கை வரலாறு

காமராஜர் பெயர் வர காரணம்:

இவருடைய குலத் தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் இவருக்கு சூட்டினார்கள். தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், அவரை “ராசா” என்றே அழைத்து வந்தார். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராசு’ என்று ஆனது.

காமராஜரின் சிறப்பு பெயர்கள் | காமராஜரின் வேறு பெயர்கள்:

  • கர்ம வீரர்
  • படிக்காத மேதை
  • பெருந்தலைவர்
  • தென்னாட்டு காந்தி
  • கல்விக்கண் திறந்தவர்
  • அரசரை உருவாக்குபவர்
  • கருப்பு காந்தி
  • கல்வியின் தந்தை

காமராஜர் பற்றிய 2 நிமிட பேச்சு

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்

 

Advertisement