Meenakshi Amman Other Names in Tamil
பொதுவாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூமியில் நம்முடைய ஊரினை தவிர இன்னும் எண்ணற்ற ஊர்கள் உள்ளது. அந்த வகையில் பார்த்தால் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. அத்தகைய சிறப்புகள் என்பது கோவில், கடற்கரை, பூங்கா என இதுபோன்றவைகளாக தான் இருக்கிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் மதுரை என்று கூறியவுடன் முதலில் நமக்கு தோன்றுவது என்னவோ மதுரை மீனாட்சி அம்மன் தான். அந்த வகையில் மீனாட்சி அம்மன் கோவிலில் மொத்தம் 4 வாசல் படிகளும், கோவிலின் நடுவே குளத்தில் தங்கத்தால் ஆனா தங்கத்தாமரையும் உள்ளது. இதனின் சிறப்பு என்பது மதுரை மீனாட்சி அம்மன் சிலை மரகதக் கல்லால் ஆனது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது.
அதேபோல் 4 ஒன்பது அடுக்கு கோபுரங்களும் இதில் அமைந்துள்ளது. இவ்வாறு பல வகையான சிறப்புகளை கொண்டுள்ள மதுரை மீனாட்சி அம்மனின் வேறு பெயர்கள் என்ன என்பதை பற்றி தான் பார்க்கபயோகிறோம்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை பற்றி பலருக்கும் தெரியாத 20 சுவாரஸ்யமான உண்மைகள்..!
மதுரை மீனாட்சி அம்மன் வேறு பெயர்கள்:
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மீனாட்சி மற்றும் சிவன் என இருவரும் எழுந்தருளி கட்சி அளிக்கிறார்கள். இதில் முதலில் மீனாட்சியை வணங்கிய பிறகே சிவபெருமானை வழிபட வேண்டும்.
இந்த மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோவில் ஆனது 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இவ்வாறு அருள் பாளித்து கொண்டிருக்கும் மீனாட்சி அம்மனுக்கு மீனாட்சி என்பது மட்டும் இல்லாமல் வேறு பெயர்களும் இருக்கிறது. மேலும் ஈசனின் 64 திருவிளையாடல்களும் மதுரையிலேயே நடந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.
- தடாதகை
- சுந்தரவல்லி
- அங்கயற்கண்ணி
- கோமளவல்லி
- பாண்டியராசகுமாரி
- மாணிக்கவல்லி
- மரகதவல்லி
மேலே சொல்லப்பட்டுள்ள பெயர்கள் அனைத்தும் மீனாட்சி அம்மனுக்கு உரிய வேறு பெயர்கள் ஆகும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யாரால் கட்டப்பட்டது:
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கட்டியது ஒரு பாண்டிய மன்னன் ஆவார். அதாவது மதுரையை ஆண்ட ஜடாவர்மன் குலசேகர பாண்டியனின் காலத்தில் கி.பி. 1190 முதல் 1216 வரையிலான காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டது.
கடவுள்களின் வேறு பெயர்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் |
![]() |
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |