இந்தியாவில் அதிகமாக சூட்டப்பட்ட 10 பெயர்கள் என்னென்ன தெரியுமா.?

Advertisement

இந்தியாவில் அதிகம் சூட்டப்பட்ட 10 பெயர்கள்

ஒருவரை அழைப்பதற்கு, மற்றவரிடம் இருந்து வேறுபடுத்தி காட்டுவதற்கும் உதவியாக இருப்பது பெயர்கள் தான். அதனால் தான் பிறந்த குழந்தைகளுக்கு பெயரை சூட்டுகின்றனர். மேலும் பெயர் வைக்கும் விழாவானது பெரும் விமர்சையாக கொண்டப்படுகிறது.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான பெயர்களை தேடுகின்றனர், ஹீரோ மற்றும் ஹீரோயின் பெயர்கள், மாடர்ன் பெயர்கள், ராசி நட்சத்த்திரம் படி பெயர்கள் என்று பல முறைகளில் வைக்கின்றனர். அந்த வகையில் இந்தியாவில் அதிகமாக சூட்டப்பட்ட 10 பெயர்களை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

10 வது இடம்:

இந்தியாவில் அதிகமாக சூட்டப்பட்ட பெயர்களில் கீதா என்ற பெயரானது பத்தாவது இடத்தில் உள்ளது. இந்த பெயரினை 28 லட்சத்து 60 ஆயிரம் பேர்களுக்கு மேல் வைத்திருக்கிறார்கள். இந்த பெயரானது பெண்களுக்கு சூட்டப்படும் பெயர்களாக இருக்கிறது.

9 வது இடம்:

அடுத்து ராஜேஷ் என்ற பெயர் 9-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பெயரானது ஆண்களுக்கு வைக்கும் பெயர்களாக இருக்கிறது. இந்த ராஜேஷ் என்ற பெயரை 29 லட்சத்து 10 ஆயிரம் பேர் வைத்திருக்கிறார்கள்.

8 வது இடம்:

8-வது இடம் பிடித்திருக்கும் பெயர் சுனில், இந்த பெயர் ஆண்களுக்கு சூட்டப்படும் பெயர்களாக உள்ளது. 30 லட்சத்திற்கும் அதிகமாக இந்தியாவில் சுனில் என்னும் பெயர் வைத்து இருக்கின்றார்கள்.

ரு ரே ரோ தா என தொடங்கும் தமிழ் பெயர்கள்

7 வது இடம்:

சஞ்சய் என்ற பெயரை இந்தியாவில் அதிகமாக வைக்கப்பட்ட பெயர்களாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த பெயரினை 31 லட்சத்து 81 ஆயிரம் பேர் வைத்திருக்கிறார்களாம்.

6 வது இடம்:

சந்தோஷ் என்ற 6 வது இடத்தில் உள்ளது. இந்த பெயரினை 34 லட்சம் பேருக்கு வைத்திருக்கிறார்கள். இந்த பெயர் ஆண் குழந்தைக்கு வைக்கும் பெயர்களாக உள்ளது.

5 வது இடம்:

 most used baby names in india in tamil

5-வது இடத்தில் இருக்கும் பெயர் அனிதா, இந்த பெயரை பெண் குழந்தைகளுக்கு சூட்டும் பெயர்களாக உள்ளது. இதனை 35 லட்சம் பெயர் வைத்திருக்கிறார்கள்.

4 வது இடம்:

4-வது இடத்தில் இருப்பது ஸ்ரீ, இந்த பெயரானது 37 லட்சம் பேருக்கு சூட்டப்பட்டுள்ளது. இந்த பெயரை ஆண்களுக்கும் வைப்பார்கள், பெண்களுக்கு வைப்பார்கள். இதனை முழு பெயராகவும் வைப்பார்கள், இல்லையென்றால் பெயரின் கடைசியிலோ அல்லது முதலிலோ வைப்பார்கள்.

3 வது இடம்:

இந்தியாவில் அதிகமாக சூட்டப்பட்ட பெயர்களில் சுனிதா என்ற பெயரை இடம் பெற்றுள்ளது, அதுமட்டுமில்லாமல் இந்த பெயர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இதனை 40 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு சூட்டப்பட்டுள்ளது.

சங்க இலக்கிய ஆண் குழந்தை பெயர்கள்

2 வது இடம்:

முகமத் என்ற பெயர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது, இந்த பெயரினை 42 லட்சத்து 30 ஆயிரம்  பேர்களுக்கு சூட்டப்பட்டுள்ளது. இந்த பெயர் இஸ்லாமிய குழந்தைகளுக்கு வைக்கும் பெயர்களாக இருக்கிறது.

1 வது இடம்:

இந்தியாவில் அதிகமாக சூட்டப்பட்ட பெயராகவும், முதல் இடத்தில் இருக்கும் பெயராக இருப்பது ராம்.  இந்த பெயரானது 56 லட்சத்து 48 ஆயிரம் பேர்களுக்கும் அதிகமாக ராம் என்னும் பெயர் சூட்டப்பட்டு இருக்கின்றது.  இதனை ஆண் குழந்தைகளுக்கு சூடுவார்கள்.

இதுபோன்று பெயர்கள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள்
Advertisement