தமிழ் பட்டப்பெயர்கள் | Nicknames in Tamil

Nicknames in Tamil

நிக் நேம்ஸ் தமிழில் | Nicknames in Tamil

வணக்கம் நண்பர்களே.. பொதுவாக புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் நிகழ்வினை அனைவருமே நடத்துவார்கள். இருப்பினும் அந்த குழந்தை வளர வளர அந்த குழந்தையின் உறவினர்களும், நண்பர்களுக்கும், சுற்றி இருப்பவர்களும் புதிது புதிதாக ஏதாவது ஒரு நிக் நேம் என்று சொல்லக்கூடிய பட்டப்பெயரை வைப்பது வழக்கமாகவும் இருந்து வருகிறது. இந்த உலகத்தில் இருக்கின்ற அனைவருக்குமே ஏதாவது ஒரு பட்டப்பெயர் கண்டிப்பாக இருக்கும். சிலர் அந்த பட்டப்பெயரினை செல்லமாகவும், பிரியமாகவும் சொல்லி அழைப்பார்கள். சிலர் கிண்டலுக்காகவும், கேலி செய்வதாகவும் பட்டப்பெயர்கள் வைத்து அழைப்பார்கள். சரி இந்த பதில் உங்கள் பிரியமான உறவுகள் அனைவருக்கும் வைக்கக்கூடிய சிலவகையான நிக் நேம்ஸ்னை இங்கு காண்போம் வாங்க..

தமிழ் பட்டப்பெயர்கள் | Funny Nicknames in Tamil

எப்போதும் சாப்பிட்டு கொண்டே இருப்பவர்களுக்கு சோத்துமூட்ட 
உயரமாக இருப்பவர்களுக்கு தென்னைமரம்
ஒரு நாளில் பாதிப்பொழுதில் போதையிலேயே இருப்பவர்களுக்கு தண்ணிவண்டி
குடிமகன்
அனைத்து வேலைகளையும் மெதுவாக செய்பவர்களுக்கு வாத்து
வீட்டில் & மற்றவர்களிடம் போட்டு கொடுப்பவர்களுக்கு 7 1/2
முன்கோபக்காரர்களுக்கு கடுகுடப்பா
ஒல்லியாக இருப்பவர்களுக்கு ஒல்லிக்குச்சி
ஓமக்குச்சி
அனைத்து விஷயங்களிலும் பில்டப் போடுபவர்களுக்கு சூனா பானா‌‌
ஜால்ரா அடிப்பவர்களுக்கு பக்கவாத்தியம்
குண்டாக இருப்பவர்களுக்கு பூரி செட்டு
எதுக்கெடுத்தாலும் பொங்குபவர்களுக்கு சுனாமி
எந்நேரமும் அரக்கப் பரக்கத் செய்பவர்களுக்கு சுடுதண்ணி
எப்பொழுதே முகத்தை சிடுசிடுவென வைத்துக்கொள்பவர்களுக்கு சிடுமூஞ்சி
எதுக்கெடுத்தலும் சந்தேகம் படுபவர்களுக்கு சந்தேகப்பேரொளி
தலையில் வழுக்கை விழுந்தவர்களுக்கு சறுக்குமரம் / வழுக்கை தலையன் / சொட்டை தலையன் 
அவசரப்பட்டு அனைத்து விஷயத்திலும் வாயை நுழைபவர்களுக்கு முந்திரி
ஒவ்வொரு நேரத்துக்கு தகுந்தது போல் தன்னை மாற்றிக்கொள்பவர்களுக்கு அந்நியன்
எப்பொழுதுமே கருத்து சொல்லிக்கொண்டே இருப்பவர்களுக்கு கருத்து கந்தசாமி
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil