நியூமராலஜி படி பெயர் வைப்பது எப்படி?
Numerology Calculator in Tamil:- எண்கணித பெயரியல் என்பது பெயரை ஆங்கிலத்தில் எழுத எண்கணித ஜோதிடத்தில் (Numerology) பயன்படுத்துவதாகும். இது ஆங்கில மொழியின் எழுத்துருக்களை மட்டும் அடிப்படையாக கொண்டது. எண் கணிதம் எந்த வகையில் நம் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை தரும் அல்லது நம் வாழ்க்கையை பாதிக்கும். நாம் பிறந்த தேதியின் விதி எண் வைத்து நாம் எந்த எண்ணில் பெயர் வைக்க வேண்டும். பொதுவாக ஜோதிடத்தை நம்புபவர்கள் எண் கணிதத்தால் வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடைய முடியும் என்கின்ற நம்பிக்கை இன்று வரை இருக்கின்றது. அதன் காரணமாகவே பலரும் நியூமராலஜி படி பெயர் வைக்க வேண்டும் என்று அதிகம் ஆர்வமாக இருக்கின்றன. எனவே நாம் பிறந்த தேதியின் விதி எண் வைத்து நாம் எந்த எண்ணில் பெயர் வைக்க வேண்டும். எண் கணிதத்தால் வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடைய முடியும் என்பதை இப்பதிவில் படித்தறியலாம் வாங்க.
நியூமராலஜி கால்குலேட்டர் தமிழ் | Numerology Calculator in Tamil
நியூமராலஜி படி பெயர் வைப்பது எப்படி?
- ஒருவருடைய பிறந்த தேதியை கூட்டினால் வருவது உடல் எண் ஆகும்
- ஒருவருடைய பிறந்த தேதி, மாதம், வருடம் கூட்டினால் வருவது உயிர் எண் ஆகும்
உதாரணம்:
ஒருவர் பிறந்த தேதி 23.05.1975 என்று வைத்துக்கொள்வோம், ஒருவருடைய பிறந்த தேதியை கூட்டினால் வருவது உடல் எண் ஆகும்.
2+3= 5 இவரது உடல் எண் 5
ஒருவருடைய பிறந்த தேதி, மாதம், வருடம் கூட்டினால் வருவது உயிர் எண் ஆகும்
2+3+5+1+9+7+5= 32, 3+2= இவரது உயிர் எண் 5 ம் எண் ஆகும்
ஒருவர் ஜாதகத்தில் யோகம் குறைந்து இருந்தாலும், உடல் எண், உயிர் எண்ணுக்கு பொருத்தமான பெயர் அமைத்துக்கொண்டால் கெடு பலன்கள் ஓரளவு குறையும். சரி வாங்க நியூமராலஜி படி பெயர் வைப்பது எப்படி என்று பார்ப்போம்.
உங்கள் பெயரின் விதி எண் எப்படி கண்டுபிடிப்பது?
தங்கள் விதி எண்ணைக் கணக்கிட உங்கள் பெயரை பயன்படுத்த வேண்டும்.
உங்கள் பெயருடன் தொடர்புடைய எழுத்துக்களை அதன் எண்களை வைத்து கூட்டுங்கள்.
நியூமராலஜி எண் உங்கள் வாழ்க்கையை எப்படி வைக்கும் தெரியுமா? |
ஆங்கில எழுத்துக்களுக்கான எண்கள் – Numerology Calculator in Tamil
எண் கணிதம் பெயர் வைக்க – Numerology Calculator in Tamil – நியூமராலஜி கால்குலேட்டர் | |
A, I, J, Q, Y | 1 |
B, K, R | 2 |
C, G, L, S | 3 |
D, M, T | 4 |
E, H, N, X | 5 |
U, V, W | 6 |
O, Z | 7 |
F, P | 8 |
உதாரணமாக:
கமலம் ஆங்கில எழுத்துக்களின்படி KAMALAM பெயரின் கூட்டு எண் – 7
2+1+4+1+3+1+4 = 16 = 1+6 = 7
ஆங்கிலப் பெயர் வழியிலான எண் – 7
இந்த எண்களை கூட்டி இறுதியில் ஒற்றைப்படை எண் வரும் வரை கூட்டுங்கள்.
உதாரணமாக: 16= 1+6 = 7.
கமலம் பெயரின் விதி எண் 7 ஆகும்.
உங்கள் வாழ்க்கை எண்ணினை கண்டுபிடிப்பது எப்படி?
தங்களுடைய பிறந்த தேதியை பயன்படுத்தி தங்களுடைய வாழ்க்கை எண்கள் கணக்கிடப்படுகிறது. உங்கள் விதி எண்ணை போலவே வாழ்க்கை எண்ணையும் கணக்கிட வேண்டும்.
மார்ச் 24, 1950. (03/24/1950) என்பது பிறந்த தேதி என்று வைத்து கொள்வோம்.
இப்பொழுது தங்களுடைய பிறந்த தேதி எல்லாவற்றையும் கூட்ட வேண்டும்.
உதாரணத்திற்கு:
0+3+2+4+1+9+5+0 = 24
வந்த விடை எண்களை ஒற்றைப்படை எண்களாக மாறும் வரை கூட்ட வேண்டும்.
உதாரணத்திற்கு: 24= 2+4=6
இந்த எண் தான் வாழ்க்கை எண் ஆகும். இந்த முறையில் தான் தங்களுடைய வாழ்க்கை எண்ணை கண்டுபிடிக்க வேண்டும்.
விதி எண்களுக்கான பலன் – Numerology Calculator in Tamil
எண் ஒன்று:
எண் கணிதப்படி, எண் ஒன்று சுதந்திரத்தைக் கூறுகிறது.
எண் ஒன்று தெளிவான எண்ணங்களுடன் குறிக்கோள்கள் கொண்ட எண்ணாகும். எண் ஒன்றை கூட்டு எண்ணாக கொண்டவர்கள் அவர்களுடைய குறிக்கோள்களில் தெளிவாக இருப்பார்கள். ஒன்றாம் எண்காரர்கள் எதையாவது ஒரு விஷயத்தை செய்ய வேண்டுமென்று முடிவெடுத்து விட்டால் அவர்களை யாராலும் தடுக்க முடியாது. இந்த எண்காரர்கள் இவர்களுடைய ஆற்றலை ஒருமுகப்படுத்தினால் இவர்களுடைய மறைமுகத் திறமைகள் வெளிப்பட்டு பெரிய தலைவர்களாக ஆகும் வாய்ப்பு உள்ளது. ஆனால் பொதுவாக சுய பச்சாதாபத்தை வெளிப்படுத்த மாட்டார்கள்.
எண் இரண்டு
இரண்டாம் எண்காரர்கள் பொதுவாக கருணை மிக்க இயல்பை கொண்டவர்கள்.
ஒன்றாம் எண்காரர்களின் பலவீனமான விஷயங்களில் இரண்டாம் எண்காரர்கள் தங்கள் பலத்தை வெளிப்படுத்துவார்கள். அவர்களுக்கு மற்றவர்களுடன் எப்படி சேர்ந்து வேலை பார்க்க வேண்டுமென்றும், பிரச்சனைகளுக்கு எப்படி தீர்வு காண வேண்டுமென்றும் தெரிந்தவர்கள். இரண்டாம் எண்காரர்கள் பொதுவாக ஒரு பிரச்சனையின் இரண்டு பக்கத்தையும் பார்ப்பார்கள். ஆனால் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் முடிவெடுக்கத் தெரியாதவர்களும் அல்ல, சிறப்பாக முடிவெடுப்பவர்களும் அல்ல.
எண் மூன்று
மூன்றாம் எண்காரர்கள் சமூகத்தில் இயல்பாக பழகக்கூடியவர்கள்.
இவர்களுடைய உற்சாகமான நகைச்சுவைத்திறனும் சமூகத்தில் பழகும் விதமும், இவர்களை வாழ்க்கையை கொண்டாடுபவர்களாக காட்டும். இவர்கள் கற்பனைத்திறன் மிக்கவர்கள். எந்தவொரு துறையிலும் கலைநயமாக மாற்றி விடுவார்கள். இவர்களை சுற்றியுள்ள மனிதர்களிடமும் உலகத்திடமும் நேர்மறை ஆற்றலை ஈர்க்கக் கூடியவர்கள். இது சில சமயங்களில் அவர்களுடைய நோக்கங்களை திசைத் திருப்பிவிடும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |