Pongal Pandigai Veru Peyargal in Tamil
தென்னிந்தியாவில் மூன்று முதல் நான்கு நாட்களுக்கு கொண்டப்படும் பொங்கல் திருநாளுக்கு சில வேறுபெயர்களும் உள்ளது. அந்த வேறு பெயர்களை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம். இந்த பொங்கல் பண்டிகைக்கு இந்த வேறு பெயர் வந்ததற்கு சில காரணமும் உள்ளது. ஏன் என்றால் நாடு முழுவதும் வெவ்வேறு மாநிலங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதன் காரணமாகவே இப்படிக்கைக்கு சில வேறு பெயர்களும் உண்டு.
நாடு முழுவதும் இந்த பண்டிகை கொண்டாடப்படுவதன் முக்கியத்தும் எதுவென்றால் உழைக்கும் மக்களின் தெய்வமான சூரியனுக்கும் ஏனைய உயிர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இப்பொங்கல் திருவிழாவானது தை மாதம் கொண்டாடப்பட்டு வருவதோடு பண்டிகைக்கு முதல் நாளே புதிய ஆடை, புதிய பானை வாங்கி பண்டிகையை கொண்டாட தயாராகுவர். சரி இந்த பொங்கல் பண்டிகை வேறு பெயர்கள் சிலவற்றை இங்கு நாம் காணலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பொங்கல் பண்டிகை வேறு பெயர்கள்
- தமிழகத்தில் அறுவடை திருநாள், உழவர் திருநாள், சூரிய பொங்கல் என்று லைப்போம்.
- ஆந்திர, கர்நாடகம், மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம் மற்றும் – மகர சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது.
- பஞ்சாப் – உலோகிரி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
- குஜராத், ராஜஸ்தான் – உத்தராயன் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பொங்கல் பண்டிகை கொண்டாடும் முறை
மகர சங்கராந்தி:
மகரம் என்பது தமிழ் மாதங்களின் தை மாதத்தை குறிக்கும். தை மாதத்தில் மகர ராசியில் சூரியன் சஞ்சரிக்கும். தை மாதத்தில் முதல் நாள் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகும் போது, தை மாத முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதையே மகர சங்கராந்தி என்ற பெயரில் வேறு மாநிலங்களிலும் கொண்டாடுகிறார்கள்.
உத்தராயன்:
ஆந்திர, கர்நாடகம், மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம் மாநிலங்களில் மகர சாந்தி கொண்டாடப்படுகிறது. மகர சங்கராந்தி மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்படுகிறது. குளிர்காலத்தில் அறுவடை செய்யப்படும் கரும்பிலிருந்து எடுக்கப்படும் புதிய வெல்லத்தைப் பயன்படுத்தி பல்வேறு இனிப்புகளை செய்து கொண்டாடுவார்கள்.
குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பட்டம் விடும் திருவிழா உத்தராயன் ஒரு அங்கமாக இருக்கிறது. குழந்தைகள் முதல், பட்டம் விடுவதில் தேர்ச்சி பெற்ற வல்லுனர்கள் வரை பலரும் இந்த திருவிழாவில் கலந்து கொள்வார்கள். பல அமைப்புகள் பட்டம் விடும் போட்டியயை நடத்தும்.
உலோகிரி:
கோதுமை அதிகம் விளையும் மாநிலமான பஞ்சாபிலும் பொங்கல் பண்டிகை ‘லோஹ்ரி’ என்ற பெயரில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. லோஹ்ரி என்பது அறுவடைத் திருவிழாவாகக் காணப்படுகிறது. பஞ்சாப் மக்கள் நெருப்பை தெய்வமாக வணங்கும் பண்டிகை இது. பொங்கல் முந்தைய நாள் இரவன்று, நெருப்பு மூட்டி, குடும்பமும் நண்பர்களும் ஒன்றிணைந்து கொண்டாடுவார்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇
உழவு என்ற வார்த்தையை குறிக்கும் வேறு பெயர்கள் என்னென்ன தெரியுமா..?
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |