Aceclofenac Tablet Uses in Tamil
பொதுவாக நமது உடல் நலத்தில் ஏதாவது ஒரு குறைபாடு என்றால் மருத்துவரை அணுகி மருந்துகளை வாங்கி உட்க்கொள்வது நல்லது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் அனைவருமே மெடிக்கல் கடைக்கு சென்று மருந்துகளை வாங்கி உட்கொள்வதை பழக்கமாக வைத்திருக்கின்றோம். அப்படி மருத்துவரை அணுகாமல் நாமே மருந்துவாங்கி உட்கொள்வது தவறு. ஆனால் மிகவும் தவிர்க்கமுடியாத சூழலில் மட்டும் இப்படி மருத்துவரை அணுகாமல் மருந்துகளை வாங்கி உட்கொள்கிறீர்கள் என்றால், அப்படி நாம் உட்கொள்ளும் மருந்து எந்தெந்த நோய்களுக்கு தீர்வாக அமையும் என்பதை பற்றிய முழுவிவரங்களையும் தெரிந்து கொண்டு பிறகு உட்கொள்ளுங்கள். அந்தவகையில் இன்றைய பதிவில் Aceclofenac மாத்திரை பற்றிய தகவலை பார்க்க இருக்கின்றோம். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து இந்த Aceclofenac மாத்திரையானது எந்தெந்த நோய்களுக்கு தீர்வாக அமையும் என்பதை எல்லாம் அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
ரானிடின் 150 மிகி மாத்திரை அதிக அளவு பயன்படுத்துபவரா நீங்க அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க
Aceclofenac Tablet Uses in Tamil:
இந்த Aceclofenac மாத்திரையானது ஒரு ஸ்டிராய்டு எதிர்ப்பு அழற்சி மருந்து (NSAIDs), முதுமை மூட்டழற்சி, கீல்வாத மூட்டுவலி போன்ற வலி மிக்க முடக்குவாத நிலைகள் உள்ள மக்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
அதாவது இந்த மாத்திரையானது காயம் அல்லது சேதம், வலி, வீக்கம் மற்றும் வீக்கம் ஏற்படுத்தும் ப்ரோஸ்டாக்ளாடின்கள் இரசாயனத்தை உருவாக்கக்கூடிய சுழற்சி-ஆக்ஸினேஸ் (COX) நொதிகளின் விளைவை தடுப்பதன் மூலம் வேலை புரிகிறது.
இது பொதுவாக வலியை மற்றும் அழற்சியைக் குறைக்க உதவுகிறது. இந்த மருந்தில் பலவகையான மி.லி உள்ளதால் இதனை மருத்துவர் அளித்த அளவைவிட அதிகமாகவோ குறைவாகவோ எடுத்து கொள்ளாதீர்கள். அப்படி எடுத்து கொண்டால் பல பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.
பான்டோப்-டி மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதனை தெரிஞ்சிக்கோங்க
Aceclofenac Tablet Side Effects in Tamil:
Aceclofenac மாத்திரையினை பயன்படுத்துவதால்,
- வயிற்று வலி
- வயிற்றுப் போக்கு
- மூச்சு திணறல்
- செரிமானமின்மை
- குமட்டல்
- தலைவலி
- தலைச்சுற்று
- மலச்சிக்கல்
- தோல் தடிப்பு
- சோர்வு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.
Zinemac 150 மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
முன்னெச்சரிக்கை:
இந்த Aceclofenac மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
நீங்கள் கர்ப்பமாகவோ மற்றும் தாய்பால் அளிக்கின்ற தாய் என்றாலும் இந்த மருந்தினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்று கொள்ளுங்கள்.
உங்களுக்கு இதயக் குறைபாடு அல்லது சிறுநீரக அல்லது கல்லீரல் செயல்பாட்டு குறைபாடு இருந்தால் இந்த மருந்தினை பயன்படுத்த கூடாது.
மேலும் உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தம் உறைதல் பிரச்சினைகள் இருந்தால் இந்த மருந்தினை எடுத்து கொள்ள கூடாது.
குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.
சிப்கால் 500 மி.கி மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை தெரிஞ்சிக்கோங்க
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |