ஆக்டன் OR மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகளை தெரிந்து கொள்ளுங்கள்..!

Advertisement

Acton OR Tablet in Tamil

வணக்கம் வாசகர்களே..! பொதுவாக நாம் வாழும் இந்த காலகட்டம் மருந்து மாத்திரைகளில் தான் இயங்கி கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நம்மில் பலரும் மருந்தை தான் உணவாக உட்கொள்கிறார்கள். சரி நமக்கு ஏதாவது உடல்நல கோளாறுகள் ஏற்பட்டால் நாம் முதலில் செல்வது மருந்தகத்திற்கு தான். மருந்தகத்திற்கு சென்று நமக்கு என்ன செய்கிறது என்று கூறி மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால் நமக்கு உடலில் ஏதும் பாதிப்பு ஏற்பட்டால் நாம் முதலில் மருத்துவரிடம் தான் செல்ல வேண்டும்.

அவர் எழுதி தரும் மாத்திரைகளை தான் வாங்கி சாப்பிட வேண்டும். அதுபோல மருத்துவர் எழுதி தரும் மாத்திரையாக இருந்தாலும் அந்த மாத்திரை எதற்காக சாப்பிட வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் தினமும் இந்த பதிவில் மாத்திரை பற்றிய விவரங்களை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று ஆக்டன் OR மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகளை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாக பயன்படுத்த வேண்டாம்..

ஆக்டன் OR மாத்திரையின் பயன்கள்:

ஆக்டன் OR மாத்திரையின் பயன்கள்

ஆக்டன்-ஓஆர் மாத்திரை (Acton-OR Tablet) தலைவலி, மூட்டுவலி, மாதவிடாய் வலி மற்றும் சளி மற்றும் காய்ச்சலால் ஏற்படும் வலி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெற பயன்படும் பொதுவான வலி நிவாரணி ஆகும். நமக்கு வலி இருப்பதாகச் சொல்லும் மூளையில் உள்ள சில இரசாயனங்களைத் தடுப்பதன் மூலம் இது செயல்படுகிறது.

மேலும் இந்த ஆக்டன் OR மாத்திரை தலைவலி, உடல் வலி, மாதவிடாய் வலி, பல்வலி, வீக்கம் மற்றும் சளி போன்ற பல நிலைகளுக்கு சிகிச்சையளிக்கவும் இது பயன்படுத்தப்படலாம்.

ஆக்டன் OR மாத்திரையின் பக்கவிளைவுகள்:

மேலும் இந்த மாத்திரை எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என்று சொல்லப்படுகிறது. மேலும் ஏதும் பக்க விளைவுகள் வந்தால் உங்கள் உடல் மருந்துக்கு ஏற்றவாறு மறைந்துவிடும். இல்லையென்றால் நீங்கள் மருத்துவரை அணுகலாம்.

இபூபுரூஃபன் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

எப்படி பயன்படுத்துவது..? 

இந்த மருந்தை உங்கள் மருத்துவர் பரிந்துரைத்த அளவு மற்றும் கால அளவுகளில் எடுத்து கொள்ள வேண்டும். இந்த மாத்திரையை முழுவதுமாக விழுங்குங்கள். அதை மெல்லவோ, நசுக்கவோ அல்லது உடைக்கவோ வேண்டாம். ஆக்டன் ஆர் மாத்திரையை உணவுடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.

முன்னெச்சரிக்கை:

  1. கர்ப்பிணி பெண்கள்
  2. தாய்ப்பால் கொடுப்பவர்கள்
  3. மது அருந்துபவர்கள்
  4. புகை பிடிப்பவர்கள்
  5. வாகனம் ஓட்டுபவர்கள்
  6. கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள்

மேல்கூறியவர்கள் இந்த மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Fexocet 180 mg மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் | Fexocet Tablet Uses in Tamil

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement