அல்பேந்தசோல் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
Albendazole Tablet Uses in Tamil: பலரும் இன்று சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் உடலில் ஏராளமான நோய்களை சந்தித்து வருகின்றனர். வாழ்க்கை நடைமுறை மாறியதால் ஆரோக்கியமான உணவினை விட்டுவிட்டு உடல் நோய்க்காக மாத்திரை சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மாத்திரைகளையும் நாம் ஓரளவிற்கு தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்ற பழமொழிக்கேற்ப எதையும் அளவுக்கு மீறி சாப்பிட்டோம் என்றால் உடலில் நிறைய பின்விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.
நமது உடலில் ஏற்படக்கூடிய எந்த விதமான நோய்களுக்கும் நாம் எடுத்துக்கொள்ளும் மாத்திரையின் பயன்கள் மற்றும் அதன் பக்க விளைவுகளை கட்டாயம் எல்லோரும் தெரிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இந்த பதிவில் அல்பெண்டசோல் மாத்திரை பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகளை படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!
குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..
ஏவியான் 400 மாத்திரை பயன்பாடுகள் |
அல்பெண்டசோல் மாத்திரை பயன்படுத்துகிறது:
துப்புரவு நோய் தொற்று ஏற்பட்டவர்களுக்கு இந்த அல்பெண்டசோல் மாத்திரை வைத்து முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் இந்த மாத்திரையை நரம்பியல் ஆய்வுகள் மற்றும் நீரிழிவு சம்பந்தமான நோய்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது.
ஹைடடிட் நோயை குணப்படுத்தும்: அல்பெண்டசோல் 400 மிகி மாத்திரை நாய் நாடாப்புழு அல்லது லார்வா மூலம் ஏற்படும் ஈகைனோகோக்கோசிஸ் என்ற நோய்க்கு அல்லது ஹைடோடிட் நோய்க்கு சிகிச்சையளிக்க இந்த மாத்திரை மிகவும் பயன்படுகிறது.
என்டெரோபயாசிஸ் நோய் குணமாக: ஊசிப்புழு தொற்று நோய்க்கு சிகிச்சையளிக்க அல்பெண்டசோல் மாத்திரையை தாராளமாய் பயன்படுத்தி வரலாம்.
ஸ்ட்ரோங்கிலோடையாசிஸ் தொற்றுநோய் குணமாக: நூற்புழுவினால் ஏற்படும் நோய்த்தொற்று பிரச்சனைக்கு அல்பெண்டசோல் மாத்திரை பயன்படுத்தப்படலாம்.
அஸ்காரியாசிஸ் நோயை தடுத்து நிறுத்த: அல்பெண்டசோல் மாத்திரை உருண்டைப் புழுவினால் ஏற்படும் நோய்த்தொற்றை குணப்படுத்த உதவுகிறது.
ட்ரிசுரியாசிஸ் தொற்றுநோய் சரியாக: அல்பெண்டசோல் மாத்திரை சாட்டைப் புழுவினால் ஏற்படும் நோய்த்தொற்றுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படலாம்.
கியூட்னியஸ் லார்வா மைக்ரான்ஸ் தொற்று குணமாக: தோலில் கொக்கிப் புழுவினால் ஏற்படும் தொற்றுநோய்க்காக அல்பெண்டசோல் மாத்திரையை பயன்படுத்தலாம்.
யானைக்கால் நோய் குணமாக: பிளேரியல் புழுவினால் ஏற்படும் தொற்றுநோய்க்கான சிகிச்சையில் அல்பெண்டசோல் மாத்திரை பயன்படுத்தி வரலாம்.
ஜியர்டயாஸிஸ் தொற்று குணமாக: ஜியார்டியா தொற்றுநோய் ஒட்டுண்ணியால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய குடல் நோய்த்தொற்றின் சிகிச்சையில் அல்பெண்டசோல் மாத்திரை உபயோகிக்கலாம்.
Albendazole Tablet Uses in Tamil | எப்படி பயன்படுத்த வேண்டும்:
தினமும் 1 முதல் 2 தடவை உங்கள் மருத்துவ பரிந்துரையின்படி சரியான உணவு முறையோடு இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் அல்லது தங்கள் குழந்தைகளுக்கு மாத்திரை விழுங்கும் போது ஏதேனும் பிரச்சனை இருந்தால் மாத்திரையை கையால் நசுக்கி தண்ணீரில் கலந்து கொடுக்கவும்.
இந்த மாத்திரையை உட்கொள்ளும் சமயத்தில் திராட்சை பழத்தினை எடுத்துக்கொள்வதை தவிர்த்துக்கொள்ளவும். ஏனென்றால் திராட்சைப் பழம் இந்த மாத்திரையுடன் சேரும்போது உடம்பில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் உடலில் பெரும் ஆபத்துகள் வந்துவிட்டால் மருத்துவரை உடனே அணுகுவது சிறந்தது.
பக்க விளைவுகள்:
அல்பெண்டசோல் மாத்திரை எடுத்துக்கொள்ளும்போது குமட்டல், வாந்தி, வயிற்று வலி, தலைவலி அல்லது முடி கொட்டுதல் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றில் கூறியுள்ளதில் ஏதேனும் உங்களுக்கு பிரச்சனை ஏற்பட்டால் யோசிக்காமல் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது நல்லது.
இந்த பக்க விளைவுகள் மட்டுமல்லாமல் சொறி, அரிப்பு / வீக்கம் (குறிப்பாக முகம் / நாக்கு / தொண்டை), கடுமையான தலைச்சுற்றல், மூச்சுத்திணறல், ஒவ்வொமை பிரச்சனை, பார்வை குறைபாடு, கண்களில் மஞ்சள் நிறம் ஏற்படுதல், சிறுநீரக தொற்று மற்றும் இவற்றில் சொல்லாத பிற நோய்களையும் நீங்கள் சந்தித்தால் உடனே மருத்துவரை அணுகவும்.
டோலோ 650 பயன்பாடுகள் | Dolo 650 Uses in Tamil |
ஜின்கோவிட் மாத்திரை பயன்கள் | Zincovit Tablet Uses in Tamil |
முன்னெச்சரிக்கை:
அல்பெண்டசோல் மாத்திரையை எடுத்துக் கொள்வதற்கு முன், உங்களுக்கு ஒவ்வாமை பிரச்சனை இருந்தால் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம்உடனடியாக தெரிவிக்கவும்.
கல்லீரல் நோய், பிலியரி டிராக்டிக் பிரச்சனைகள் (அடைப்பு போன்றவை), இரத்த / எலும்பு மஜ்ஜை கோளாறுகள் உள்ளவர்கள் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளும் முன்பு மருத்துவரிடம் ஒருமுறை கேட்டுக்கொண்ட பிறகு எடுத்துக்கொள்ளவும்.
கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்கள் தேவைப்படும் போது மட்டுமே இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளவும். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மருத்துவரிடம் கேட்ட பிறகு மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Natural health tips in tamil |